பின்னேயசு
பின்னேயசு | |
---|---|
பின்னேயசு மோனோடான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | கணுக்காலிகள்
|
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
துணைவரிசை: | டெண்டிரோபிராங்கியேட்டா
|
பெருங்குடும்பம்: | பின்னேயிடே
|
குடும்பம்: | பின்னேயிடே
|
பேரினம்: | பின்னேயசு பேபரிசியசு, 1798
|
சிற்றினம் | |
|
பின்னேயசு (Penaeus) என்பது உப்பு நீரில் வளரும் இறால் வகைகளுள் ஓர் பேரினமாகும். இந்த பேரினத்தில் பெரும் புலி இறால் (பி. மோனோடான்) சிற்றினமும் உள்ளது. இது உலகளவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஓட்டுடைய காலிகளில் ஒன்றாகும். பெரெஸ் ஃபார்பான்ட் மற்றும் கென்ஸ்லி ஆகியோர் இந்த பேரினத்தின் கீழ் உள்ள சிற்றினங்களை உருவ வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டும், குறிப்பாக விலங்குகளின் பிறப்புறுப்பு பண்புகளைக் கொண்டும் பேரினத்தினை அமைத்தனர்[1]. ஆனால் இந்த திருத்தம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[2] இத்திருத்தத்தினைத் தொடர்ந்து, பின்னேசு பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் மறு ஒதுக்கீடு செய்து பின்னேயிடே குடும்பமாக அமைத்து அதன் கீழ் பார்பேண்டிபின்னேயசு, பென்னிரோபின்னேயசு, லிப்டோபின்னேசு, மார்சுபின்னேயசு பேரினங்கள் கொண்டுவரப்பட்டன.[1] கீழ்க்கண்ட அட்டவணையில் பல்வேறு சிற்றினங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பழைய அறிவியல் பெயர் | புதிய அறிவியல் பெயர் | பொதுவான பெயர் (கள்) |
---|---|---|
பி. அஸ்டெக்கசு | பர்பான்டெபீனியசு அஸ்டெக்கசு | வடக்கு பழுப்பு இறால் |
பி. பிரேசிலியன்சிசு | பர்பான்டெபீனியசு பிரேசிலியன்சிசு | சிவப்பு புள்ளிகள் இறால், புள்ளியிடப்பட்ட இளஞ்சிவப்பு இறால் |
பி. ப்ரெவிரோஸ்ட்ரிசு | பர்பான்டெபீனியசு ப்ரீவிரோசுட்ரிசு | படிக இறால், இளஞ்சிவப்பு இறால் |
பி. கலிபோர்னென்சிசு | பர்பான்டெபீனியசு கலிபோர்னென்சிசு | மஞ்சள் நிற இறால், பழுப்பு இறால் |
பி. சினென்சிசு | பெனெரோபென்னேயசு சினென்சிசு | சதைப்பற்றுள்ள இறால், சீன வெள்ளை இறால், ஓரியண்டல் இறால் |
பி. ஓரியண்டலிசு | ||
பி. டூரரம் | பெனெரோபென்னேயசு டூரரம் | வடக்கு இளஞ்சிவப்பு இறால் |
பி. எசுலெண்டசு | பின்னேயசு எசுலெண்டசு | பழுப்பு புலி இறால் |
பின்னேயசு கதோர் | பின்னேயசு கதோர் | |
பி. இண்டிகசு | பெனெரோபென்னேயசு இன்டிகசு | இந்திய இறால் |
பி. ஜபோனிகசு | மார்சுபீனியசு ஜபோனிகசு | குருமா இறால், குருமா இறால், ஜப்பானிய புலி இறால் |
பி. மெர்குயென்சிசு | பெனெரோபென்னேயசு மெர்குயென்சிசு | வாழை இறால், வாழை இறால் |
பி. மோனோடன் | பின்னேயசு மோனோடான் | மாபெரும் புலி இறால், கருப்பு புலி இறால் |
பி. நோட்டலிசு | பர்பான்டெபீனியசு நோட்டலிசு | தெற்கு இளஞ்சிவப்பு இறால் |
பி. ஆக்சிடெண்டலிசு | லிட்டோபீனியசு ஆக்சிடெண்டலிசு | மேற்கு வெள்ளை இறால் |
பி. பாலென்சிசு | பர்பான்டெபீனியசு பாலென்சிசு | சாவோ பாலோ இறால், கார்பாஸ் இறால் |
பி. பென்சிலட்டசு | பெனெரோபென்னேயசு பென்சிலட்டசு | இறால் இறக்கு |
பி. ஷ்மிட்டி | லிட்டோபீனியசு ஷ்மிட்டி | தெற்கு வெள்ளை இறால் |
பி. செமிசுல்கடசு | பின்னேயசு செமிசுல்கேடசு | பச்சை புலி இறால் |
பி. செடிபெரசு | லிட்டோபீனியசு செடிபெரசு | வடக்கு வெள்ளை இறால் |
பி. சிலாசி | பெனெரோபென்னேயசு சிலாசி | |
பி. இசுடைலிரோசுட்ரிசு | லிட்டோபீனியசு இசுடைலிரோசுட்ரிசு | மேற்கு நீல இறால், நீல இறால் |
பி. சப்டிலிசு | பர்பான்டெபீனியசு சப்டிலிசு | தெற்கு பழுப்பு இறால் |
பி. வன்னமீய் | லிட்டோபீனியசு வன்னமீய் | வைட்லெக் இறால், பசிபிக் வெள்ளை இறால், கிங் இறால் |
மேலும் சில சிற்றினங்கள் சில நேரங்களில் பின்னேயசு சிற்றினங்களாக அழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை மெலிசெர்டசு பேரினத்தின் கீழ் வருகின்றன:
தவறான பெயர் | சரியான பெயர் | பொதுப்பெயர் |
---|---|---|
பி. கேனாலிகுலேட்டசு | மெலிசெர்டசு கேனாலிகுலேட்டசு | சூனிய இறால், புலி இறால் |
பி. கெரத்துரசு[3] | மெலிசெர்டசு கெரத்துரசு | கேரமோட் இறால்,மூன்று வரிப்பள்ள இறால் |
பி. லேட்டிசல்கேட்டசு | மெலிசெர்டசு லேட்டிசல்கேட்டசு | மேற்கு இராச இறால் |
பி. லாங்கிசுடைலசு | மெலிசெர்டசு லாங்கிசுடைலசு | சிவப்பு புள்ளி இராச இறால், சிவப்பு புள்ளி இறால் |
பி. மார்ஜினேட்டசு | மெலிசெர்டசு மார்ஜினேட்டசு | அலோகா இறால் |
பி. பிலெபிஜசு | மெலிசெர்டசு பிலெபிஜசு | கிழக்கு இராச இறால் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Isabel Pérez Farfante; Brian Frederick Kensley (1997). Penaeoid and Sergestoid Shrimps and Prawns of the World: Keys and Diagnoses for the Families and Genera. Mémoires du Muséum national d'histoire naturelle. Vol. 175. Muséum national d'histoire naturelle. pp. 1–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782856535103.
- ↑ Patsy A. McLaughlin; Rafael Lemaitre; Frank D. Ferrari; Darryl L. Felder; R. T. Bauer (2008). "Letter to the Editor: A reply to T. W. Flegel" (PDF). Aquaculture 275: 370–373. doi:10.1016/j.aquaculture.2007.12.020. http://si-pddr.si.edu/jspui/bitstream/10088/7506/1/IZ_Lemaitre_et_al_2008_Letter_to_the_Editor.pdf. பார்த்த நாள்: 2020-10-12.
- ↑ Penaeus kerathurus , FAO.
வெளி இணைப்புகள்
தொகு- "Penaeidae Rafinesque, 1815" . ஒருங்கிணைந்த வகைபிரித்தல் தகவல் அமைப்பு .
- இனங்கள் பட்டியல் (in சப்பானிய மொழி)