பிரய்வால் சாத்திரி

பிரய்வால் சாத்திரி (Prajval Shastri) இந்திய வானியற்பியல் கழகத்தில் வானியற்பியலாளராகப் பணிபுரிகிறார், இ

பிரய்வால் சாத்திரி (Prajval Shastri) இந்திய வானியற்பியல் கழகத்தில் வானியற்பியலாளராகப் பணிபுரிகிறார், இவர் மீப்பொருண்மை இயக்கும் முனைவுறு பால்வெளிக்கரு நிகழ்வில் ஆய்வு செய்கிறார். இதற்கு இவர் கதிரியல் முதல் X-கதிர் வரை பல மின்காந்த அலைநீளங்களின் நோக்கீடுகளைப் பயன்படுத்துகிறார்.[1]

பிரய்வால் சாத்திரி
Prajval Shastri
பிறப்புமங்களூர்
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்இந்திய வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை., டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
ஆய்வு நெறியாளர்விஜய் கபாகி
அறியப்படுவதுபுறப் பால்வெளி வானியல், முனைவுறு பால்வெளிக்கரு

இளமையும் கல்வியும்

தொகு

சாத்திரி மங்களூரில் பிறந்து வளர்ந்தார். பள்ளிபடிப்பு முடித்ததும் மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மங்களூர் புனித அகனேசு கல்லூரியில் இயர்பியல் சார்ந்த அறிவியல் புலங்களில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் பிறகு இயற்பியல் மூதறிவியல் பட்டம் பெற மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார். இவர் முனைவர் பட்டத்தை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் 1989 இல் முடித்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "முனைவுறு பால்வெளிக்கருவில் சார்பியல் ஒளிக்கற்றை (Relativistic Beaming in Active Galactic Nuclei)" என்பதாகும். இவரது வழிகாட்டி விஜய் கபாகி ஆவார்.

நடப்பு ஆராய்ச்சி

தொகு

இவரது நடப்பு ஆராய்ச்சி சிறப்புப் புலமாக முனைவுறு பால்வெளிக்கரு (முபாக) நிகழ்வு அமைகிறது. இவரது ஆராய்ச்சிப் புலங்கள் பின்வருமாறு:

  • முபாக உமிழ்வுக் கோட்டுப் பகுதிகள் (தொகுபுலக் கதிரியல் படப்பிடிப்பு, WiFeS, சைடிங் சுப்பிரிங்)
  • முபாக வில் இருந்தான X-கதிர் உமிழ்வு (XMM-Newton, சுசாகு)
  • கதிரியலாக அமைதியான முபாக ([[மீநீள அடிக்கோட்டு குறுக்கீட்டளவி, GMRT)
  • முபாகவில் இருந்தான வளிம வெளியேற்றம் ( புற ஊதாக் கதிருக்கு அப்பாலான கதிர்நிரல் தேட்டக்கலம்)
  • பிளசார் மாறுமை: WEBT கண்காணிப்புப் பரப்புரைகள் (வைணு பாப்பு, ஆன்லே தொலைநோக்கிகள்)[2]

தொழில்முறை உறுப்பாண்மைகள்

தொகு

இவர் பின்வரும் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்:

  • பன்னாட்டு வானியல் ஒன்றியம்
  • ஒருங்கிணைப்புக் குழு, வான்புள்ளியியல், வான்தகவலியல் பணிக்குழு, பன்னாட்டு வானியல் ஒன்றியம்
  • ஒருங்கிணைப்புக் குழு, ஆணையம் 40 (கதிர்வானியல்), பன்னாட்டு வானியல் ஒன்றியம்
  • இந்திய வானியல் கழகம்
  • இந்திய இயற்பியல் கழகம் [2]

வெளியீடுகள்

தொகு

இவரது சில ஆய்வுக் கட்டுரைகள் பின்வருமாறு:

செய்திகளில்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "IAS - Women in Science". பார்க்கப்பட்ட நாள் 14 April 2014.
  2. 2.0 2.1 2.2 "IIAP – Profile". Archived from the original on 16 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரய்வால்_சாத்திரி&oldid=3959748" இலிருந்து மீள்விக்கப்பட்டது