பிரதிபா மணிந்தர் சிங்

பிரதிபா மணிந்தர் சிங் (Prathiba M. Singh-பிறப்பு: சூலை 20, 1968) இந்தியாவில் உள்ள தில்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி ஆவார்.[1] இவர் கல்வி இலக்கியம் மற்றும் இந்திய அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் சட்ட மேம்பாடுகளுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளார். ஒரு வழக்கறிஞராகவும், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான சட்டத்தை உருவாக்குவது தொடர்பான பல சட்டமன்றக் குழுக்களின் ஆலோசகராகவும் இருந்தார்.[2][3]

பிரதிபா ம. சிங்
நீதிபதி-தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மே 2017
பரிந்துரைப்புசகதீசு சிங் கேகர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூலை 1968 (1968-07-20) (அகவை 55)
முன்னாள் கல்லூரிபெங்களூர்ப் பல்கலைக்கழகம்

இளமை தொகு

சிங் கர்நாடகாவின் பெங்களூரு பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். முதுநிலைச் சட்டப் பட்டத்தினை கேம்பிரிட்ஜ் பொதுநலவாய அறக்கட்டளை உதவித்தொகையில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[1] 2013-இல், இவர் முதுநிலைச் சட்டப் படிப்பிற்காக பிரதிபா சிங் உதவித்தொகையை நிறுவினார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இதன் மூலம் இப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.[4]

இவர் இந்தியாவின் முன்னாள் கூடுதல் அரசு உதவி வழக்கறிஞர் மணீந்தர் சிங்கை மணந்தார்.

தொழில் தொகு

வழக்கு தொகு

சிங் 1991-இல் வழக்கறிஞர் பணியில் சேர்ந்தார். இவர் முதன்மையாக அறிவுசார் சொத்து சட்டத் துறையில் பயிற்சி பெற்றார். ஒரு சட்ட நிறுவனத்தில் நிர்வாகப் பங்குதாரராகச் செயல்பட்டார். பதிப்புரிமை அலுவலகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த இவர்களுடன் ஆலோசனை நடத்த தில்லி உயர் நீதிமன்றத்தால் இவர் நியமிக்கப்பட்டார். மேலும் இந்தியாவில் காப்புரிமைத் தேர்வு செயல்முறையை ஒழுங்குபடுத்துவது குறித்து உயர்நிலை நாடாளுமன்றக் குழுவுடன் செயல்பட்டார். காப்புரிமைச் சட்டம் மற்றும் பதிப்புரிமை திருத்தச் சட்டம், 2012 உட்பட, இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களுக்கான முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றக் குழுக்களுக்கு இவர் நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.[5] 2014-இல் இந்தியாவின் தேசிய அறிவுசார் உரிமை கொள்கையை வரைவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் சிங் ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.[6]

2013-இல், நோவார்டீசு எதிராக சிப்லா தொடர்ந்த வழக்கான நோவார்டீசு எதிராக இந்திய ஒன்றிய அரசு & அதர்சில் சிங் குறிப்பாக சிப்லாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த வழக்கில் நோவார்டூசு காப்புரிமை பெற்ற புற்றுநோய் மருந்துகளின் பொதுவான மருந்துகளைத் தயாரிப்பதற்கான சிப்லாவின் உரிமையை நிறுவியது.[7][8] இந்த வழக்கு பரவலாகப் பேசப்பட்டது. இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை நீதித்துறையில் குறிப்பிடத்தக்க வழக்காகும்.[9][10] 2016ஆம் ஆண்டில், உடனடி செய்தியிடல் சேவையான வாட்சப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மனுதாரர்கள் சார்பாக சிங் வாதிட்டார். இதில் வாட்சப்பின் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களை எதிர்பார்த்து தங்கள் வாட்சப் கணக்குகளை நீக்கியவர்களின் பயனர் தகவல்களை நீக்குமாறு வாட்சப்பிற்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[11][12][13]

சிங் 2013-இல் தில்லி உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.[2]

ஆசியக் காப்புரிமை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில், அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட குறைந்த அளவு வளங்களை எதிர்த்தும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தில்லி உயர் நீதிமன்றத்தில் சிங் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இவரது மனுவின் காரணமாக தில்லியில் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்திற்கு நிரந்தர அலுவலகம் நிறுவப்பட்டது.[14][15]

நீதித்துறை தொகு

சிங் தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக 15 மே 2017 அன்று நியமிக்கப்பட்டார்.[1] 2019-இல், சிங், இந்திய அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தின் செயல்பாட்டை விமர்சித்து, சீர்திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுத்தார்.[14]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "CJ and Sitting Judges: Justice Prathiba M. Singh". Delhi High Court.
  2. 2.0 2.1 "Prathiba M Singh | Our partners". www.cambridgetrust.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
  3. Johri, Monalisa, Yash (2014-06-10). "India is game-changer in patent law: Prathiba M. Singh". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "Prathiba M Singh Cambridge Scholarship | Scholarships | Cambridge Trusts". www.cambridgetrust.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
  5. "Judging Matters- Business News". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
  6. "DIPP sets up think tank to draft national Intellectual Property Rights policy". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/economy/policy/dipp-sets-up-think-tank-to-draft-national-intellectual-property-rights-policy/articleshow/44926124.cms. 
  7. Singh, Khomba. "SC rejects Bayer's plea to stay Cipla's cancer clone". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/pharmaceuticals/sc-rejects-bayers-plea-to-stay-ciplas-cancer-clone/articleshow/5631323.cms?from=mdr. 
  8. Mishra, Prabhati Nayak (2017-04-09). "Pratibha Singh & Rekha Palli: Meet The Two Women Lawyers Who Are Going To Be Delhi HC Judges Soon". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
  9. Mohanty, Kaustubh Kulkarni, Suchitra (2013-04-01). "Novartis loses landmark India cancer drug patent case" (in en). Reuters. https://in.reuters.com/article/us-india-novartis-patent-idUSBRE93002I20130401. 
  10. "Novartis India case: Campaigners hail patent rejection" (in en-GB). BBC News. 2013-04-01. https://www.bbc.com/news/business-21992724. 
  11. Scroll Staff. "WhatsApp must remove data of users who delete their accounts before September 25, says Delhi HC". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
  12. Ghosal, Sayan (2016-09-24). "Delhi HC upholds WhatsApp's data-sharing policy, with riders". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/delhi-hc-upholds-whatsapp-s-data-sharing-policy-with-riders-116092300740_1.html. 
  13. Alawadhi, Neha; Aulakh, Gulveen. "WhatsApp must scrub off user data once the app is uninstalled: Delhi HC". The Economic Times. https://economictimes.indiatimes.com/tech/mobile/whatsapp-to-scrub-off-user-data-once-the-app-is-uninstalled-delhi-hc/articleshow/54491973.cms. 
  14. 14.0 14.1 Reddy, Prashant. "Justice Pratibha Singh Demands a Reply from the Government of India on the Dysfunctional IPAB – IP Bar Continues to Be Mute Spectator". SpicyIP (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
  15. Singh, Khomba. "IPAB centre likely to come up in Mumbai, Delhi and Kolkata". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ipab-centre-likely-to-come-up-in-mumbai-delhi-and-kolkata/articleshow/8148689.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபா_மணிந்தர்_சிங்&oldid=3894801" இலிருந்து மீள்விக்கப்பட்டது