பிரதிமா மொண்டல்

இந்திய அரசியல்வாதி

பிரதிமா மொண்டல் (Pratima Mondal)(பிறப்பு 16 பிப்ரவரி 1966) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 முதல் 2019 வரை மேற்கு வங்காளம் ஜெய்நகர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரதிமா மொண்டல் 1966 பிப்ரவரி 16 அன்று ஜெய்நகரில் உள்ள கவுர் தாஹா என்ற சிறிய கிராமத்தில் பெங்காலி இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த சந்திர நாஸ்கரின் மகள் ஆவார். பிரதிமா மொண்டல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு மேற்கு வங்காள குடிமைப்பணி சேவை அதிகாரியாக இருந்தார்.[4][5][6]

அரசியல் வாழ்க்கை

தொகு

பிரதிமா மொண்டல் 2014 மக்களவைத் தேர்தலில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு வேட்பாளராக ஜெய்நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுப் பதிவான வாக்குகளில் 41.71% வாக்குகளான 4,94,746 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் தனது நெருங்கிய போட்டியாளரான புரட்சிகர சோசலிசக் கட்சியின் சுபாசு நாசுகரை 1,08,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mondal, Smt. Pratima". LOK SABHA. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  2. "Pratima Mondal". india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  3. "Pratima Mondal". PRS Legislative Research. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  4. "Pratima Mondal". oneindia. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  5. "Pratima Mondal (Criminal & Asset Declaration)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  6. "Lok Sabha Elections 2014 – Know Your Candidates". Pratima Naskar. All India Trinamool Congress. Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  7. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 21 June 2016.
  8. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிமா_மொண்டல்&oldid=3690165" இலிருந்து மீள்விக்கப்பட்டது