பிரதியூசா

இந்திய நடிகை

பிரதியூசா (29 ஆகஸ்ட் 1981 – 23 பிப்ரவரி 2002) இந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.இவர் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.[1]

பிரதியூசா
பிறப்பு29 ஆகத்து 1981
புவனகிரி, தெலங்கானா, இந்தியா
இறப்பு23 பெப்ரவரி 2002(2002-02-23) (அகவை 20)
ஐதராபாத்து, தெலங்கானா, இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998 – 2002

ஆரம்ப வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை

தொகு

தெலங்கானா மாநிலம் ப்ஹோன்கிரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிரதியூசா பிறந்தார். . அவரது தாயார், சரோஜினி தேவி ஒர் அரசுப் பள்ளி ஆசிரியை. அவரது சகோதரர் பெயர் பிரநீத் சந்திரா (கிருஷ்ணா சந்திரா).

பிரதீயூசா மிர்யாளகுடாவில் உள்ள சந்தோஷ் வித்யா நிகேதன் மற்றும் பிரகாஷ் பொது பள்ளி, .பின்னர் ஹைதராபாதின் தர்னகாவில் உள்ள புனித ஆன்ஸ் உயர்நிலைப்பளியில் பள்ளிப்படிப்பை படித்தார். எஸ்.ஆர் நகரில் உள்ள கௌதமி உண்டு உறைவிடப்பள்ளியில் இடைநிலைக்கல்வியை நிறைவு செய்தார். பின்னர் பஞ்சாரா மலையிலுள்ள ஜே. பி உணவக மேலாண்மையியல் நிறுவனத்தில் . உணவக மேலாண்மையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தொலைக்காட்சி நட்சத்திரம் 2000 என்ற போட்டியில் பிரதியூசா கலந்து கொண்டு மிஸ். லவ்லி ஸ்மைல்.என்ற பட்டத்தை வென்றார்.. அவரது இந்த வெற்றி திரைப்பட உலகிற்கு அழைத்துச் சென்றது. ஒரு கன்னட படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.ஆனால், அதற்கு முன் அவர் இறந்துவிட்டார்.

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

நடிகர் முரளியுடன் ‘மனுநீதி', பிரபுவுடன் ‘சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன்தவசி' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார் பிரதியூசா. 2004 ஆம் ஆண்டு நடிகர் சத்தியராஜின்சவுண்ட் பார்ட்டி படத்தில் நடித்து தாமதமாக வெளிவந்தது. இருப்பினும் இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றன..[2]

இறப்பு

தொகு

2002 பிப்ரவரி 23ஆம் தேதி பிரதியூசா தனது ஆண் நண்பர் சித்தார்த்தா ரெட்டியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றார் . இவர்களது திருமணத்தை பெற்றோர்கள் குடும்பத்தினர்கள் எதிர்த்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த பிறகு சிகிச்சை பலனின்றி பிரதியூசா இறந்து விட சித்தார்த்தா மட்டும் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார் [3] இந்த வழக்கு பரவலாக விவாதிக்கப்பட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. பிரதியூசாவின் உடல் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் இறந்திருக்கக்கூடும் என அறிக்கை தரப்பட்டது [4] மேற்படி அறிக்கையால் பிரதியூசாவின் ஆண் நண்பர் சித்தார்த்தா மீது சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து உடல் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தடயவியல் பிரிவு நிபுணரும், பேராசிரியருமான டி. டி. டோக்ரா என்ற புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் தலைமையில் தடயவியல் ஆய்வு செய்யப்பட்டது. அறிக்கையில் சித்தார்த்தா குற்றவாளி என குறிப்பிடப்பட்டதால்.[5] 2004 ஆம் ஆண்டு சித்தார்த்தா ஐந்து வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது . மேலும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது பிரதியூசாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் , தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறி ரூபாய் 6000 அபராதம் விதிக்கப்பட்டது.[6].[7][8]

மரணத்திற்குப் பிறகு, அவரது தாயார் பிரதியூசாவின் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.[9]

மரணத்தில் சர்ச்சை

தொகு

பிரதியூசா இறந்து 15 ஆண்டுகள் கழித்து அவரது தாயார் சரோஜினி் தேவி தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கழுத்தில் நகக்கீரல்கள் இருந்ததால் கூட்டுப் பாலியல் வன்புணா்வு செய்து கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததார். இதனால் பிரதியூசா மரண விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது.[10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-03-11.
  2. "Sound Party". The Hindu. 2004-08-13. Archived from the original on 2004-08-14. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. "Actress' lover convicted in murder case". Sify.com. Archived from the original on 2012-06-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. TNN (2002-03-06). "Pratyusha case travels at a snail's pace - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  5. "Pratyusha committed suicide, says CBI". The Hindu. 2002-11-07. Archived from the original on 2009-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-01-30.
  6. TNN (2002-03-14). "'Doctor's report on actress death faulty' - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  7. "Pratyusha case: childhood friend Siddhartha convicted". The Hindu. Archived from the original on 2004-03-13. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  8. "Pratyusha Death Secrets". filmfog.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
  9. ns. ".:: Prathyusha Charitable Trust(PCT) ::".
  10. https://www.seithipunal.com/cinema/actress-mother-shocking-news
  11. https://tamil.oneindia.com/news/india/actress-pratyusha-s-mother-interview/articlecontent-pf270818-300288.html

வெளி இணைப்புகள்

தொகு
  • Prathyusha on IMDb
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதியூசா&oldid=4114261" இலிருந்து மீள்விக்கப்பட்டது