பிரம்மதேசம் கைலாசநாதசுவாமி கோயில்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பிரம்மதேசம் கைலாசநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். [2] அப்பர் பாடிய பெருமையுடையது. [3]

அருள்மிகு கைலாசநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:சன்னதிதெரு, பிரம்மதேசம், அம்பாசமுத்திரம், அம்பாசமுத்திரம் வட்டம்
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதசுவாமி
தாயார்:பெரியநாயகி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கைலாசநாதசுவாமி, பெரியநாயகி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், சரஸ்வதி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்

தொகு

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. அயனீச்சரம் - (பிரமதேசம்), தேவார வைப்புத்தலங்கள்

வெளி இணைப்புகள்

தொகு