பிரகாசு சிறீவசுதவா
பிரகாசு சிறீவசுதவா (Prakash Shrivastava)(பிறப்பு 31 மார்ச் 1961) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். முன்னதாக இவர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார்.[1][2][3]
மாண்புமிகு நீதியரசர் பிரகாசு சிறீவசுதவா | |
---|---|
தலைமை நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2021 | |
பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | ராஜேஷ் பிண்டால் (செயல்) |
நீதிபதி மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் 18 சனவரி 2008 – 10 அக்டோபர் 2021 | |
பரிந்துரைப்பு | கொ. கோ. பாலகிருஷ்ணன் |
நியமிப்பு | பிரதிபா பாட்டீல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 மார்ச்சு 1961 |
பணி
தொகுசிறீவசுதவா மார்ச் 31, 1961ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் 2 பிப்ரவரி 1987 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உரிமையியல், வரி மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றுள்ளார். இவர் ஜனவரி 18, 2008 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். மேலும் ஜனவரி 15 2010 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். இவர் 9 அக்டோபர் 2021 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்வு பெற்று அக்டோபர் 11, 2021 அன்று பதவியேற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Justice Prakash Shrivastava recommended for CJ of Calcutta HC". WHISPERS IN THE CORRIDORS. 21 September 2021. http://www.whispersinthecorridors.com/detail/70406-Justice-Prakash-Shrivastava-recommended-for-CJ-of-Calcutta-HC.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Justice Prakash Shrivastava's Profile". 21 September 2021. https://mphc.gov.in/honble-judges.
- ↑ 3.0 3.1 "Justice Prakash Shrivastava takes oath as Chief Justice of Calcutta HC". India Today. 11 October 2021. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.