பிரஞ்சல் யாதவ்
பிரஞ்சல் யாதவ் (Pranjal Yadav) இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.[1] இவர் உத்தரப்பிரதேச அரசின் தேசிய ஒருங்கிணைப்புத் துறையின் சிறப்புச் செயலாளராக உள்ளார்.[2]
பிரஞ்சல் யாதவ்
Pranjal Yadav | |
---|---|
பிறப்பு | கான்பூர், உத்திரப்பிரதேசம், இந்தியா |
கல்வி | பி. டெக். மெக்கானிக்கல் இஞ்சினியரிங் |
படித்த கல்வி நிறுவனங்கள் | IIT ரூர்கி |
பணி | சிறப்பு செயலர், தேசிய ஒருங்கிணைப்பு துறை, உ.பி.அரசு, சிறப்பு செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், கூடுதல் இயக்குநர், தேசிய சுகாதார இயக்கம், லக்னோ |
செயற்பாட்டுக் காலம் | 2006–முதல் |
பணியகம் | இந்திய அரசு |
அமைப்பு(கள்) | இந்திய ஆட்சிப் பணி அலுவலர் |
கல்வி
தொகு2006இல் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், ரூர்க்கியிலிருந்து இயந்திரப் பொறியியலில் பி.டெக் முடித்தார்.[3]
பணி
தொகுஜூன் 2007 இல், அலகாபாத் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகத் தனது அரசுப் பணியினைத் தொடங்கினார். பின்னர் சித்தார்த் நகர் மாவட்ட இணை ஆட்சியராக பணியாற்றினார்.[4] பின்னர் இவர் அசாம்கர் டி.எம். பணியிடமாற்றம் பெற்றார். யாதவ் 3 பிப்ரவரி 2013 அன்று காசிக்கு மாற்றப்பட்டார்.[5] காசியில் உள்ள புகழ்பெற்ற படித்துறைகளின் தெருக்களில் உள்ள சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கங்கை ஆற்றின் பாதுகாப்பில் முக்கியப் பணியாற்றியுள்ளார்.[6]
சர்ச்சைகள்
தொகுபிரதம மந்திரி வேட்பாளரை பொது பேரணி நடத்த அனுமதிக்காதது தொடர்பாக பிரஞ்சல் சர்ச்சையை எதிர்கொண்டார்.[7] வாரணாசியின் நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோதி, 2014ஆம் ஆண்டில் பெனியா பாக் மைதானத்தில் பேரணியை நடத்த இவர் அனுமதிக்கவில்லை. இருந்தபோதிலும் காசிநகர் வாசிகள் அனைவருக்கும் பிரஞ்சல் மிகவும் பிடித்தவர்.[6]
மெற்கோள்கள்
தொகு- ↑ "'Tough' Varanasi DM in his toughest job". இந்தியன் எக்சுபிரசு.
- ↑ "Pranjal Yadav". Department of Appointment and Personnel Govt. of Uttar. Archived from the original on 2020-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
- ↑ "Who is Pranjal Yadav, the IAS officer who nixed Modi's Varanasi rally?". Firstpost.
- ↑ "Pranjal Yadav: DM who eased Varanasi's traffic problems". தி எகனாமிக் டைம்ஸ்.
- ↑ "वाराणसी में पॉप्युलर हैं प्रांजल यादव". Navbharat Times.
- ↑ 6.0 6.1 "The IIT-groomed babu who said 'no' to Modi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Arun Jaitley stands by BJP's criticism of Election Commission directive to deny Modi permission for rally in Varanasi". https://www.indiatoday.in/elections/highlights/story/arun-jaitley-narendra-modi-election-commission-pranjal-yadav-beniyabag-192533-2014-05-12.