பிரபா பாரதி
பிரபா பாரதி (Prabha Bharti-இறப்பு 2000) 1960 முதல் 1990 வரை புகழ்பெற்ற இந்திய கவ்வாலி மற்றும் கசல் பாடகி ஆவார்.[1][2] இந்தியாவில் முதல் பெண் கவ்வால்-பாடகராக இருந்தார் பிரபா. கவ்வாலி பாரம்பரியமாக ஆண் பாடகர்களின் காப்பகமாக இருக்கும் சூபித்துவ பக்தி இசை ஒரு வடிவமாகும்.[3] தனது இசைத்தொகுப்பான "ரங்-இ-கவ்வாலி" (1978), கவாலீஸ், "சாப் திலக்" மற்றும் "மை நி மை", [4] தவிர, "பிரபா பாரதி கசல் & கவாலி" என்ற இசைத்தொகுப்பு, கேசர் சிங் நருலா இசையுடன் சரிகம (எச். எம். வி-இ. எம். ஐ. ஐ) வெளியிட்டது.
தொழில் வாழ்க்கை
தொகுபிரபா தனது இசை வாழ்க்கையைத் தொடங்கியபோது, இவர் முட்டுக்கட்டையாக அதிகமாக இருப்பதை உணர்ந்து கொண்டார், இருப்பினும் பின்னர் பெண் கவ்வால்களின் போக்கு பிரபலமானது. பாலிவுட்டில் பிலிமி கவாலி பாலினப் போரைச் சித்தரிக்கத் தொடங்கியது, இதில் ஆண் மற்றும் பெண் கவ்வால் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர்.[1] ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த இவர், சூஃபி வட்டாரங்களில் விரும்பப்படும் பாடகியாக இருந்தார். மேலும் வணிக மற்றும் தனியார் இடங்கள் மற்றும் புனிதத் தலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
1970கள் மற்றும் 1980களில் இவர் தொழில் வாழ்க்கையின் உச்சத்திலிருந்தபோது, தில்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பெரிய நகரங்களில் முன்னணி கவ்வாலாக இருந்தார். உஸ்தாத் சோட்டே உசாஃப், நசீர் பாரதி, அப்சல் இக்பால் மற்றும் இமாம் கான் உள்ளிட்ட ஆண் கவ்வால்களுக்கு எதிரான பல கவ்வாலி போட்டிகளில் வென்றார். 1971 இந்திய-பாக்கித்தான் போரின் போது இந்தியத் தரைப்படை வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இவர் கச்சேரிகளையும் ஏற்பாடு செய்தார்.[5] 1980ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய மக்கள் தொடர்புத் துறை குழு நிதியுதவியுடன் துபாய், குவைத், திமிஷ்கு, அபுதாபி மற்றும் மஸ்கத் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இவரது குழு தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது.[6][7]
பாலிவுட் பின்னணி பாடகராகவும் ஒரு சில பாடல்களை பிரபா பாடினார். இவர் 1970 முதல் 1980களில் செழித்து 1990கள் வரை சுறுசுறுப்பாக இருந்தார். இவர் மும்பை அந்தேரியில் வசித்து வந்தார். பிரபா 2000களின் பிற்பகுதியில் இறந்தார்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Deepika Vij (March 3, 2000). "Qawwali struggling to retain form". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.
- ↑ Alokparna Das (Dec 14, 2008). "Different pitch". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.
- ↑ "Prabha Bharti Ghazal & Qawali - Bollywood Ost Lp - Kesar Singh Narula". பார்க்கப்பட்ட நாள் July 4, 2013.
- ↑ "Range Qawwali (1978)". Delhi Public Library. பார்க்கப்பட்ட நாள் July 5, 2013.
- ↑ Sainik Samachar: The Pictorial Weekly of the Armed Forces, 1993, p. 20, பார்க்கப்பட்ட நாள் 5 July 2013
- ↑ Cultural News from India. Indian Council for Public Relations. 1980. p. 78. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
- ↑ Indian and Foreign Review. Publications Division of the Ministry of Information and Broadcasting, Government of India. 1980. p. 29. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
- ↑ Tripathi (March 5, 2011). "Song and struggle". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/song-and-struggle/article1510780.ece. பார்த்த நாள்: 4 July 2013.
- ↑ Rubeena Film Directory. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Prabha Bharti at AllMusic
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரபா பாரதி