பிரபா சங்கர் மிசுரா
பிரபா சங்கர் மிசுரா (Prabha Shankar Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். 1936 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பி. எசு. மிசுரா என்ற பெயரால் பொதுவாக அறியப்படுகிறார். கல்கத்தா மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்.
பிரபா சங்கர் மிசுரா Prabha Shankar Mishra | |
---|---|
தலைமை நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1997–1998 | |
முன்னையவர் | வி. நா. கரே |
பின்னவர் | அசோக் குமார் மாதூர் |
தலைமை நீதிபதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1995–1997 | |
முன்னையவர் | சையத் சாகிர் அகமது |
பின்னவர் | உமேசு சந்திர பானர்ச்சி |
நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1990–1995 | |
நீதிபதி பாட்னா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1982–1990 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஆகத்து 1936 |
இறப்பு | 1 சூலை 2012 |
முன்னாள் கல்லூரி | பட்னா பல்கலைக்கழகம் |
தொழில் வாழ்க்கை
தொகுபிரபா சங்கர் மிசுரா பாட்னா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முதுநிலை பட்டமும் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டமும் பெற்றார்.[1] பாட்னா உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெறத் தொடங்கிய இவர், 1982 ஆம் ஆண்டில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், பின்னர் 1995 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1997 ஆம் ஆண்டில் இவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். ஓய்வு பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றத்திற்கு நியமனங்களை எதிர்த்து நீதிபதி மிசுரா 1998 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதியன்று தனது பதவி துறப்பை சமர்ப்பித்தார். இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்ட விதத்தை இவர் விமர்சித்தார்.[2] பதவி விலகலுக்குப் பிறகு இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பயிற்சி பெறத் தொடங்கினார்.[3] தனது 76 ஆவது வயதில் 2012 ஆம் ஆண்டில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prabha Shanker Mishra dead". The Hindu. 1 July 2012. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/prabha-shanker-mishra-dead/article3592088.ece.
- ↑ "World: South Asia, Indian judge resigns". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.
- ↑ "Ex-Chief Justice P.S. Mishra is Dead". பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.