போங்கிர், தெலங்கானா

புவனகிரியில் உள்ள ஒரு நகரம்

போங்கிர் என்றும் புவனகிரி என்றும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான தெலுங்காணாவின் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் மாவட்ட தலைமையகம் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 163 இல் அமைந்துள்ள ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் வருகிறது. [1]

சொற்பிறப்பு

தொகு

மேற்கு சாளுக்கிய ஆட்சியாளரான ஆறாம் திரிபுவனமல்லன் விக்ரமாதித்தன் காலத்தில் செதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஒற்றைக்கல் பாறைகளில் ஒன்று போங்கிர் கோட்டையில் உள்ளது. இதனால் இந்த இடத்திற்கு திரிபுவனகிரி என்று பெயரிடப்பட்டது. இந்த பெயர் படிப்படியாக புவனகிரி என்றும் பின்னர் போங்கிர் என்றும் மாறியது. [2]

நிலவியல்

தொகு

போங்கிர் 17.5108 ° N 78.8889 ° E இல் அமைந்துள்ளது. [3] இதன் சராசரி உயரம் 329 மீட்டர் (1,079 அடி) ஆகும்

விளக்கப்படங்கள்

தொகு

நகராட்சி பகுதி 9.63 சதுர கிமீ கொண்டுள்ளது. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [4] போங்கிரின் மக்கள் தொகை 53,339 பேர்ஆகும். [5] ஆண்கள் மக்கள் தொகையில் 51 சதவீதம், பெண்கள் 49 சதவீதம் போங்கிர் சராசரி கல்வியறிவு விகிதம் 70 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரியான 74.04 சதவீதத்தை விடக் குறைவு; ஆண்களின் கல்வியறிவு 78% மற்றும் பெண் கல்வியறிவு 61 சதவீதம் ஆகும். மக்கள் தொகையில் 6 வயதுக்குட்பட்டவர்கள் 12 சதவீதம் பேர் ஆகும்

அரசியல்

தொகு

மக்களவை தொகுதியாக போங்கிர் 2002 ஆம் ஆண்டு வரம்புச் சட்டத்தின்படி 2008 இல் நடைமுறைக்கு வந்தது. பைலா சேகர் ரெட்டி தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் [6]

சட்ட மன்றத்தொகுதி

தொகு

போங்கிர் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தெலுங்கானா சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும். யாதத்ரி போங்கிர் மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது போங்கிர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. 2014 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானா ராட்டிர சமிதியைச் சேர்ந்த பைலா சேகர் ரெட்டி முதல் முறையாக இந்த இடத்தை வென்றார்.

நகராட்சி

தொகு

போங்கிர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. 2000 தேர்தல்களில் தெலுங்கு தேச கட்சி நகராட்சியை கைப்பற்றியது. பென்டா நரசிம்ம (28/03/2000 முதல் 28/03/2005 வரை) நகர மன்றத்தின் தலைவர்களாக பணியாற்றினர். இவர் மக்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 தேர்தல்களில் காங்கிரசு நகராட்சியை கைப்பற்றியது. தொனகொண்டா வனிதா (2007-2009), பாரே ஜாங்கிர் (2009–2011) ஆகியோர் மன்றத்தின் தலைவர்களாக பணியாற்றினர்.

2014 தேர்தல்களில் பாரதிய ஜனதாக் கட்சி வென்றது - 8 இருக்கைகள், தெலுங்கு தேச கட்சி- 7 இருக்கைகள், காங்கிரசு - 7 இருக்கைகள், சுயேச்சைகள் - 6 இருக்கைகள், சிபிஎம் - 1 இருக்கை. நகராட்சியை தனிப்பெருமபான்மை பலம் எந்த கட்சிக்கும் கிடைக்வில்லை.

அருகிலுள்ள நகரங்கள்

தொகு

[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்]] -49 கி.மீ. தொலைவில் உள்ளது
நல்கொண்டா -70 கி.மீ. தொலைவில் உள்ளது
வாரங்கல் -97 கி.மீ. தொலைவில் உள்ளது
சூர்யபேட்டை -104 கி.மீ. தொலைவில் உள்ளது
கரீம்நகர் -143 கி.மீ. தொலைவில் உள்ளது

கலாச்சாரம்

தொகு
 
புவனகிரி கோட்டையின் தொலைதூரக் காட்சி

இரவி நாராயண ரெட்டி, அலிமினெட்டி மாதவ ரெட்டி, பெல்லி லலிதா, பிரத்யுஷா, பென்டா ராமுலம்மா ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் .

நகரத்தில் சில குறிப்பிடத்தக்க அடையாளங்கள் உள்ளன. போங்கிர் கோட்டை அத்தகைய ஒரு அமைப்பாகும். போங்கிர் கோட்டையில் உள்ள மலையேற்றப் பள்ளி மலை ஏறுபவர்களின் பயிற்சி மையமாகும். [7] [8]

குறிப்புகள்

தொகு
  1. "Revenue divisions and mandals in Yadadri district" (PDF). The official website of Yadadri Bhuvanagiri district. Revenue Department, Telangana. 11 October 2016. pp. 3, 4. Archived from the original (PDF) on 23 April 2019. பார்க்கப்பட்ட நாள் 19 May 2019.
  2. "Bhongir Fort is a shutterbug's paradise". The Hindu. 9 October 2004. Archived from the original on 14 அக்டோபர் 2004. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "Bhongir at Fallingrain.com". fallingrain.com.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  5. "Alphabetical list of towns and their population" (PDF). censusindia.gov.in. 8 July 2014.
  6. "Bhongir Assembly Constituency Election Results 2009". Electionaffairs.com. Archived from the original on 2016-08-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
  7. [1] The Hindu 4 October 2013.
  8. "It's the climb!". The New Indian Express.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போங்கிர்,_தெலங்கானா&oldid=3565742" இலிருந்து மீள்விக்கப்பட்டது