பின்னேயஸ் மோனோடான்
பின்னேயஸ் மோனோடான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
துணைவரிசை: | டெண்டிரோபிரேன்ங்கியாட்டா
|
குடும்பம்: | பினேய்டே
|
பேரினம்: | |
இனம்: | பி. மோனோடான்
|
இருசொற் பெயரீடு | |
பின்னேயஸ் மோனோடான் பேபிரியசு, 1798 | |
வேறு பெயர்கள் [1] | |
|
பின்னேயசு மோனோடான் (Penaeus monodon) என்பது பொதுவாக அறியப்பட்ட கடல்நீரில் காணப்படும் இறால் ஆகும். இது பெரும் புலி இறால்,[1][2]ஆசியப் புலி இறால்,[3][4] கருப்பு புலி இறால்[5][6] எனப் பிற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உணவிற்காக வளர்க்கப்படும் கடல் வாழ் ஒடுடையகணுக்காலிகளில் இதுவும் ஒன்றாகும்.
வகைபாட்டியல்
தொகுபின்னேயஸ் மோனோடான் இறாலினை முதன்முதலில் 1798ஆம் ஆண்டு ஜோஹன் கிறிஸ்டியன் பேப்ரிசியஸ் விவரித்துக் கூறினார். இந்த பெயர் நீண்ட காலமாக 1949வரை கவனிக்கப்படாமல் இருந்தது. லிப்கே ஹோல்துயிஸ் இது எந்த இனத்தைச் சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்தினார்.[7] ஹோல்துயிஸ் பி. மோனோடான் என்பது பின்னேயஸ் பேரினத்தின் மாதிரி இனம் என்பதையும் விளக்கினார்.[7]
விளக்கம்
தொகுபெண் இறால் சுமார் 33 செமீ நீளம் வரை வளரலாம். ஆனால் பொதுவாக 25 முதல் 30 செமீ நீளமுள்ள இறால்கள் சுமார் 200 முதல் 320 கிராம் வரை எடையுடையதாக இருக்கும். ஆண் இறால்கள் சுமார் 20 முதல் 25 செமீ நீளமும் 100 முதல் 170 கிராம் வரை எடையுள்ளவை.[1] இதனுடைய தலையோடு மற்றும் அடிவயிற்றில் சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் அடுத்தடுத்து அமையப்பெற்றுள்ளன. உணர்கொம்பு்கள் சாம்பல் பழுப்பு நிறத்தில் உள்ளன. பழுப்பு நிறத்தில் பெரியோபாட்கள் மற்றும் ப்ளியோபாட்கள் சிவப்பு நிற விளிம்புடன் காணப்படும்.[8]
பரவல்
தொகுஇது இயற்கையாகவே இந்தோ-பசிபிக் பகுதியில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியிலிருந்து அரேபியத் தீபகற்பம் வரையிலும், தென்கிழக்கு ஆசியா, பசிபிக் கடல், மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளிலும் காணப்படும்.[9]
இது மெக்சிகோ வளைகுடாவின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆக்கிரமிப்பு இனமாக உள்ளது.[10]
ஆக்கிரமிப்பு இனம்
தொகுஆக்கிரமிப்பு இனமாக இது முதல் முதலாக அமெரிக்காவில் 1988 ஆம் நவம்பரில் 300 இறால் தென் கிழக்கு கரையில் கைப்பற்றப்பட்டது. இது மீன்வளரிடங்களிலிருந்து வெளியேறி நிகழ்ந்த தற்செயலான நிகழ்வாகும். இந்த இனங்கள் தற்பொழுது டெக்சாசிலிருந்து வடக்கு கரோலினா பகுதிவரை பிடிக்கப்பட்டது. பி. மோனோடான் ஆக்கிரமிப்பு இனமாகப் பல ஆண்டுகளாக இருந்தபோதிலும் பெரிய கூட்டமாக நிலைநிறுத்தவில்லை.[11] எனினும், உலகின் மற்ற பகுதிகளில் தப்பிச் சென்ற பி. மோனோடான் பெருங்கூட்டமாக ஆப்பிரிக்கா, பிரேசில், கரீபியன் பகுதிகளில் வாழ்கின்றது.[12][13]
வாழ்விடம்
தொகுபி மோனோடான் பல்வேறு வாழிடங்களில் வளரும் தன்மையுடையது.[14] இவை முக்கியமாகத் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.[14] இளம் உயிரிகள் பொதுவாக மணற்பாங்கான கழிமுகங்கள் மற்றும் அலையாத்திக் காடுகளில் காணப்படுகின்றன. முதிர்வடைந்த இறால்கள் ஆழமான கடல் பகுதிக்குச் செல்கின்றன (0 - 110 மீட்டர்). அங்கு இவை சேறு அல்லது பாறை நிறைந்த அடிப்பகுதிகளில் வாழ்கின்றன.[15] பகல் நேரங்களில் பாறை இடுக்குகளில் மறைந்து வாழும் பி. மோனோடான் இரவில் வாழிடங்களிலிருந்து வெளி வந்து இரை தேடும்.[16] 'பி. மோனோடான் பொதுவாக மக்கும் கழிவுகள், பல்சுனைப்புழுக்கள், மெல்லுடலிகள், மற்றும் சிறிய ஓடுடைய கணுக்காலிகளை இரையாக உண்ணுகின்றது.[16][17] இரவில் இணைசேரும் இந்த இறால், சுமார் 800,000 முட்டைகள் வரை இடும்.[14]
மீன்வளர்ப்பு
தொகுபி. மோனோடான் மிகப் பரவலாக வளர்க்கப்படும் இறால் இனங்களில் லிட்டோபின்னேயஸ் வனாமிக்கு அடுத்து உலகில் இரண்டாவது இடம் பெறுகிறது. 2009ஆம் ஆண்டில் 770,000 டன் உற்பத்திச் செய்யப்பட்டது. இது மொத்த மதிப்பில் அமெரிக்க டாலர் மதிப்பில் $3,650,000,000 ஆகும்.[1] இதில் சுமார் 50 சதவிகித இறால்கள் வளர்ப்பு முறையில் பெறப்பட்டதாகும்.[18]
இந்த இறால் உவர்நீர் உப்புத்தன்மையின் மாறுபாடுகளைத் தாங்கி மிகவும் விரைவாக வளர்வதால் மீன் வளர்ப்பில் பிரபலமாக உள்ளது.[11] எனினும், இவை பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று நோய்களால் பாதிக்கக் கூடியவையாக உள்ளன.[19] நோய்களில் முக்கியமானவை, உலகம் முழுவதும் பெரும் பாதிப்பினைத் தோற்றுவித்த வெள்ளை புள்ளி நோய் மற்றும் மஞ்சள் தலை நோய் ஆகும். இந்நோய் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தினை இறால் தொழிலில் ஏற்படுத்தியது.[20] பி. மேனோடான் பிற ஓட்டுகணுக்காலிகளிடமிருந்தும் நோய் தாக்கத்திற்கு உள்ளானது என்பது, தாய்லாந்தில் ஆஸ்திரேலிய சிவப்பு நகம் கடல் நண்டிலிருந்து (செராக்சு குஆட்ரிகேரினாட்டசு), வந்த மஞ்சள் தலை நோய் மூலம் அறியப்படுகிறது. .[21]
பி. மோனோடன் மேற்கு ஆப்பிரிக்கா, ஹவாய், டஹிடி மற்றும் இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது.[12] பி. மோனோடோன் வளர்க்கப்படும் நீரின் வெப்பநிலை 28°C முதல் 33°C வரை இருக்கும் நீரில் நன்றாக வளர்கிறது. பின்னேயேசின் இனத்தின் சிறப்பியல்பானது வெப்பநிலை, உப்புத்தன்மை ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கி வளரக்கூடியது. இருப்பினும் இந்த இறாலுக்கு உகந்த உப்புத்தன்மை 15 முதல் 25 பிபிடி (ஆயிரத்தில் பகுதி) ஆகும்.[22] பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால்களுக்கு உலர்ந்த கூட்டு உணவு வழங்கப்படுகிறது.[17] கூட்டு உணவுடன் மற்றும் புதிய உணவினையும் கலந்து வழங்கும்போது பி. மோனோடோனின் இனப்பெருக்கச் செயல்திறன் கூடியது ஆராய்ச்சி மூலம் அறியப்படுகிறது.
நிலையான நுகர்வு
தொகு2010 ஆம் ஆண்டில், கிரீன்பீஸ் அதன் கடல் உணவு சிவப்பு பட்டியலில் ("உலகெங்கிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொதுவாக விற்கப்படும் மீன்களின் பட்டியல், மற்றும் அவை நீடித்த மீன்வளத்திலிருந்து பெறப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளன") பினேயஸ் மோனோடோனைச் சேர்த்தது. கிரீன்பீஸ் வழங்கிய காரணங்கள்; "பல நாடுகளில் சதுப்புநிலங்களின் பரந்த பகுதிகளை அழித்தல், பண்ணைகளுக்காக வனப்பகுதிகளிலிருந்து இளம் இறால்களை அதிகமாக மீன்பிடித்தல் மற்றும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள்".[23]
அடிப்படை ஆராய்ச்சி
தொகுடி.என்.ஏ பழுதுபார்க்கும் செயல்முறைகள் குறித்தும், இது தொற்றுநோய்களுக்கு எதிராக ஓடுடைய கணுக்காலிகளுக்குப் வழங்கும் பாதுகாப்பினை புரிந்து கொள்ளும் முயற்சியில், பி. மோனோடானில் அடிப்படை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.[24] டி.என்.ஏ இரட்டை-இழை இடைவெளிகளைச் சரிசெய்வது, துல்லியமான ஹோமோலோகஸ் மறு அமைவு பழுதுபார்த்தல் துல்லியமான செயல்படுத்துவது கண்டறியப்பட்டது. மைக்ரோஹோமோலஜி-முடிவு இணைதல் இடைவெளிகளைச் சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டது.
மேலும் காண்க
தொகு- Macrobrachium rosenbergii, the giant freshwater prawn
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Species Fact Sheets: Penaeus monodon (Fabricius, 1798)". FAO Species Identification and Data Programme (SIDP). FAO. பார்க்கப்பட்ட நாள் January 10, 2010.
- ↑ "Giant Tiger Prawn". Sea Grant Extension Project. Louisiana State University. பார்க்கப்பட்ட நாள் 2013-09-24.
- ↑ "Penaeus monodon". Nonindigenous Aquatic Species. United States Geological Survey. 2013-06-14. பார்க்கப்பட்ட நாள் 2013-09-24.
- ↑ Tresaugue, Matthew (2011-12-24). "Giant shrimp raises big concern as it invades the Gulf". Houston Chronicle. http://www.chron.com/news/houston-texas/article/Asian-tiger-prawns-invade-the-Gulf-of-Mexico-2424242.php. பார்த்த நாள்: 2013-09-24.
- ↑ Maheswarudu, G. (2016). "Experimental culture of black tiger shrimp Penaeus monodon Fabricius, 1798 in open sea floating cage". Indian Journal of Fisheries 63 (2). doi:10.21077/ijf.2016.63.2.46459-06. http://epubs.icar.org.in/ejournal/index.php/IJF/article/view/46459.
- ↑ "Exporting frozen cultured black tiger shrimp to Europe". Center for the Promotion of Imports. Archived from the original on டிசம்பர் 30, 2020. பார்க்கப்பட்ட நாள் July 30, 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 7.0 7.1 Lipke Holthuis (1949). "The identity of Penaeus monodon Fabr.". Proceedings of the Koninklijke Nederlandse Akademie van Wetenschappen 52 (9): 1051–1057. http://decapoda.nhm.org/pdfs/25756/25756.pdf.
- ↑ Motoh, H (1981). Studies on the fisheries biology of the giant tiger prawn, Penaeus monodon in the Philippines. Aquaculture Department, Southeast Asian Fisheries Development Center.
- ↑ L. B. Holthuis (1980). "Penaeus (Penaeus) monodon". Shrimps and Prawns of the World. An Annotated Catalogue of Species of Interest to Fisheries. FAO Species Catalogue. Vol. 1. Food and Agriculture Organization. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-5-100896-5.
- ↑ NOAA Fisheries. "Invasion of Asian Tiger Shrimp in Southeast U.S. Waters". www.nmfs.noaa.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
- ↑ 11.0 11.1 Knott, D.M., P.L. Fuller, A.J. Benson, and M.E. Neilson, 2019, Penaeus monodon: U.S. Geological Survey, Nonindigenous Aquatic Species Database, Gainesville, FL
- ↑ 12.0 12.1 Fuller, P., Knott, D., Kingsley-Smith, P., Morris, J., Buckel, C., Hunter, M., & Hartman, L. (2014, March 7). Invasion of Asian tiger shrimp, Penaeus monodon Fabricius, 1798, in the western north Atlantic and Gulf of Mexico. Aquatic Invasions, 9(1), 59-70. எஆசு:10.3391/ai.2014.9.1.05
- ↑ Sahel and West Africa Club (2006) Exploring Economic Opportunities in Sustainable Shrimp Farming in West Africa: Focus on South-South Cooperation. Meeting Report. Organization for Economic Co-operation and Development (Accessed 29 May 2013)
- ↑ 14.0 14.1 14.2 Motoh, H. (1985). Biology and ecology of Penaeus monodon. In Taki Y., Primavera J. H. and Llobrera J. A. (Eds.). Proceedings of the First International Conference on the Culture of Penaeid Prawns/Shrimps, 4-7 December 1984, Iloilo City, Philippines (pp. 27-36). Iloilo City, Philippines: Aquaculture Department, Southeast Asian Fisheries Development Center. கையாளுமை:10862/874
- ↑ FAO-FIRA, 2010. "Giant Tiger Prawn Home" (On-line). Accessed April 15, 2019 at http://affris.org/giant_tiger_prawn/overview.php பரணிடப்பட்டது 2013-03-02 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 16.0 16.1 Cultured Aquatic Species Information Programme. Penaeus monodon. Cultured Aquatic Species Information Programme. Text by Kongkeo, H. In: FAO Fisheries and Aquaculture Department [online]. Rome. Updated 29 July 2005. [Cited 15 April 2019].
- ↑ 17.0 17.1 Chimsung, N. (2014). Maturation diets for black tiger shrimp (Penaeus monodon) broodstock: a review. Songklanakarin Journal of Science & Technology, 36(3), 265–273. Retrieved from http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=a9h&AN=101634955&site=ehost-live
- ↑ Khedkar, Gulab Dattarao; Reddy, A Chandrashekar; Ron, Tetszuan Benny; Haymer, David.SpringerPlus; Heidelberg Vol. 2, Iss. 1, (Dec 2013): 1-8. DOI:10.1186/2193-1801-2-671
- ↑ "Giant Tiger Prawn". Sea Grant Extension Project. Louisiana State University
- ↑ Flegel, T. World Journal of Microbiology and Biotechnology (1997) 13: 433. எஆசு:10.1023/A:1018580301578
- ↑ Soowannayan, C., Nguyen, G. T., Pham, L. N., Phanthura, M., & Nakthong, N. (2015) Australian red claw crayfish (Cherax quadricarinatus) is susceptible to yellow head virus (YHV) infection and can transmit it to the black tiger shrimp (Penaeus monodon). Aquaculture, 445, 63–69. எஆசு:10.1016/j.aquaculture.2015.04.015
- ↑ Shekhar, M S; Kiruthika, J; Rajesh, S; Ponniah, A G.Molecular Biology Reports; Dordrecht Vol. 41, Iss. 9, (Sep 2014): 6275-89. எஆசு:10.1007/s11033-014-3510-1
- ↑ "Greenpeace International Seafood Red list". Greenpeace. பார்க்கப்பட்ட நாள் February 16, 2010.
- ↑ Srivastava S, Dahal S, Naidu SJ, Anand D, Gopalakrishnan V, Kooloth Valappil R, Raghavan SC. DNA double-strand break repair in Penaeus monodon is predominantly dependent on homologous recombination. DNA Res. 2017 Apr 1;24(2):117-128. எஆசு:10.1093/dnares/dsw059. PubMed