பிரத்திம்யும்மனன்
பிரத்தியுமனன் (Pradyumna) (சமக்கிருதம்: प्रध्युम्न), கிருட்டிணன் – ருக்மணி இணையரின் மகன் ஆவார். அழகு மிக்க இவர் மன்மதனின் அம்சமாக பிறந்தவர் என கருதப்படுகிறார். ருக்மணியின் அண்னனும் விதர்ப்ப நாட்டு மன்னருமான ருக்மியின் மகளும், ரதியின் அம்சமான ருக்மாவதியை, பிரத்தியுமனனுக்கு மணமுடித்தனர். பிரத்தியுமனன் – ருக்மாவதி இணையருக்கு பிறந்தவரே அனிருத்தன் ஆவார்.[1] [2]
பிரத்தியுமனன் (சமசுகிருதம்: प्रध्युम्न) | |
---|---|
பறவை வடிவத்தில் உள்ள நிகும்பன் எனும் அரக்கனுடன் போரிடும் கிருஷ்ணர் மற்றும் பிரத்தியுமனன். | |
தகவல் | |
தலைப்பு | கிருஷ்ணரின் மகன் |
துணைவர்(கள்) | ருக்மாவதி (ருக்மியின் மகள்) |
பிள்ளைகள் | அனிருத்தன் |
வைணவ மரபில் சங்கர்சனர்[3], பிரத்தியுமனன் மற்றும் அனிருத்தன் ஆகியோர் வாசுதேவ கிருஷ்ணனின் அம்சங்களாக போற்றப்படுகிறார்கள்.
மறைவு
தொகுகுருச்சேத்திரப் போருக்குப் பின்னர் கிருட்டிணன் மீது கோபமுற்ற காந்தாரி, தனது பிள்ளைகள் எவ்வாறு இறந்தார்களோ அது போலவே யாதவர் குலமும் அழியும் என சாபமிட்டாள்.[4] மேலும் துவாரகையின் சில யாதவ இளைஞர்கள், கிருஷ்ணரின் மூத்த மகனான சாம்பனை கருவுற்ற பெண் போல் வேடமிட்டு, தவக்கோலத்தில் இருந்த முனிவர்கள் முன் நிறுத்தி, இக்கர்ப்பிணிக்கு என்ன குழந்தை பிறக்கும் கேட்க, கோபமுற்ற முனிவர்கள், உங்கள் குலத்தை பூண்டோடு அழிக்க வல்ல இரும்பு உலக்கை பெற்றெடுப்பாள் என சாபமிட்டனர்.
சாம்பன் கருவுற்று பெற்ற இரும்பு உலக்கையை யாதவர்கள் பொடியாக்கி துவாரகைக் கடலில் கரைத்தனர். பின்னர் கடற்கரையில் ஒதுங்கிய இரும்புத் துகள்கள், கோரைப்புற்களாக அடர்த்தியாக வளர்ந்து நின்றன. ஒரு சமயம் கிருதவர்மன் மற்றும் சாத்தியகி தலைமையில் அவ்விடத்தில் கூடிய அனைத்து யாதவர்கள் அளவு மீறி மது அருந்திய போதையில், ஒருவருடன் ஒருவர் வீண் விவாதம் செய்து சண்டையிட்டு கொண்டனர். ஒரு காலகட்டத்தில் இரும்பு ஈட்டிகள் போன்ற கோரப்புற்களால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்ந்தனர்.
இச்சண்டையில் யாதவ முதியோர்கள், பெண்கள், குழந்தைதள் தவிர பிரதியும்மனன் உள்ளிட்ட சாம்பன், அனிருத்தன், சாத்தியகி, கிருதவர்மன் போன்ற அனைத்து யாதவர்களும் மாண்டனர்.
இந்நிகழ்வு மகாபாரத காவியத்தின் மௌசால பருவத்திலும், பாகவத புராணத்தின் 11வது நூலான உத்தவ கீதையின் முதலாவது மற்றும் முப்பதாவது அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
தொகு- வாசுதேவன்
- உத்தவ கீதை (முதல் அத்தியாயம் மற்றும் முப்பதாம் அத்தியாயம்)
- மௌசல பருவம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Detailed history of Pradyumna
- ↑ http://www.mythfolklore.net/india/encyclopedia/pradyumna.htm
- ↑ "SANKARSHANA – "THE BEHOLDER OF THE UNIVERSE"". Archived from the original on 2017-06-04. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.
- ↑ John Murdoch (1898), The Mahabharata - An English Abridgment, Christian Literature Society for India, London, pages 107-108