பிரம்மபூர், பிகார்
பிரம்மபூர் (Brahmapur) என்பது பீகார் மாநிலத்தின் பக்சார் மாவட்டத்தில் ஒரு பெரிய கிராமமும், அதனுடன் தொடர்புடைய சமூக மேம்பாட்டுத் தொகுதியுமாகும். [1] இது சிவன் கோயில், அதன் மத நடைமுறைகள், கால்நடை கண்காட்சிக்கு பெயர் பெற்றது . சிவன் கோவிலில் மதச் சடங்குகளை செய்ய மக்கள் பிரம்மபூருக்கு வருகிறார்கள்.
பிரம்மபூர் | |
---|---|
நகரம் | |
Map of Brahmapur in Brahmapur block | |
ஆள்கூறுகள்: 25°21′N 84°11′E / 25.35°N 84.18°E | |
நாடு | India |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | பக்சர் |
ஏற்றம் | 58 m (190 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,727 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
• உள்ளூர் மொழி | போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
இணையதளம் | www |
2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2,554 வீடுகளில் பிரம்மபூரின் மக்கள் தொகை 17,057 ஆகவும், 28,826 வீடுகளில் தொகுதியின் மொத்த மக்கள் தொகை 196,070 ஆகவும் இருந்தது. [2]
சொற்பிறப்பியல்
தொகுபிரம்மபூர் என்பது சமசுகிருதத்தில் " பிரம்மாவின் இடம்" என்று பொருள்படும். இந்து சமய இதிகாசக் கூற்றுப்படி, இந்த நகரம் பிரம்மாவால் நிறுவப்பட்டதால் இது பிரம்மபூர் என்ற பெயரை கொண்டுள்ளது. ("பிரம்மா" என்பது பிரம்மாவையும் "பூர்" என்றால் இடம் என்பதையும் குறிக்கிறது).
பிரம்மபூரில் வசிப்பவர்கள் போஜ்புரி பேச்சுவழக்கில் பேசுகிறார்கள். போஜ்புரியில், இந்த நகரம் சில நேரங்களில் பராம்பூர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நிலவியல்
தொகுபிரம்மபூர் 25 ° 35'57 "N 84 ° 18'5" E [3] அமைந்துள்ளது. இது இரகுநாத்பூர், பூராவா, நிமேஜ், பலுவா, உமேத்பூர், இராம்கர், கராத்தா, கெய்காட் போன்ற பல சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. மலைகள் இல்லாத நிலப்பரப்பு மிகவும் தட்டையானது.
போக்குவரத்து
தொகுபிரம்மபூரை நேரடியாக இரயிலில் அணுக முடியாது. அதற்கு பதிலாக, பயணிகள் பிரம்மபூரிலிருந்து 3 கி. மீ. அருகிலுள்ள இரகுநாத்பூர் இரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். பிரம்மபூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 84 உடன் இணைக்கப்பட்ட சாலைகள் மூலம் இதை நேரடியாகவும் அடையலாம். [4]
மருத்துவமனைகள்
தொகுபிரம்மபூரின் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரகுநாத்பூரில் அமைந்துள்ளது. ஆனால் பிரம்மபூரில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
சுற்றுலா
தொகுபிரம்மபூர் மதச் சுற்றுலாவின் மையமாகும். அர்ரா (போஜ்பூர்) மாவட்டம், பக்சர் மாவட்டம், பலியா மாவட்டம், சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சிவபெருமானை வணங்க அல்லது கோவிலில் திருமணம் செய்து கொள்ள வருகிறார்கள். பிரம்மபூர் மக்கள் ஒரு கால்நடை கண்காட்சியை ஏற்பாடு செய்கிறார்கள். அங்கு பீகாரிலிருந்தும், உத்தரபிரதேசத்திலிருந்தும் விவசாயிகள் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்புக்காக கால்நடைகளை வாங்க வருகிறார்கள். இந்து மாதமான பங்குனி மாதக் கால்நடை கண்காட்சி பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் மிகவும் பிரபலமானது. குதிரைகளும், யானை|யானைகளும்]], ஒட்டகங்களும் இந்த கண்காட்சியில் வாங்கி விற்கப்படுகின்றன. அக்டோபர் முதல் சூன் வரை பிரம்மபூர் சுற்றுப்பயணங்களுக்கு சிறந்த நேரமாகும். இருப்பினும், மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது பிரம்மபூருக்கு சுற்றுப்பயணங்கள் ஏற்பாடு செய்யலாம். இப்பகுதியின் முக்கிய திருவிழாக்கள் கார் திருவிழா, தசரா, தாரதரினி விழா, தக்குரானி யாத்திரை, புடா, கம்பேசுவரி யாத்திரை ஆகியவை அடங்கும்
பொருளாதாரம்
தொகுஇதன் மக்கள் முதன்மையாக விவசாயத்தையும், குறைந்த அளவிற்கு சுற்றுலாவையும் சார்ந்திருக்கிறார்கள். அண்மையில், மக்கள் வேறு இடங்களில் சிறந்த வேலை வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், கிராமப்புற பீகாரின் மற்ற பகுதிகளைப் போலவே பிரம்மபூரிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். மேலும் இரண்டு திரையரங்கங்கள், ஒரு வணிக வளாகம், மாருதி வாகன விற்பனையகம், ஐந்து வங்கிகள் ஆகியவை உள்ளன.
மொழிகள்
தொகுஇங்குள்ள மக்கள் பொதுவாக போஜ்புரியைப் பேசுகிறார்கள். மேலும்,இந்தி, உருது, ஆங்கிலம் போன்றவற்றையும் ஓரளவிற்கு பேசுகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Brahmapur Block". Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.
- ↑ "Census of India 2011: Bihar District Census Handbook - Buxar, Part A (Village and Town Directory)". Census 2011 India. pp. 19–20, 23–98, 254–309, 681–82, 730–746. பார்க்கப்பட்ட நாள் 3 July 2020.
- ↑ "Co-ordinates of Brahmapur". wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.
- ↑ "National Highway No. 84". Wikimapia. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.