பிரதிமா தேவி (ஓவியர்)

பிரதிமா தேவி (Pratima Devi) (1893-1969) இவர் ஒரு இந்திய பெங்காலி கலைஞராவார். இவரது கலை திறன்களுக்காக பரவலாக அறியப்பட்டவர். இவர் இரவீந்திரநாத் தாகூரின் மகன் இரதிந்திரநாத் தாகூரின் மனைவியாவார். கவிஞர் இவரது திறன்களை வளர்ப்பதில் சிறப்பு அக்கறை காட்டினார்.

பிரதிமா தேவி
1921இல் பிரதிமா தேவி
பிறப்பு1893 (1893)
கொல்கத்தா
இறப்பு1969 (அகவை 75–76)
சாந்திநிகேதன்
தேசியம்இந்தியன்/பெங்காலி
அறியப்படுவதுநாட்டுப்புற நடனம், ஓவியக் கலை
வாழ்க்கைத்
துணை
நிலநாத் முகோபாத்யாய், இரதிந்திரநாத் தாகூர்

பெற்றோர் தொகு

இவர் சேகேந்திர பூசன் சட்டோபாத்யாய் மற்றும் ககனேந்திரநாத் தாகூர் மற்றும் அபானிந்திரநாத் தாகூர் ஆகியோரின் சகோதரியான பினயானி தேவியின் மகளாவார் .[1][2]

செயல்பாடுகள் தொகு

 
1931இல் ஜெர்மனியில் இரவீந்திரநாத் தாகூர். படத்தில்: பிரதிமா தேவி, ஆரியம் மற்றும் அமியா சக்ரவர்த்தி [3]

பிரதிமா ஓவியர் நந்தலால் போஸ் மற்றும் இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் கீழ் கலை பயிற்சியை மேற்கொண்டார்.[1] இரவீந்திரநாத் இவரது கலைத் திறமைகளைத் தொடர ஊக்குவித்தார். தாகூர் குடும்பத்தால் நடத்தப்படும் இந்தியன் சொசைட்டி ஆஃப் ஓரியண்டல் ஆர்ட்டில் 1915 முதல் இவர் தனது படைப்புகளை காட்சிப்படுத்தினார். பின்னர் இவர் பாரிசுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் இத்தாலிய " ஈரமான ஃப்ரெஸ்கோ " முறையைப் படித்தார்.

1910இல் திருமணமான உடனேயே, பிரதிமா, தனது கணவருடன், இப்போது வங்காளதேசத்தில் உள்ள சிலைதாவில் உள்ள குடும்பத் தோட்டத்தில் சிறிது காலம் வசித்து வந்தார்.[4] அதைத் தொடர்ந்து, பிரதிமா சாந்திநிகேதனுக்குத் திரும்பி, தனது மாமியார் மற்றும் கணவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டார்.[5] தொலைதூர இடங்களுக்கு அவர்கள் சென்றபோது அவர்களுடன் பிரதிமாவும் உடன் சென்றார்.[1] சாந்திநிகேதனில் இரவீந்திரநாத் தாகூர் நிறுவிய இசை மற்றும் நடனப் பள்ளியில் நடன பாடத்திட்டத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார். ஆரம்ப ஆண்டுகளில் தாகூரின் நடன-நாடகங்களை வடிவமைத்த முக்கிய தாக்கங்களில் ஒன்றாக இவர் புகழ் பெற்றார். இவர் எளிதாக ஒரு புதிய கைவினைப்பொருளை எடுத்து சில்பா சதான் பாடத்திட்டத்திற்கு மாற்றியமைக்கம் திறனைப் பெற்றிருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை, திருமணம் மற்றும் இறப்பு தொகு

பிரதிமா இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் 1893 இல் இந்தியாவில் 1893 நவம்பர் 5, அன்று கொல்கத்தாவில் பிறந்தார்.[6] இரவீந்திரநாத்தின் வகுப்புத் தோழரான நிரோத் நாத் முகோபாத்யாயின் மகன் நிலநாத் முகோபாத்யாயை தனது குழந்தைப் பருவத்திலேயே முதலில் மணந்தார். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிலநாத் கங்கையில் மூழ்கி திடீரென இறந்தார். பின்னர், இரவீந்திரநாத் தாகூர் 17 வயது பிரதிமாவின் இரண்டாவதுத் திருமணத்தை தனது மகன் இரதிந்திரநாத் தாகூருடன் ஏற்பாடு செய்தார்.[7] இரத்தீந்திரநாத் மற்றும் பிரதிமா 1922இல் ஒரு மகளைத் தத்தெடுத்தனர் - நந்தினி, என்பது அக்குழந்தையின் புனைபெயர் - புப்பி (பிரெஞ்சு மொழியில் 'பொம்மை' என்று பொருள்) மூலம் நன்கு அறியப்பட்டவர்.[8]

இரதிந்திரநாத்துடனான பிரதிமாவின் திருமணம் முந்தைய ஆண்டுகளில் மகிழ்ச்சியான ஒன்றாகத் தோன்றியது, ஆனால் அது பிற்காலத்தில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளத் தொடங்கியது. தாகூர் குடும்பத்தின் 'மிகவும் திறமையான மற்றும் ஆக்கபூர்வமான நபர்களின் பளபளப்பான வரிசையில்' ஒரு புதிராக இருந்த சற்றே அகங்காரமான இரதிந்திரநாத், 1953இல் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்து, சாந்திநிகேதனை விட்டு வெளியேறினார். பிரதிமா சாந்திநிகேதனிலேயே தங்கியிருந்தார். இருப்பினும், 1961இல் இரதிந்திரநாத் இறக்கும் வரை அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பிலிருந்தனர்.[4][9] இரவீந்திரநாத் தாகூர் 1941இல் இறந்தார். அவர்கள் விவாகரத்து செய்த பின்னர் பிரதிமா 1969 சனவரி 9 அன்று இறந்தார்.[5]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Pratima Devi (1893-1969)". Visva-Bharati. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  2. Samsad Bangali Charitabhidhan (Biographical Dictionary), Chief Editor: Subodh Chandra Sengupta, Editor: Anjali Bose, 4th edition 1998, (in வங்காள மொழி), Vol I, page 185, ISBN 81-85626-65-0, Sishu Sahitya Samsad Pvt. Ltd., 32A Acharya Prafulla Chandra Road, Kolkata.
  3. Sources of information: Smarak Grantha and When two giants met - Rabindranath Tagore and Albert Einstein
  4. 4.0 4.1 "কবিপুত্র" [Kabiputra] (in Bengali). Anandabazar Patrika. 18 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
  5. 5.0 5.1 Samsad Bangali Charitabhidhan (Biographical Dictionary), Chief Editor: Subodh Chandra Sengupta, Editor: Anjali Bose, 4th edition 1998, (in வங்காள மொழி), Vol I, page 185, ISBN 81-85626-65-0ISBN 81-85626-65-0, Sishu Sahitya Samsad Pvt. Ltd., 32A Acharya Prafulla Chandra Road, Kolkata.
  6. "Rabindranath's Tagore's Descendants". Archived from the original on 2016-03-14.
  7. "Rathindranath Part I". Smarak Grantha. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  8. "Nandini adopted child of Rathindranath and Pratima". Smarak Grantha. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  9. "A Page out of a Radical's Life". The Book Review Literary Trust. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிமா_தேவி_(ஓவியர்)&oldid=3563468" இலிருந்து மீள்விக்கப்பட்டது