பியூட்டின் (மூலக்கூறு)
வேதியியல் சேர்மம்
பியூட்டின் (Butin) என்பது C15H12O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிளாவனாய்டு வகையைச் சேர்ந்த ஒர் பிளாவனோன் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. வெமோனியா ஆந்தெல்மிண்டிகா [1] எனப்படும் சூரியகாந்தி குடும்ப தாவரங்களின் விதைகளிலும் தால்பெர்கியா ஓதோரிபெரா [2] எனப்படும் பூக்கும் தாவர வகை மரங்களிலும் பியூட்டின் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2S)-2-(3,4-ஈரைதராக்சிபீனைல்)-7-ஐதராக்சி-2,3-ஈரைதரோகுரோமென்-4-ஒன்
| |
வேறு பெயர்கள்
3',4',7-மூவைதராக்சிபிளாவனோன்; 5-டியாக்சிரியோதிக்டையோல்
| |
இனங்காட்டிகள் | |
492-14-8 | |
ChEBI | CHEBI:27725 |
ChEMBL | ChEMBL451168 |
ChemSpider | 83750 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C09614 |
பப்கெம் | 92775 |
| |
UNII | S23T8BI9DD |
பண்புகள் | |
C15H12O5 | |
வாய்ப்பாட்டு எடை | 272.25 கி/மோல் |
அடர்த்தி | 1.485 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கிளைகோசைடுகள்
தொகுபரவலாகக் காணப்படும் பிடென்சு திரிபார்டிடா எனப்படும் பூக்கும் தாவர இனத்தில் பியூட்டின்-7-ஓ-β-டி-குளுக்கோபைரனோசைடு என்ற கிளைக்கோசைடு மூலக்கூறானது காணப்படுகிறது. [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Separation of flavonoids from the seeds of Vernonia anthelmintica Willd by high-speed counter-current chromatography, Guilian Tiana, Ubin Zhanga, Tianyou Zhanga, Fuquan Yangb and Yoichiro Ito, 2004
- ↑ Simultaneous determination of 10 major flavonoids in Dalbergia odorifera by high performance liquid chromatography, Rong-Xia Liu, Qiao Wang, Hong-Zhu Guo, Li Li, Kai-Shun Bi and De-An Guo, 2005
- ↑ Serbin, A. G; Borisov, M. I; Chernobai, V. T (1972). "Flavonoids of Bidens tripartita II". Chemistry of Natural Compounds 8 (4): 439–441. doi:10.1007/BF00563663.