பிரசியோடைமியம் மோனோசல்பைடு
வேதிச் சேர்மம்
பிரசியோடைமியம் மோனோசல்பைடு (Praseodymium monosulfide) என்பது PrS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சல்பேனைலிடின்பிரசியோடைமியம்(1+)
| |
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம்(II) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12038-06-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PrS | |
வாய்ப்பாட்டு எடை | 172.97 g·mol−1 |
தோற்றம் | படிகத் திண்மம் |
அடர்த்தி | 6.1 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,230 °C (4,050 °F; 2,500 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவிகிதவியல் அளவுகளில் தூய பிரசியோடைமியம் தனிமத்தையும் கந்தகத்தையும் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தி வினைபுரியச் செய்து பிரசியோடைமியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- Pr + S → PrS
இயற்பியல் பண்புகள்
தொகுபிரசியோடைமியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பின் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5727 நானோமீட்டர், Z = 4 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பை கொண்டுள்ளது.[3][4][5]
பிரசியோடைமியம் மோனோசல்பைடு 2230 ° செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. இதன் ஒருபடித்தான உருகுநிலை வீச்சு PrS0.75–1 ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Praseodymium » praseodymium sulphide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
- ↑ "Praseodymium(II) Sulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
- ↑ Okamoto, H. (1 October 1991). "Pr-S (Praseodymium-Sulfur)" (in en). Journal of Phase Equilibria 12 (5): 618–619. doi:10.1007/BF02645088. பன்னாட்டுத் தர தொடர் எண்:1054-9714. https://link.springer.com/article/10.1007/BF02645088. பார்த்த நாள்: 25 July 2024.
- ↑ Predel, B. (1998). "Pr-S (Praseodymium-Sulfur)". Ni-Np – Pt-Zr I: 1–2. doi:10.1007/10542753_2497. https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-70692-2_2497. பார்த்த நாள்: 25 July 2024.
- ↑ Swanson, Howard Eugene (1962). Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 67. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.