பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு

வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு (Praseodymium pentaphosphide) என்பது PrP5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு
Praseodymium pentaphosphide
இனங்காட்டிகள்
54466-02-3 Y
InChI
  • InChI=1S/5P.Sm
    Key: BOIVIBBFKRHHPN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Sm].[P].[P].[P].[P].[P]
பண்புகள்
P5Sm
வாய்ப்பாட்டு எடை 295.78
தோற்றம் கருப்பு படிகங்கள்
அடர்த்தி 3.8 கி/செ.மீ3
உருகுநிலை 697 °C (1,287 °F; 970 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

விகிதாச்சார அளவில் பிரசியோடைமியத்தையும் பாசுபரசையும் சேர்த்து 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு தயாரிக்கப்படுகிறது.

Pr + 5P → PrP5

பண்புகள்

தொகு

பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகமாக்குகிறது. P21/m என்ற இடக்குழுவில் a = 0.4938 நானோமீட்டர், b = 0.9595 நானோமீட்டர், c = 0.5482 நானோமீட்டர், β = 103.64°, Z = 2 என்ற செல் அளவுருக்களுடன் நியோடிமியம் பெண்டாபாசுபைடின் அதே கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[1][2]

இச்சேர்மம் 697 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெரிடெக்டிக்கு வினை எனப்படும் நீர்மதிண்மநிலை வினைபொருள்கள் வினைபுரிந்து ஒரு திண்மநிலை விளைபொருளாக உருவாகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Schnering, H. G. von; Wittmann, M.; Peters, K. (1 April 1998). "Crystal structure of praseodymium pentaphosphide, PrP5 and of praseodymium pentaphosphide, SmP5" (in de). Zeitschrift für Kristallographie - New Crystal Structures 213 (1-4): 489–490. doi:10.1524/ncrs.1998.213.14.489. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. https://www.degruyter.com/document/doi/10.1524/ncrs.1998.213.14.489/html. பார்த்த நாள்: 16 March 2024. 
  2. Predel, B., "P-Pr (Phosphorus-Praseodymium)", Ni-Np – Pt-Zr (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, pp. 1–2, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10542753_2369, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61712-4, பார்க்கப்பட்ட நாள் 2024-03-17
  3. Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,1. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02843-6.