பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு

வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு (Praseodymium(III) phosphate) என்பது PrPO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் பாசுபரசு ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு
இனங்காட்டிகள்
14298-31-8 Y
EC number 238-231-6
InChI
  • InChI=1S/H3O4P.Pr/c1-5(2,3)4;/h(H3,1,2,3,4);/q;+3/p-3
    Key: KDCUNMWWJBHRSC-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3084189
SMILES
  • [O-]P(=O)([O-])[O-].[Pr+3]
பண்புகள்
O4PPr
வாய்ப்பாட்டு எடை 235.88 g·mol−1
தோற்றம் திண்மம்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

பிரசியோடைமியம் குளோரைடுடன் பாசுபாரிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு அரைநீரேற்றை தயாரிக்க இயலும்:[2]

PrCl3 + H3PO4 → PrPO4 + 3 HCl

சிலிக்கான் பைரோபாசுபேட்டுடன் (SiP2O7) பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடை (Pr6O11) சேர்த்து 1200 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை உருவாக்க முடியும்.[3]

பண்புகள் தொகு

P21/n என்ற இடக்குழுவில் a = 0.676 நானோமீட்டர், b = 0.695 நானோமீட்டர், c = 0.641 நானோமீட்டர், β = 103.25°, Z = 4 செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் படிகமாகிறது.[4][5]

PrPO4·nH2O என்ற வாய்பாட்டிலான படிக நீரேற்றையும் இது உருவாக்குகிறது. வாய்பாட்டிலுள்ள n <0.5 மதிப்பை கொண்டிருக்கும். P6222 என்ற இடக்குழுவில் செல் அளவுருக்கள் a = 0.700 நானோமீட்டர், c = 0.643 நானோமீட்டர், Z = 3 அளவுருக்கள் கொண்ட அறுகோண படிக அமைப்பில் வெளிர் பச்சை நிறப் படிகங்களாக இது படிகமாகிறது.[6][7]

வேதிப் பண்புகள் தொகு

பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து Na2PrF2(PO4) சேர்மத்தைக் கொடுக்கிறது.[8]

PrPO4 + 2 NaF → Na2PrF2(PO4)

மேற்கோள்கள் தொகு

  1. "Praseodymium(III) phosphate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Hikichi, Yasuo; Hukuo, Ken-iti; Shiokawa, Jiro (Dec 1978). "Syntheses of Rare Earth Orthophosphates". Bulletin of the Chemical Society of Japan 51 (12): 3645–3646. doi:10.1246/bcsj.51.3645. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2673. http://dx.doi.org/10.1246/bcsj.51.3645. 
  3. Carlos E. Bamberger, George M. Begun, Dale E. Heatherly (Nov 1983). "Synthesis of Metal Phosphates Using SiP2O7" (in en). Journal of the American Ceramic Society 66 (11): c208–c209. doi:10.1111/j.1151-2916.1983.tb10575.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7820. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1151-2916.1983.tb10575.x. பார்த்த நாள்: 2022-03-06. 
  4. Garkavi, Andrey Vladimirovich (2023), "How to Draw Up and Complete a Dissertation, 2nd ed., revised and enlarged", How to Draw up and Complete a Dissertation, 2nd ed., revised and enlarged, OOO "GEOTAR-Media" Publishing Group, pp. 1–80, doi:10.33029/9704-7930-8-hdc-2023-1-80, ISBN 978-5-9704-7930-8, பார்க்கப்பட்ட நாள் 2023-12-06
  5. Horchani-Naifer, K.; Férid, M. (2009-04-20). "Crystal structure, energy band and optical characterizations of praseodymium monophosphate PrPO4". Inorganica Chimica Acta 362 (6): 1793–1796. doi:10.1016/j.ica.2008.08.021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1693. https://www.sciencedirect.com/science/article/pii/S0020169308005422. 
  6. Инязовские чтения. Сборник научных статей Первой международной научно-практической конференции Совета молодых ученых МГЛУ. Москва: Московский государственный лингвистический университет. 2022. doi:10.52070/978-5-00120-359-9_2022. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-00120-359-9. http://dx.doi.org/10.52070/978-5-00120-359-9_2022. 
  7. Hezel, A.; Ross, S. D. (1967-08-01). "X-ray powder data and cell dimensions of some rare earth orthophosphates". Journal of Inorganic and Nuclear Chemistry 29 (8): 2085–2089. doi:10.1016/0022-1902(67)80469-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://dx.doi.org/10.1016/0022-1902%2867%2980469-X. 
  8. ZIMINA, G. V.; SMIRNOVA, I. N.; GORKOVENKO, M. YU.; SPIRIDONOV, F. M.; KOMISSAROVA, L. N.; KALOEV, N. I. (1995-02-21). "ChemInform Abstract: Synthesis and Studies of Fluorophosphates of Rare Earth Elements Na2LnF2PO4.". ChemInform 26 (8). doi:10.1002/chin.199508015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0931-7597. http://dx.doi.org/10.1002/chin.199508015.