பிரசியோடைமியம்(III) புரோமைடு
பிரசியோடைமியம்(III) புரோமைடு (Praseodymium(III) bromide) PrBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். ஒரு பிரசியோடைமியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களூம் சேர்ந்து இந்தப் படிக்ச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோபிரசியோடைமியம்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(III) புரோமைடு | |
இனங்காட்டிகள் | |
13536-53-3 | |
ChemSpider | 75391 |
EC number | 236-893-0236-893-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83561 |
| |
பண்புகள் | |
PrBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 380.62 கி/மோல் |
தோற்றம் | பச்சை நிறப் படிகத் திண்மம் |
அடர்த்தி | 5.28 கி/செ.மீ3 |
உருகுநிலை | 691 °C (1,276 °F; 964 K)[2] சில மூலங்கள் 693 °செல்சியசு என்கின்றனC[1] |
கொதிநிலை | 1,547 °C (2,817 °F; 1,820 K)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | மூவுச்சி முக்கோணப் பட்டகம் |
ஒருங்கிணைவு வடிவியல் |
9 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319 | |
P261, P280, P305+351+338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுதோற்றம்
தொகுபிரசியோடைமியம்(III) புரோமைடு அறை வெப்பநிலையில் ஒரு பச்சை நிற திண்மமாகக் காணப்படுகிறது.[2][1] பொதுவாக இச்சேர்மம் தூளாக கையாளப்படுகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுபிரசியோடைமியம்(III) புரோமைடின் மூலக்கூறு எடை 380.62 கிராம் ஆகும்.[2][3][4][5] இதன் அடர்த்தி 5.28 கி/செ.மி2 என அளவிடப்பட்டுள்ளது.[6][5]
UCl3 சேர்மத்தின் படிக அமைப்பை பிரசியோடைமியம்(III) புரோமை ஏற்றுக்கொள்கிறது.[7] பிரசியோடைமியம் அயனிகள் 9-ஒருங்கிணைப்புகளுடன் முக்கோணப் பட்டக வடிவவியலைப் பின்பற்றுகின்றன. பிரசியோடைமியம்-புரோமின் பிணைப்புகளீன் பிணைப்பு நீளம் 3.05 Å மற்றும் 3.13 ஆக உள்ளன.[8] [9]
வேதிப் பண்புகள்
தொகுபிரசியோடைமியம்(III) புரோமைடு நீருறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மமாகும்.[4] சேர்மங்களில் 3 என்ற ஆக்சிசனேற்ற நிலை எண்ணில் பிரசியோடைமியம்(III) புரோமைடு வினையில் ஈடுபடுகிறது.[1]
தீங்குகள்
தொகுபிரசியோடைமியம்(III) புரோமைடு தோல் எரிச்சல் (H315/R38), கண் எரிச்சல் (H319/R36) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பிரசியோடைமியம்(III) புரோமைடு கலந்துள்ள காற்று, தூசி , புகை,வாயு, மூடுபனி போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். இதைப் பயன்படுத்தும்போது கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர் கைகளை நன்கு கழுவி தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். கண்களில் பட நேர்ந்தால் கண்களை பலமுறை கழுவ வேண்டும்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Winter, Mark. "Praseodymium»praseodymium tribromide [WebElements Periodic Table]". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 2.0 2.1 2.2 Elements, American. "Praseodymium Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ "Praseodymium bromide Br3Pr - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 4.0 4.1 Chambers, Michael. "ChemIDplus - 0013536533 - PLKCYEBERAEWDR-UHFFFAOYSA-K - Praseodymium bromide (PrBr3) - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". chem.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 5.0 5.1 Phillips, edited by Dale L. Perry, Sidney L. (1995). Handbook of inorganic compounds. Boca Raton: CRC Press. p. 323. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849386718.
{{cite book}}
:|first1=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Information on praseodymium bromide: Etacude.com". chemicals.etacude.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1240–1241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Schmid, B.; Hälg, B.; Furrer, A. (1987). "Structure and crystal fields of PrBr3 and PrCl3: A neutron study". J. Appl. Phys. 61: 3426–3428. doi:10.1063/1.338741.
- ↑ "Praseodymium Bromide | ProChem, Inc". prochemonline.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.