பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)

பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) (Pragatisheel Samajwadi Party (Lohiya))(மொழிபெயர்ப்பு : முற்போக்கு சோசலிச கட்சி (லோஹியா)), என்பது முன்னர் சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி என உத்தரப் பிரதேசம் முன்னாள் அமைச்சர் சிவபால் சிங் யாதவ் தோற்றுவித்த கட்சி ஆகும். இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஆகஸ்ட் 29, 2018 அன்று விலகி இக்கட்சியினைத் தோற்றுவித்தார்.[1] சோசலிச விழுமியங்களைத் தக்கவைக்க பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியை (லோஹியா) உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.[2] உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான இலக்னோவில் முகாம் அலுவலகம் உள்ளது. கட்சியின் நிரந்தர அலுவலகம் லக்னோவின் கோமதி நகரில் அமைந்துள்ளது.[3][4][1]

பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)
சுருக்கக்குறிPSP(L)
தலைவர்சிவபால் சிங் யாதவ்
நிறுவனர்சிவபால் சிங் யாதவ்
தொடக்கம்29 ஆகத்து 2018 (5 ஆண்டுகள் முன்னர்) (2018-08-29)
முன்னர்சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி
தலைமையகம்இலக்னோ, உத்தரப்பிரதேசம், இந்தியா
கொள்கைசமூகவுடைமை
சமய சார்பின்மை
முன்னேற்றம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
நிறங்கள்     சிவப்பு
     மஞ்சள்
     பச்சை
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(உத்தரப்பிரதேசம் சட்டப் பேரவை)
1 / 403
தேர்தல் சின்னம்
இணையதளம்
pragatisheelsamajwadiparty.org
இந்தியா அரசியல்

தேர்தல் சின்னம் தொகு

 

கட்சிக்கு அதிகாரப்பூர்வமான தேர்தல் சின்னமாக "திறவுகோல்" 2019 தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டது. பின்னர், இது 2022 தேர்தலுக்கு முன்பு "நாற்காலி" என மாற்றப்பட்டது [5]

குறிப்பிடத்தக்க தலைவர்கள் தொகு

சிவபால் சிங் யாதவ் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை மற்றும் ஜல் சக்தி துறையின் முன்னாள் அமைச்சர், அரசு, உத்தரப்பிரதேசம்

ரகுராஜ் சிங் ஷக்யா - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

சையதா ஷதாப் பாத்திமா - முன்னாள் அமைச்சர்

ஆதித்யா யாதவ் - தலைவர் UPPCF மற்றும் பொதுச் செயலாளர், முற்போக்கு சோசலிச கட்சி (லோஹியா)

கட்சி கொடி தொகு

சிவப்பு நிறம் சோசலிசத்தையும் மஞ்சள் நிறம் எதிர்பார்ப்பினையும் பச்சை நிறம் ஒருங்கிணைப்பு மற்றும் செழுமையினைக் குறிக்கின்றது.

இந்த வகையில், சமூகத்தில் சோசலிசத்துடன் பிணைப்பதன் மூலம் உடல் வளத்தை அடைவதற்கான எதிர்பார்ப்பைக் கொடி அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Shivpal Yadav launches party, says tried to hold SP together" (in ஆங்கிலம்). 23 October 2018. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
  2. "Shivpal Yadav floats new party- Pragatisheel Samajwadi Party (Lohia)" (in en-IN). இந்தியன் எக்சுபிரசு. 24 October 2018. https://indianexpress.com/article/cities/lucknow/shivpal-yadav-floats-new-party-pragatisheel-samajwadi-party-lohia-5415374/. 
  3. "शिवपाल यादव ने मुलायम के कभी अखिलेश तो कभी अपने मंच पर मौजूद रहने पर ये दिया बयान- Amarujala". https://www.amarujala.com/photo-gallery/lucknow/rally-of-pragatishil-samajwadi-party-in-lucknow. பார்த்த நாள்: 25 December 2018. 
  4. "His new outfit to take out rally today: Shivpal Yadav takes SP formula, men to try outwit Akhilesh Yadav" (in en-IN). இந்தியன் எக்சுபிரசு. 9 December 2018. https://indianexpress.com/article/india/shivpal-yadav-samajwadi-party-formula-men-to-try-outwit-akhilesh-yadav-5484972/. பார்த்த நாள்: 25 December 2018. 
  5. "यूपी: शिवपाल सिंह यादव की पार्टी प्रसपा का नया चुनाव चिह्न 'स्टूल', चुनाव आयोग ने किया आवंटित". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-01.