பியம்வதா சிங்

பாரம்பரியத்தை மீட்டெடுத்தவர்

பிரியம்வதா சிங் (Priyamvada Singh) (பிறப்பு 1983கள்) ஒரு ஊடக நிபுணரும், இந்தியாவை தளமாகக் கொண்ட ஒரு பாரம்பரியத்தை மீட்டெடுப்பவருமாவார். மும்பையில் ஒரு பத்தாண்டு காலம் தொலைக்காட்சித் துறையில் பணிபுரிந்த பிறகு, ராஜஸ்தானில் உள்ள தனது மூதாதையர் வீட்டிற்குத் திரும்பினார். பில்வாராவுக்கு அருகிலுள்ள தனது கிராமமான மேஜாவில் உள்ள ஒரு மூதாதையர் கோட்டையை மீட்டெடுக்க உள்ளூர் சமூகத்தின் திறமைகளைப் பயன்படுத்தினார். உள்ளூர் சமூகத்தின் மீட்பு மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளுக்கு உள்ளூர் திறமைகளை இவர் பயன்படுத்தியதால் இந்திய அரசாங்கத்தின் நாரி சக்தி விருது இவருக்கு கிடைத்தது.

பியம்வதா சிங்
2019இல் பியம்வதா சிங்
பிறப்பு198கள்
அஜ்மீர்
தேசியம்இந்தியர்
கல்விமயோ மகளிர் கல்லூரி
பணிதொலைக்காட்சி ஊடகத்துறை
அறியப்படுவதுராஜஸ்தானின் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல்
வாழ்க்கைத்
துணை
விஜயேந்திர சந்திர தேவ்

ஆரம்ப ஆண்டுகள் தொகு

இவர் 1983இல் பிறந்தார். மேலும் அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரி பெண்கள் பள்ளியிலும், சோபியா கல்லூரியிலும் படித்தார்.[1] இவரது தந்தை ஜிதேந்திர சிங் ஓய்வுபெற்ற அதிகாரியாகவும், தாய் ரம்மா குமாரி ஒரு இல்லத்தரசியாகவும் உள்ளனர்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

புது தில்லியில் திரைப்படத் தயாரிப்பாளர் முசாபர் அலியுடன் உதவி இயக்குனராக ஊடகத்த் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இந்திய-பிரெஞ்சு ஆப்பெராக்கள், சர்வதேச இசை விழா தொடர் ஜஹான்-இ-குஸ்ராவ், இலண்டனின் சவுத் பேங்க் மையத்தில் ஒரு கலாச்சார விழா போன்ற பல திட்டங்களில் பணியாற்றினார். இந்தியாவின் தொலைக்காட்சிகளான டிடிஎன்இ, டிடி காஷீர், ஐசிசிஆர், யுஎன்ஓடிசி போன்றவற்றுடன் சில சுதந்திரமான படைப்புத் திறனுள்ளத் திட்டங்கள் இதைத் தொடர்ந்து வந்தன. பின்னர் இவர் மும்பையில் உள்ள தொலைக்காட்சித் துறையில் கோன் பனேகா குரோர்பதி, தஸ் கா தம், இந்தியாஸ் காட் டேலண்ட் போன்ற நிகழ்ச்சிகளுக்கான உள்ளடக்க வளர்ச்சியாளாரகவும் பணியாற்றினார்.[2]

மறுசீரமைப்பு தொகு

இவர் தனது குடும்பத்தின் மூதாதையர் வீட்டை மீட்க முடிவு செய்தார். 60 அறைகள் கொண்ட கோட்டை 146 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதிலிருந்து அதுவரை சரிசெய்யப்படவில்லை. அதனை சரி செய்து தனது இல்லத்தை மீட்டெடுக்க முடிவு செய்தார். மேஜா கோட்டை 1875ஆம் ஆண்டில் மேவார் மகாராணாவால் சாகிராக வழங்கப்பட்ட பின்னர் இவரது மூதாதையர் ராவத் அமர் சிங் என்பவரால் கட்டப்பட்டது.

இவர் மறுசீரமைப்பு செயல்முறையுடன் கோட்டைக்குச் சென்று உள்ளூர் மக்களை வேலை செய்வதை உறுதிசெய்தார். குறிப்பாக பெண்கள் தங்கள் சொந்த வருமானத்தை ஈட்டுவதன் மூலம் இந்தப் பணியில் பயனடைந்தனர். உலர் கல் கொத்து, சுண்ணாம்பு பூச்சு போன்ற பாரம்பரிய கட்டிட உத்திகளை இவர் பயன்படுத்தினார். இந்த கட்டமைப்பை சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் மீட்டெடுத்தார். இதன் அருகிலேயே மேஜா அணை அருகில் உள்ளது.[2]

அங்கீகாரம் தொகு

பிப்ரவரி 2018 இல், ஐசிஐசிஐ வங்கியால் வழங்கப்படும் 'அட்வாண்டேஜ் வுமன்' விருதைப் பெற இந்தியா முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 25 பெண்களில் ஒருவராக இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மறுசீரமைப்பு பணி மற்றும் திட்டத்தின் சமூக தாக்கத்திற்காக நடிகை வித்யா பாலனால் மும்பையில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.[2]

8 மார்ச் 2019 அன்று, இவரது தலைமை மற்றும் உதாரணத்திற்காக இவருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாண்புமிகு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் கலந்து கொண்டு இவருடனும் மற்ற அனைத்து விருது பெற்றவர்களுடனும் உரையாடினார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் 2014இல் விஜயேந்திர சந்திர தேவ் என்பவரை மணந்தார்.[1]

கமேர்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Kapoor, Aekta (2018-03-03). "She Quit Showbiz to Live in an Old Fort for a Curious Reason". eShe (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
  2. 2.0 2.1 2.2 "From showbiz to ancestral fort, a Meja-stic heritage mission for this Rajasthan woman". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-03-25. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியம்வதா_சிங்&oldid=3277244" இலிருந்து மீள்விக்கப்பட்டது