பிமலேந்து சின்கா ராய்

இந்திய அரசியல்வாதி மற்றும் ஆசிரியர்

பிமலேந்து சின்கா ராய் (Bimalendu Sinha Roy) ஓர் இந்திய ஆசிரியரும், மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். [1] இவர் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

பிமலேந்து சின்கா ராய்
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 நவம்பர் 2019
முன்னையவர்மகுவா மொயித்திரா
தொகுதிகரீம்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1958
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
முன்னாள் கல்லூரிகல்யாணி பல்கலைக்கழகம்
வேலைஆசிரியர், அரசியல்வாதி

சுயசரிதை தொகு

1958 இல் பிறந்த இவர்,[2] கிருஷ்ணாநகர் அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.[3] 1982 இல் கல்யாணி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.[4]

1985 இல் முரகாச்சா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரயராகப் பணியில் சேர்ந்த இவர், 2000 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.[3] 2016 இல் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[5]

ராய் 2013 இல் மேற்கு வங்காள அரசிடமிருந்து நல்லாசிரியர் (சிக்சரத்னா) விருதைப் பெற்றவர். [3] மேலும், 2017 இல் குடியரசுத் தலைவரின் தேசிய நல்லாசிரியர் விருதையும் பெற்றார். [2]

ராய் 28 நவம்பர் 2019 அன்று கரீம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. "ভরসা মহুয়া মৈত্র, সাংসদকে সঙ্গে নিয়েই করিমপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর" (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  2. 2.0 2.1 "ভরসা মহুয়া মৈত্র, সাংসদকে সঙ্গে নিয়েই করিমপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর". Sangbad Pratidin (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  3. 3.0 3.1 3.2 "প্রান্ত থেকে পাদপ্রদীপে". Anandabazar Patrika (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  4. "BIMALENDU SINHA ROY". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  5. "তৃণমূলের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায়, বাম-কংগ্রেস জোট প্রার্থী তরুণ আইনজীবী". Bartaman (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  6. "Bypoll results: TMC wins all Bengal seats; BJP wins Pithoragarh in Uttarakhand". Times Now. 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  7. "Bypoll Results: Trinamool Wins All 3 Seats In West Bengal, BJP Bags Uttarakhand's Pithoragarh Constituency". News Nation. 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  8. "West Bengal byelection results: Trinamool Congress wins all three seats". The Times of India. 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமலேந்து_சின்கா_ராய்&oldid=3843349" இலிருந்து மீள்விக்கப்பட்டது