பிபெபன் பேகாரி இலால்
இந்திய அரசியல்வாதி
பிபெபன் பேகாரி இலால் (B. B. Lal)(30 ஜனவரி 1917 - 5 ஜனவரி 2008) என்பவர் குடிமைப்பணி ஊழியர் ஆவார். இவர் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் முதல் ஆளுநராக பணியாற்றினார்.[3]
பிபெபன் பேகாரி இலால் | |
---|---|
சிக்கிமின் முதல் ஆளுநர் | |
பதவியில் 16 மே 1975 – 9 ஜனவரி 1981 | |
பின்னவர் | ஹோமி ஜெ. எச். தலெயார்கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] பிரித்தானிய இந்தியா | 30 சனவரி 1917
இறப்பு | 5 சனவரி 2008[2] புது தில்லி, இந்தியா | (அகவை 90)
வேலை | அரசியல்வாதி |
தொழில்
தொகுஇலால் 1941இல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார். இவருக்கு 1965 வரை உத்தரப் பிரதேச அரசில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன.[1] 1966ஆம் ஆண்டில், இவர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இங்கு பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
1974ஆம் ஆண்டில், இலால் இந்திய அரசாங்கத்தின் சிக்கிம் இராச்சியத்தில் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.[4] மே 1975இல் இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்ட பின்னர், இவர் புதிய மாநிலமான சிக்கிமின் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டு 1981 வரை பணியாற்றினார்.
இறப்பு
தொகுஇலால் ஜனவரி 5, 2008 அன்று புதுதில்லியில் காலமானார்.[2]
மேலும் காண்க
தொகு- பால்டன் தோண்டுப் நம்கியால்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Biodata of B.B. Lal". p. 16. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
- ↑ 2.0 2.1 "First Governor of Sikkim dies". January 2008. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
- ↑ "Sikkim Durbar Gazette notifications". p. 384. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
- ↑ "Appointment of B.B. Lal as the Chief Executive". 19 September 1974. p. 7. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.