பிரதிஷ்டா சர்மா
ஆச்சார்யா பிரதிஷ்டா என்ற பெயரில் பணிபுரியும் பிரதிஷ்ட சர்மா (Pratishtha Sharma), ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் [1] மற்றும் யோகா நிபுணருமாவார். மேலும், இவர் பாரத் கலை நிகழ்ச்சிக் கல்லூரியின் நிறுவனரும் ஆவார்.
பிரதிஷ்டா சரசுவத் | |
---|---|
ஆச்சார்யா பிரதிஷ்டா யோகா கற்பித்தல் | |
பிறப்பு | பிரதிஷ்டா சர்மா |
தேசியம் | இந்தியன் |
பணி | பாரம்பரிய நடனக் கலைஞர், யோகா ஆசிரியர் |
தொழில்
தொகுசர்மா ஒரு யோகா நிபுணராவார். இவர் தனது தந்தையுடனும், புதுதில்லி, குருசங்கர் ஆப்தே கதக் கேந்திராவில் யோகா பயின்றார். ஜீ வலைப்பின்னல் 2007 அக்டோபர் 2 அன்று சர்மாவை "இளைய யோகாச்சார்யா" மற்றும் "மைண்ட் தெரபிஸ்ட்" (மனதிற்கு சிகிச்சை அளிப்பவர்) என்று பெயரிட்டது. இவரது யோகா நிகழ்ச்சியான ஜாகோ பாரத் தியான் யோக் அந்தோலன் என்பது ஜீ ஜாக்ரான் தொலைகாட்சியில் தினமும் மூன்று முறை ஒளிபரப்பப்படுகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவின் கலாச்சார இணைப்பாளர் பதவியில் கதக் கலைஞராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியச் சுற்றுலா அமைச்சகத்தால் பிரபலமான விளம்பர திரைப்படமான வியத்தகு இந்தியாவுக்கான யோகாவில் அமர்ந்திருக்கும் தோரணைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். ஒரு மாணவராக இவர் குரு ராஜேந்திர கங்கனி,[2] குரு ஜெய்கிஷன் மகாராஜ், குரு கீதாஞ்சலி லால் போன்ற கதக் குருக்களுடன் பணிபுரிந்துள்ளார்.[3][4]
இவர் 6000 மணி நேர விரிவுரைகளை வழங்கியுள்ளார். யமுனா நகர், டி.ஏ.வி. கல்லூரி போன்ற பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரையாளர் மற்றும் உந்துதல் பேச்சாளராக அழைக்கப்படுகிறார். இவருக்கு பல தேசிய மற்றும் சர்வதேச கௌரவங்கள் வழங்கப்படுகின்றன. உத்திரபிரதேச அரசாங்கமும் இந்துஸ்தான் செய்தித்தாளும் "மஹிலா சுரக்சா மற்றும் சிகசா சம்மன் 2015" என்பதை வழங்கி கௌரவித்தது. அதே நாளில் 2015இல் அன்னை தெரசாவின் பிறந்த நாள் அன்று கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பணியாற்றியதற்காக தானிக் ஜாக்ரான் என்ற செய்தித்தாள் இவரை கௌரவித்தது.[5] 2016 இல் இவர் "சங்கினி சிறீசம்மன்" மற்றும் அமர் உஜலாவுடன் "நாரி சக்தி சம்மன்" வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[6][7][8][9]
நூலாசிரியர்
தொகுசர்மா யோகா மற்றும் இந்தியாவின் ஜாக்ரான் குழுமத்தின் சாகி இதழ், கவுர்சன் டைம்ஸ் [10] மற்றும் அமெரிக்காவின் ததாஸ்து இதழ் ஆகியவற்றிற்காக கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது 25 வயதில் "மோக்சயாதன் சர்வதேச யோகாச்ரம்" என்ற தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.[11] ஜகார்த்தா, இந்திய தூதரகம் & ஜகார்த்தா, ஜவஹர்லால் நேரு இந்திய கலாச்சார மையம் ஆகியவை வெளியிட்டுள்ள "கதக்கின் அத்தியாவசிய கூறுகள்" என்ற பெயரில் கதக் குறித்த இவரது இருமொழி (ஆங்கிலம் & பஹாசா இந்தோனேசியா) புத்தகம் ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரால் 65 வது குடியரசு தின கொண்டாட்டத்தில் கொடியேற்றும் விழாவின் போது வெளியிப்பட்டது.[12] இவரது சமீபத்திய புத்தகம் யோகா ஃபார் ஹெல்தி லைஃப் என்பது ஆயுஷ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இதன் ஒரு பிரதி இந்தியக் குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் கலாச்சார தூதர்
தொகுகலாச்சார அமைச்சகம், கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பு [13] மற்றும் இவரது தனிப்பட்ட பயணங்கள் மூலமாகவும் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், மற்றும் பரப்புவதற்கும் சர்மா பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.[14] 2018 இல், கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பு மற்றும் மொரீசியஸ் தூதரகம் ஆகியவை ஏற்பாடு செய்த மொரீசியஸ் இந்தியா வாரம் நிகழ்ச்சியிலும்,[15] இந்திய அமைச்சகம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சகம் ஏற்பாடு செய்த 2015 இந்தோனேசியா & இந்தியா என்ற திருவிழாவிலும் இவர் பங்கேற்று, பரப்புரைத்தார்.[16] மொரீசியஸின் தலைவர் முன்னிலையில் மொரீசியஸில் நடைபெற்ற 2018 சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் அமர்வு நடத்தும் குருவாக இருந்த இவர், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் மொரிசியஸ் ஆயுர்வேத சங்கத்தால் "தன்வந்திரி ஆயுர்வேத சம்மன்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[17] மொரீசியஸில் நடைபெற்ற 11 வது உலக இந்தி மாநாட்டின் வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.[18]
நடன இயக்குநர் மற்றும் கலைஞர்
தொகுசர்மா பல நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். குறைந்தது 25 நடன தயாரிப்புகளுக்கு கருத்தாக்கம் செய்து நடனமாடியுள்ளார். 2014 இல் நடந்த ஆசியான் கூட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியை இவர் வழங்கியுள்ளார். இவர் இந்திய கடற்படைக் கப்பலான சங்கல்ப் என்பதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவுக்குப் பயணம் செய்து, மிஸ் இந்தியா இந்தோனேசியா போட்டியில் 2015இல் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[19][20] கதக் நடனத்துடன் கூடிய இசைக் கதையான "கிருஷ்ணா தி பெர்பெக்சன்" என்ற இவரது மிகவும் பிரபலமான நடனக் கலை சண்டிகரில் அரங்கேறியது. மேலும் இது உலகளவில் 150 க்கும் மேற்பட்ட முறை நிகழ்த்தப்பட்டது.[21][22]
குறிப்புகள்
தொகு- ↑ "Kathak dancer enthralls audience". Hindustan Times. 1 June 2007 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924202759/http://www.highbeam.com/doc/1P3-1281132031.html. பார்த்த நாள்: 15 January 2013.
- ↑ "Entertainment Delhi\Dance: Curtains up". தி இந்து. 30 September 2005. Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2013.
With her electric freezes on sama and smiling ease while performing, talented Pratishtha Sharma, trained under Guru Rajendra Gangani, with the innovative flair for trying out her own thematic numbers, needs to bring in a quality of response into her presentation, which now has a `bedam' breathless quality of unceasing speed giving the viewer a brain fag.
- ↑ "ArtScape biography". பார்க்கப்பட்ட நாள் 15 January 2013.
- ↑ "Acharya Pratishtha biography". Indian Kalakar. பார்க்கப்பட்ட நாள் 15 January 2013.
- ↑ "Acharya Pratishtha honored for her contribution in field of culture, yoga". Danik Jagran news paper. 5 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ In News Paper Amar Ujala for Nari Shakti award/http://epaper.amarujala.com/sc/20161007/06.html?format=img
- ↑ hindustan front page news about honor/http://epaper.livehindustan.com/story.aspx?id=478281&boxid=104152632&ed_date=2015-08-06&ed_code=49&ed_page=1 பரணிடப்பட்டது 2016-10-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ news about honor announcement in hindustan times/http://epaper.livehindustan.com/story.aspx?id=476891&boxid=98137504&ed_date=2015-08-05&ed_code=49&ed_page=6 பரணிடப்பட்டது 2016-10-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-13. பார்க்கப்பட்ட நாள் 2020-02-05.
- ↑ "THE Gaursons Times :- A Gaursons India Limited Publication (Fortnightly News Paper)". gaursonstimes.com. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
- ↑ Acharya Pratishtha (8 January 2013). "Yoga for the busy woman" (PDF). Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
- ↑ Her Book launched by ambassador of India News from Jakarta clearly mentioned about book name etc/https://www.oneindia.com/international/republic-day-celebrated-with-fervour-in-jakarta-1383431.html
- ↑ Ministry of External affairs (1 Mar 2010). "Acharya Pratishtha visited Gulf countries for performance through ICCR" (PDF). Archived from the original (PDF) on 3 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Lemauricien (14 April 2018). "Acharya Pratishtha during launchin of India week in Mauritius". பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ ICCR, Government of India (10 January 2015). "Acharya Pratishtha Performed in international women foundation day, Jakarta" (PDF). Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ High Commission of India, Mauritius Ministry of External Affairs India (1 December 2017). "Director IGCIC". பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ "Acharya Pratishtha Honored in Mauritius". Hindustan Newspaper. 10 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ ICCR, Government of India (21 August 2018). "Acharya Pratishtha Appointed As Member Of Steering Committee Of 11th World Hindi Conference". பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ Anon (24 September 2013). "चीफ कोरियोग्राफर बनी प्रतिष्ठा" (in Hindi). Sarahanpur (Jagran). http://www.jagran.com/uttar-pradesh/saharanpur-10748149.html. பார்த்த நாள்: 2 April 2019. – News with photo about her appointed as the chief choreographer at festival weave of friendship organized by government of India with joint venture with government of Indonesia to celebrate the year of 100th years of Indian film Industry
- ↑ Anon (November 2014). "Kathak Dance Performance" (in English). Newsletter November-December 2014 (Indian Council for Cultural Relations) இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180928192820/http://iccr.gov.in/sites/default/files/newsletter_pdfs/News%20Letter.pdf. பார்த்த நாள்: 2 April 2019. – News on government of India portal of ICCR Ministry of external affairs india news letter in which news on her when Ms. Pratishtha Sharma performed with her students for charity function by International women foundation in front of president of Indonesia Mr.Jokowi as chief Guest
- ↑ Anon (1 February 2017). "Krishna's Life Depicted Through Kathak" (in English). The Tribune (India) | Chandigarh | Community. http://www.tribuneindia.com/news/chandigarh/community/krishna-s-life-depicted-through-kathak/357870.html. பார்த்த நாள்: 2 April 2019. – News about her presentation "Krishan-the perfection" with her 14 students at the Tagore theatre, Chandigarh, India during the "Basant festival". She performed this ballet more than 100 times in many countries including around the Gulf.
- ↑ Anon (1 February 2017). "Dance of Faith" (in English). Indian Express. http://epaper.indianexpress.com/1089984/Chandigarh/February-1,-2017#page/27/2. பார்த்த நாள்: 2 April 2019. - Photograph with caption
வெளி இணைப்புகள்
தொகு- Acharya pratishtha website பரணிடப்பட்டது 2014-03-31 at Archive.today