பிரபாகர் கோன்கர்
பிரபாகர் பாண்டுரங் கோன்கர் (Prabhakar Pandurang Gaonkar) (4 ஏப்ரல் 1964 - 14 செப்டம்பர் 2012) கோவாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார், 1999 முதல் 2002 வரை சாங்க்யும் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1] [2]
பிரபாகர் கோன்கர் | |
---|---|
கோவாவின் சட்டமன்ற உறுப்பினர | |
பதவியில் சூன் 1999 – 2002 | |
முன்னையவர் | பாண்டு நாயக் |
பின்னவர் | வாசுதேவ் கோன்கர் |
தொகுதி | சாங்க்யும் சட்டமன்றத் தொகுதி |
பெரும்பான்மை | 3,498 (28.79%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரபாகர் பாண்டுரங் கோன்கர் 4 ஏப்ரல் 1964 சாங்க்யும், கோவா (மாநிலம்), இந்தியா |
இறப்பு | 14 செப்டம்பர் 2012 சிரோடா, கோவா, இந்தியா | (அகவை 48)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (1999–2002) |
துணைவர் | சுனந்தா கோன்கர் |
பிள்ளைகள் | 2 |
வேலை | அரசியல்வாதி |
தொடக்க கால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபிரபாகர் பாண்டுரங் கோன்கர் கோவாவில் உள்ள சாங்க்யுமில் பிறந்தார். இவர் தனது உயர்நிலைப் பள்ளி இறுதிப்படிப்பினை முடித்தார். இவர் சுனந்தா கோன்கரை மணந்தார், இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர்.
தொழில் வாழ்க்கை
தொகு1999 ஆம் ஆண்டு கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் சாங்க்யும் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோன்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சத்யவான் பத்ரு தேசாயை 787 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இறப்பு
தொகுசிரோடாவில் உள்ள காமாக்சி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சில நாட்கள் கோன்கர் சிகிச்சை பெற்று வந்தார். 14 செப்டம்பர் 2012 அன்று, கோன்கர் ஒரு சிறிய நோயால் இறந்தார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்குகள் மறுநாள் நடைபெற்றது.
எதிர்வினைகள்
தொகுஇவரது மரணத்திற்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இரங்கல் தெரிவித்ததுடன், கரும்பு விவசாயிகள் மற்றும் சலாலிம் அணை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் உட்பட பல பிரச்சினைகளை கோன்கர் எழுப்பியதாகக் கூறினார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Goa Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
- ↑ "Prabhakar Gaonkar, former BJP MLA from Sanguem, passed away after a brief illness, on Friday afternoon. He was 46". பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
- ↑ "Ex-Sanguem MLA Gaonkar dies at 46" (in ஆங்கிலம்). September 15, 2012. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.