பிரத்யூஷ் (Pratyush, Prathyush) என்பது புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு மீக்கணினி ஆகும்.[3] 2018 சனவரி படி இந்தியாவில் உள்ள மீக்கணினிகளிலேயே அதிக வேகம் கொண்டது இது ஆகும். இதன் வேகமானது 6. 8 மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் கொண்டது ஆகும். இந்தத் திட்டமானது 2018 சனவரி 8 இல் அறிமுகம் செய்யப்பட்டது.[1] பிரத்யூஷ் என்பதற்கு சூரியன் என்பது பொருளாகும்.

பிரத்தியூசு
Pratyush
செயல்8 சனவரி 2018
இடம்புனே
நொய்டா
வேகம்6.8 பெட்டாஃபுலொப்சு[1]
செலவுரூ 450 கோடிe[2]
நோக்கம்காலநிலை எதிர்வுகூறல், தட்பவெப்பநிலை ஆய்வு

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பல்மிதப்புப்புள்ளிச் செயல்பாடுகள் கொண்ட முதல் மீக்கணினியாகும். இந்தியாவின் காலநிலை, பருவநிலை, மாற்றங்களை கண்காணிப்பதற்கு இவை பயன்படுகின்றன.[2]

பருவகாலம், அதீத காலநிலைகள், சூறாவளிகள், ஆழிப்பேரலைகள், நிலநடுக்கங்கள், காற்றின் ஈரப்பதம், மின்னல், மீன்பிடித்தொழில், வெப்பம் மற்றும் குளிர்ந்த அலைகள், வெள்ளம், மற்றும் வறட்சி போன்ற சூழ்நிலைகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு இவை பயன்படுகிறது.[4] இவ்வகையான கணினியை நாட்டிற்கு வழங்கிய அமெரிக்கா, லண்டன், ஜப்பான், போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது நாடாக உள்ளது.

இவற்றையும் காண்க தொகு

இந்தியாவில் மீக்கணினி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "India unveils Pratyush, its fastest supercomputer yet". தி இந்து. 2018-01-08. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-01-26.
  2. 2.0 2.1 "Pratyush launched as India's fastest supercomputer yet". தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ். 2018-01-09. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-01-26.
  3. "Pratyush, India's Fastest Supercomputer, Established At Pune's IITM". என்டிடிவி. 2018-01-09. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-01-26.
  4. "Pratyush launched as India's fastest supercomputer yet". The Financial Express (India). 2018-01-09. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரத்யூஷ்&oldid=3776277" இலிருந்து மீள்விக்கப்பட்டது