பிரதீபா ஹரி
பிரதீபா ஒரு இந்திய அரசியல்வாதியும் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தின் காயங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2] முன்னதாக இவர் ஆலப்புழா மாவட்ட ஊராட்சித் தலைவராக 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். இவர் 2005–2010 வரை உள்ள காலகட்டத்தில் தகழி கிராம ஊராட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.
பிரதீபா | |
---|---|
கேரள சட்டமன்றசட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூன் 2016 | |
முன்னையவர் | சி. கே. சதாசிவன் |
தொகுதி | காயங்குளம் |
ஆலப்புழா மாவட்டப் பஞ்சாயத்து தலைவர் | |
பதவியில் 2010 –2015 | |
தகழி கிராம ஊராட்சித் தலைவர் | |
பதவியில் 2005 –2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மே 1977 தகழி, ஆலப்புழா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர்(கள்) | கே. ஆர். ஹரி (தி. 2001; ம.மு. 2018) |
பிள்ளைகள் | 1 |
வேலை |
|
இணையத்தளம் | advprathibha.com |
தனிநபர் விவரங்கள்
தொகுஇவர் ஆலப்புழா மாவட்டத்தில் தகழி கிராமத்தில் வி. கே. புருசோத்தமன் மற்றும் ஜே. உமையம்மா ஆகியோருக்கு 1977 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் மகளாகப் பிறந்தார். இவர் சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 2000-2005 ஆம் ஆண்டு வரை தகழி கிராம ஊராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஆலப்புழா மாவட்ட ஊராட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் கேரள சட்டமன்றத் தொகுதியின் 14ஆவது மற்றும் 15-ஆவது சட்டமன்றங்களுக்கு காயங்குளம் சட்டமன்றத் தொகதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
ஆண்டு | தொகுதி | எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் | வாக்கு வித்தியாசம் | வெற்றி/தோல்வி |
---|---|---|---|---|
2016 | காயங்குளம் | வழக்குரைஞர் எம் லிஜு (இ. தே. கா) | 11857 | வெற்றி[4] |
2021 | காயங்குளம் | அரிதா பாபு (இ. தே. கா) | 6298 | வெற்றி[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Niyamasabha" (PDF). 1 September 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Kerala Assembly Election 2016 Results". கேரள சட்டமன்றம். பார்க்கப்பட்ட நாள் 8 June 2016.
- ↑ "Welcome to Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
- ↑ "Kayamkulam Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.