பிரகலாத நாடகம்

பிரகலாத நாடகம் ( Odia Prahallāda Nāṭaka), எளிமையாக ராஜா நாடகம் ;இந்திய மாநிலமானஒடிசாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பாரம்பரிய நாடகக் கலை வடிவமாகும். இது ஓர் இசை-நாடகமாகும். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான மனித உடலும் சிங்க முகமும் கொண்ட நரசிம்மர் அல்லது நிருசிங்கரின் கதையைச் சொல்கிறது. மேலும் முன்னாளில் தெற்கு ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய இராச்சியமான ஜலந்தரா மன்னர் ராஜா ராமகிருஷ்ணா சோட்டராயாவின் உரையை அடிப்படையாகக் கொண்டது. இப்பகுதி இப்போது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டமாக அறியப்படுகிறது.

வரலாறு

தொகு

கஞ்சம் மாவட்டத்தில் பதினெட்டு நிலப்பிரபுத்துவ தலைவர்கள் அல்லது ஜமீன்தார்கள் இருந்தனர். அவர்கள் தங்களை ராஜாக்கள் என்று அழைத்துக் கொண்டனர். அவர்கள் கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் புரவலர்களாக இருந்தனர். பிரகல்லாத நாடகம் அத்தகைய ஒரு ராச்சியத்தில் அல்லது ஜமீன்தாரியில் பிறந்ததாகும்[1]

 
இரணியகசிபு ( தனது மஞ்சா மீது நின்று) தனது பணியாட்களுக்குக் கட்டளையிடுகிறார்

பிரகல்லாத நாடகத்தின் முதன்மை உரை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ராஜா ராமகிருஷ்ணா சோட்டாராயா என்பவரால் எழுதப்பட்டது. டாக்டர் பகபன் பாண்டா இதை 1829-1927 வரை எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். சுரேஷ் பாலபந்தராய் 1857-1905 வரை அதன் படைப்பை வைக்கிறார், [2] டாக்டர் ஜான் எமி 1870-80 வரை எனக் குறிப்பிடுகிறார். ஆந்திராவின் எல்லையாக இருக்கும் ஒடிசாவின் தெற்குப் பகுதியில் உள்ள சிறிய சுதேச மாநிலமான ஜலந்தாராவின் ராஜாவாக ராமகுருஷ்ணா இருந்தார். ராஜாவால் எழுதப்பட்டது என்று கூறப்பட்டாலும், பெரும்பான்மையான உரையை பரலகேமுண்டியின் கவிஞர் கவுரஹரி பரிச்சா எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [3] [4]

ஒரே கருப்பொருளில் பல நாடகங்கள் இருந்தாலும், ராஜா ராமகிருஷ்ணாவின் உரையடிப்படையில் எழுதப்பட்ட இசைநாடகமே சிறந்த எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது, எனவே இதனையே பாரம்பரிய வழக்கமாகக் கொள்ளப்பட்டது. மேலும் சுரங்கியின் கிஷோர் சந்திர ஹரிச்சந்தன் ஜகத்தேப் ரே, பராலகேமுண்டியின் பத்மநாப நாராயண தேபா மற்றும் தாராலாவின் ராமச்சந்திர சுரேடியோ உள்ளிட்ட பிற ராஜாக்களால் பின்பற்றப்பட்டது. [1] [2]

1938, மார்ச் 8-இல் ஒரிசா அரசாங்கத்தின் கலாச்சார இயக்குநரகத்தால் சேகரிக்கப்படு, அசல் கையெழுத்துப் பிரதி மெட்ராஸ் ஓரியண்டல் கையெழுத்துப் பிரதி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் முந்தைய ராவன்ஷா நூலகத்தில் (இப்போது கனிகா நூலகம்) பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஒடிசா மாநில அருங்காட்சியகம் 1920 களில் சிறிது நகலெடுத்து உரையின் காகித கையெழுத்துப் பிரதியை வைத்திருந்தது. [2] [5]

கடந்த நூற்றாண்டில், கஞ்சம் மாவட்டத்தில் 172 குழுக்கள் இந்த நாடகத்தை நிகழ்த்தின. 1990 களின் பிற்பகுதி முதல், பார்வையாளர்கள் குறைந்து வருவதால், சுமார் 57 கிராம நாடக நிறுவனங்களால் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது. தொழில் முறை ராஜாக்களின் எண்ணிக்கை 150 முதல் 20 ஆகக் குறைந்துவிட்டதால், இன்று சுமார் ஐம்பது குழுக்கள் மட்டுமே உள்ளன. [4]

நிகழ்ச்சி

தொகு

ஒவ்வொரு நாடகமும் 12 மணி நேரம் நீடிக்கும். ஒடிசாவின் தெற்கு கடஜாடாக்களின் அரச மன்றங்களில் இயற்றப்பட்ட முழுமையான நாடகம் பெரும்பாலும் 7 இரவுகள் வரை ஆகும்.

பிரகல்லாத நாடகத்தில் பல கதாபாத்திரங்கள் உள்ளன, ஆனால் சில மட்டுமே நாடகம் முழுவதும் வருபவை. இவற்றில் இரண்யகசிபு ' ராஜா '; அவரது மனைவி லீலாவதி ; அவர்களின் மகன், பிரகல்லாதன் ; மற்றும் சூத்திரதாரா . எப்போதாவது, ஹிரண்யகஸ்யபாவின் அமைச்சர்கள் பிபராட்சி மற்றும் திரிமஸ்தகன், ஆகியோர், இவர்களது பணியாட்கள் நாடகம் முழுவதும் மேடையை ஆக்கிரமித்துள்ளனர். பெண் கதாபாத்திரங்கள் ஆண் நடிகர்களால் சித்தரிக்கப்படுகின்றன.

பிரகல்லாத நாடகம் ஒரு திறந்தவெளி அமைப்பில் செய்யப்படுகிறது. இது மஞ்சா என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான ஏழு-படி தளத்தைப் பயன்படுத்துகிறது. மஞ்சாவுக்கு முன்னால் உள்ள இடம் மேடையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இடம் இரணியகசிபுவின் அரசவையாக அடையாளம் காணப்படுகிறது (ஏழு உலகங்களின் அவரது ஆதிக்கத்தைக் குறிக்கும் ஏழு படிகள் உள்ளன). மேடையின் மேல் பொருத்தப்பட்ட ஒரு நாற்காலி அவரது சிம்மாசனமாகச் செயல்படுகிறது. பொதுவாக மன்ச்சாவின் ஒரு புறத்தில் மத்தளம், முகவீணை, கினி, ஜாங்கா, ஆர்மோனியம் ஆகிய இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் கஹகா என்றழைக்கப்படுபவர் தலைமைப் பாடகராக செயல்படுகிறார், தத்துவத்தை விளக்குகிறார் மேலும் பார்வையாளர்களுக்கு நாடகப் பிரிவுகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த மஞ்சாவின் நேர் எதிர்ப்புறத்தில் நரசிம்மர் தோன்றுவதற்காக ஒரு தற்காலிக தூண் கடைசிக் காட்சியில், கட்டப்படுகிறது. [2] [5]

நிருசிங்காவுக்கு பயன்படுத்தப்படும் முகமூடி பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகள் பழமையானது. இது ஆண்டு முழுவதும் ஒரு கிராம சன்னதியில் வழக்கமான வழிபாட்டில் வைக்கப்படுகிறது. மேலும் இந்தவொரு நிகழ்ச்சியின் போது மட்டுமே அணியப்படுகிறது. மரியாதைக்குரிய அடையாளமாக, அதாவது கலைஞர்கள் பொதுவாக அசைவ உணவு மற்றும் மதுபானங்களை தவிர்ப்பது போன்ற தூய்மைச் சடங்கினைப் பராமரிக்கிறார்கள், . [5]

அங்கீகாரம்

தொகு

இந்தியாவின் இசை நாடக் அகாடமியிலிருந்து பல நாடகக் கலைஞர்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இவற்றில் ரகுநாத் சத்பதி (1980), சிமஞ்சல் பட்ரோ (1990), கிருஷ்ணா சந்திர சாஹு (2000) ஆகியோர் அகாடமி விருது பெற்றவர்களாகவும், பிருந்தாபன் ஜீனா (2006), பிரமாத் குமார் நஹக் (2008) ஆகியோர் யுவ புராஸ்கர் விருது பெற்றவர்களாகவும் உள்ளனர். [6]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Pattanaik, Dhirendra Nath (1998). Folk Theatre of Orissa. Bhubaneswar: Orissa Sangeet Natak Akademi. pp. 29–36.
  2. 2.0 2.1 2.2 2.3 Balabantaray, Suresh. ରାଜା ରାମକୃଷ୍ଣ ଛୋଟରାୟ ବିରଚିତ ପ୍ରହ୍ଲାଦ ନାଟକ.
  3. Emigh, John (September 2001). Use of Adversity: Embodiments of culture and crisis in the Prahlada nataka of Orissa. 
  4. 4.0 4.1 Patnaik, Sunil (28 December 2010). "Rare art form finds few takers - 150-year-old traditional dance languishes in neglect". The Telegraph. https://www.telegraphindia.com/states/odisha/rare-art-form-finds-few-takers-150-year-old-traditional-dance-languishes-in-neglect/cid/455439. 
  5. 5.0 5.1 5.2 Chhotray, Raja Ramakrushna (1973). ପ୍ରହ୍ଲାଦ ନାଟକ (in Odia). Bhubaneswar: Directorate of Cultural Affairs.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. "SNA || List of Awardees". sangeetnatak.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-09-12. பார்க்கப்பட்ட நாள் 2018-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகலாத_நாடகம்&oldid=3563421" இலிருந்து மீள்விக்கப்பட்டது