பிப்லிவனம்

பிப்பிலிவனம் (Pipphalivana), பண்டைய இந்தியாவின் கிமு 6ஆம் நூற்றாண்டில் வட இந்தியா மற்றும் நேபாளத்தின் தெராய் பகுதிகளில் இருந்த கண சங்கங்களில் ஒன்றான மௌரியர் இராச்சியத்தின் தலைநகரம் ஆகும்.[1][2][3] கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் தனது பயணக்குறிப்பில் இந்நகரத்தின் பெயராக நயாகுரோதவனம் என்று குறிப்பிட்டுள்ளார்.[4][5][5][3]பண்டைய பௌத்த நூல்களான திக்க நிகாயம் மற்றும் புத்தவம்சம் நூல்களில் பிப்பிலிவனம் மௌரியர்களின் தலைநகரம் எனக்குறிப்பிட்டுள்ளது.

கிமு 500ல் பண்டைய இந்தியாவின் கண சங்கங்களில் ஒன்றான மௌரியர்கள் ஆண்ட கண இராச்சியம் மற்றும் சாக்கியர், கோலியர் மற்றும் மல்லர்கள் ஆண்ட கண இராச்சியங்கள்

அமைவிடம்

தொகு

பிப்பிலிவனம் தற்கால நேபாள நாட்டின் தெராய் சமவெளியில் உள்ள லும்பினி நகரத்திற்கும், இந்தியாவின் கோரக்பூர் மாவட்டத்திற்கும் இடையே அமைந்திருந்தது.[3] பிப்பிலிவனம் தற்கால கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள நயாகுரோதவனம் எனும் கிராமத்துடன் தொடர்புறுத்தப்படுகிறது. கௌதம புத்தர் இறந்த பிறகு, அவரது உடலை எரியூட்டி கிடைத்த சாம்பலின் ஒரு பகுதி பிப்பிலிவன நகரத்தின் தூபியில் வைக்கப்பட்டுள்ளது என்பதை சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3][2]இத்தூபி அனோமா ஆற்றுக்கு கிழக்கே 4 யோசனை தொலைவிலும்; குசிநகரத்திற்கு மேற்கே 12 யோசனை தொலைவிலும் இருந்ததாக சீன பௌத்த அறிஞர் பாகியான் தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.[2][4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hazra, Kanai Lal (1984). Royal Patronage of Buddhism in Ancient India (in ஆங்கிலம்). D.K. Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86590-167-4.
  2. 2.0 2.1 2.2 Republics in ancient India (in ஆங்கிலம்). Brill Archive.
  3. 3.0 3.1 3.2 3.3 Kapoor, Subodh (2002). Encyclopaedia of Ancient Indian Geography (in ஆங்கிலம்). Cosmo Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-299-7.
  4. 4.0 4.1 Cunningham, Sir Alexander (1871). The Ancient Geography of India: I. The Buddhist Period, Including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang (in ஆங்கிலம்). Trübner and Company. pp. 430–433.
  5. 5.0 5.1 Sharma 1968, ப. 219-224.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்லிவனம்&oldid=4044613" இலிருந்து மீள்விக்கப்பட்டது