பியாக் சொர்க்க மீன்கொத்தி

பியாக் சொர்க்க மீன்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தானிசிப்பிடிரா
இனம்:
தா. ரைடெலி
இருசொற் பெயரீடு
தானிசிப்பிடிரா ரைடெலி
(வெரியாக்சு, 1866)

பியாக் சொர்க்க மீன்கொத்தி (Biak paradise Kingfisher-தானிசிப்பிடிரா ரைடெலி) என்பது இந்தோனேசிய தீவான பியாக்கில் காணப்படும் ஒரு மீன்கொத்தி சிற்றினம் ஆகும். இது பப்புவா வடக்குக் கடற்கரைக்கு அருகிலுள்ள செண்டர்வாசிஹ் விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும். இந்தப் பறவை வெள்ளை வயிறு மற்றும் வால் மற்றும் சிவப்பு நிற அலகுடன் காணப்படும். இதன் இயற்கையான வாழிடம் காடுகளாகும். மேலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதன் பாதுகாப்பு நிலையை "அச்சுறுத்தலுக்கு அண்மித்த சிற்றினமாக" மதிப்பிட்டுள்ளது.

விளக்கம்

தொகு

முதிர்ச்சியடைந்த பியாக் சொர்க்க மீன்கொத்தி சுமார் 14 அங் (36 cm) அங்குலம் (36 செமீ) நீளமுடையது. இதன் தலை, கழுத்து மற்றும் தலையின் பக்கங்களும் மேல் பகுதிகளும் பிரகாசமான பளபளப்பான நீல நிறத்தில் உள்ளன. பிடரித் தண்டு மற்றும் அடித்தளப் பகுதிகள் வெள்ளை நிறமாகவும், உள்பகுதி கருப்பு நிறமாகவும் உள்ளன. இரண்டு மைய வால் இறகுகள் பெரிதும் நீளமாக உள்ளன மற்றும் வெற்று தண்டுகளைக் கொண்டுள்ளன. பறவையின் அடிப்பகுதி வெள்ளை நிறமாகவும், நீண்ட, தடிமனான அலகு சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

பரவல்

தொகு

இந்தோனேசியாவின் பியாக் தீவில் மட்டுமே பியாக் சொர்க்க மீன்கொத்தி காணப்படுகிறது.[1] It seems that these birds originated from a few founding T. galatea birds which arrived on the island and became isolated from the mainland birds. These then underwent a "genetic revolution".[2] இந்தத் தீவுக்கு வந்து பிரதானப் பறவைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சில த. கலாடியா பறவைகளிடமிருந்து இந்தப் பறவைகள் தோன்றியதாகத் தெரிகிறது. இவை பின்னர் ஒரு "மரபணு புரட்சிக்கு" உட்பட்டன.[2] இதில் குறிப்பிட்ட உயிரியல் காரணிகள் எதுவும் இல்லை. ஆனால் இனப்பெருக்கம் ஊக்குவிக்கப் பறவைகளிடையே போதுமான உயிரியல் மாறுபாடு இருந்தது. மேலும் பறவைகள் பெற்ற மரபணுக்களின் வகைப்படுத்தல் பின்னர் அன்னிய மரபணுக்களின் மேலும் வருகையால் பாதிக்கப்படவில்லை.[2]

சூழலியல்

தொகு

முதிர்வடைந்த பியாக் சொர்க்க மீன்கொத்தி குறித்து அதிகம் ஆய்வு செய்யப்படவில்லை. ஆனால் இதன் உணவு மற்றும் நடத்தை நியூ கினியின் பிரதான நிலப்பரப்பில் காணப்படும் பொதுவான சொர்க்க மீன்கொத்தியினை (தானிசிப்டெரா கேலடேயா) ஒத்ததாகக் கருதப்படுகிறது. சில வகைப்பாட்டியலானார்கள் இதை அதன் துணையினமாகக் கருதுகின்றனர்.[3] பொதுவான சொர்க்க மீன்கொத்தி காட்டில் ஒரு தாழ்வான கிளையில் தங்கி, வனத் தரையில் உள்ள பூச்சிகளையும் மண்புழுக்களையும் பிடிக்கக் கீழே இறங்குகிறது. இது ஒரு மரப் பொந்தில், ஒரு வெற்று கிளையில் அல்லது ஒரு தாவர கறையானால் தோண்டியெடுக்கப்பட்ட துளைக்குள் கூடமைக்கிறது.[4]

நிலை

தொகு

பியாக் சொர்க்க மீன்கொத்தி ஒரு சிறிய வாழிட வரம்பைக் கொண்டுள்ளது. ஆனால் இது வசிக்கும் தீவில் மிகவும் பொதுவானது. இதன் வன வாழிடம் மரம் வெட்டுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் தீவின் பெரும்பகுதியில் மரங்கள் காணப்படுவது ஆறுதல் தரவல்லது. இது இரண்டாம் நிலை வளர்ச்சிக் காடுகளுக்கு ஏற்றவாறு மாறக்கூடியது, ஆனால் உயரமான மரங்களைக் கொண்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும். பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதன் எண்ணிக்கையின் போக்கு கீழ்நோக்கி இருப்பதாகக் கருதுகிறது. மேலும் இதன் பாதுகாப்பு நிலையை "அச்சுறுத்தலுக்கு அருகில் அண்மித்த இனமாக" மதிப்பிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Tanysiptera riedelii". IUCN Red List of Threatened Species 2016: e.T22683587A92990676. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683587A92990676.en. https://www.iucnredlist.org/species/22683587/92990676. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Mayr, Ernst (1997). Evolution and the Diversity of Life: Selected Essays. Harvard University Press. pp. 201–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-27105-0.
  3. Fry, C. Hilary; Fry, Kathie (2010). Kingfishers, Bee-eaters and Rollers. Bloomsbury Publishing. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-3457-3.
  4. Manci, William E. (2001). Endangered Wildlife and Plants of the World. Marshall Cavendish. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7200-1.Manci, William E. (2001).

வெளி இணைப்புகள்

தொகு