பிரம்மகுலம்
பிரம்மகுலம் (Brahmakulam) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.
பிரம்மகுலம் Brahmakulam | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருச்சூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 13,026 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு10.577180° வடக்கு 76.052840° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கர்தான் பரவியுள்ளது.
மக்கள் தொகையியல்
தொகுபிரம்மகுலம் என்ற பெயர் பிரம்மா மற்றும் குலம் என்ற இரு சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மா என்ற முதல் சொல்லானது பிரம்மா என்ற கடவுளுடன் தொடர்புடையது அல்லது பிரம்மாவை வழிபடுகின்ற பக்தரைக் குறிக்கின்றது. குலம் என்ற சொல் இதே கொள்கையைக் கொண்ட குழுவினர் அல்லது சமுதாயத்தைக் குறிக்கிறது. பிராமன்கள் ஆக்ரமித்த ஒரு பகுதி பிரம்ம குலம் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். எப்படியிருப்பினும் இப்பெயர் காரணம் குறிப்பிடுகின்ற பொருள் ஒன்றேயாகும். இச்சிறிய ஊரில் பல இந்துக் கோவில்களும் பிரச்சார வழிபாட்டிடங்களும் அமைந்துள்ளன. பிராமன்கள் குடும்பத்தினர் தொடர்ச்சியாக இவ்வூரில் வசித்து வருகின்றனர். தாங்களும் இவ்வூருக்கான பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாட்டுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டு, கோவில்களுடன் தொடர்புடைய சமூகத்தினர் பலர் பிரம்ம குலம் என்ற பெயரை மாற்றுவது தொடர்பாக சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] பிரம்ம குலம் நகரத்தின் மக்கள் தொகை 13,026 ஆகும். இத்தொகையில் 47 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 53 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 85% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 86% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 83% ஆகவும் இருந்தது. மக்கள் தொகையில் 11% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
சுற்றுலா
தொகுகுருவாயூர் கோவில், பவரட்டி தேவாலயம் போன்ற இடங்களுக்கு ஆன்மீகப் பயணம் செல்லும் வழியில், பல ஆன்மீக தலங்களுடன் பிரம்மகுலம அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.