பிராங்குவாயிசு கோம்பெசு

பிரெஞ்சு வானியற்பியலாளர்

பிராங்குவாயிசு கோம்பெசு (Françoise Combes) (பிரெஞ்சு உச்சரிப்பு: [fʁɑ̃swaz kɔ̃b] (கேட்க); பிறப்பு: 12 ஆகத்து 1952) ஒரு பாரீசு வான்காணகப் பிரெஞ்சு வானியற்பியலாளரும் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியரும் ஆவார். இங்கு இவர் பால்வெளிகளும் அண்டவியலும் கட்டிலுக்குத் தலைவராக 2014 இல் தேர்வு செய்யப்பட்டார்.[1]

பிராங்குவாயிசு கோம்பெசு
Françoise Combes
பிறப்பு12 ஆகத்து 1952 (1952-08-12) (அகவை 72)
மாந்த்பெல்லியர், பிரான்சு
வாழிடம்பாரீசு
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்பாரீசு வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்மேனிலைப் பள்ளிப் பயிற்சி நிறுவனம் (École Normale Supérieure), பாரீசு திதரோத் பல்கலைக்கழகம்
விருதுகள்CNRS வெள்ளிப் பதக்கம்

மாண்ட்பெல்லியர் வெற்றி நகரப் பள்ளி 2017 செப்டம்பர் 15 இல் இவரது நினைவாக பிராங்குவாயிசு கோம்பெசு உயர்நிலைப் பள்ளி எனப் பெயரிடப்பட்டது.[2]

கல்வி

தொகு

இவர் 1971 முதல் 1975 வரை மேனிலைப் பள்ளிப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். இவர் பாரீசு திதெரோத் பலகலைக்கழகத்தில் இயற்பியலில் முதுவர், முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை பால்வெளிகளின் கட்டமைப்பும் இயக்கவியலும் பற்றியதாகும்.

ஆராய்ச்சி

தொகு

இவரது ஆராய்ச்சி அண்டவியல் சூழலில் பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் ஆகும்.

தகைமைகளும் விருதுகளும்

தொகு
  • 2017: மாண்ட்பெல்லியர் வெற்றி நகரப் பள்ளி இவரது நினைவாக பிராங்குவாயிசு கோம்பெசு உயர்நிலைப் பள்ளி எனப் பெயரிடப்பட்டுள்ளது.[2]
  • 2017: பிரிக்சு ஜூல்சு ஜான்சன் பரிசு, பிரெஞ்சு வானியல் கழகம்.
  • 2017: கோத்தன்பர்கு பல்கலைக்கழக இலைசு மைத்னர் பரிசு[3][4][5]
  • 2017: அமெரிக்க வானியல் ஒன்றியத் தகைமை உறுப்பினர்[6]
  • 2015: பிரெஞ்சு தகைமை ஆணை அலுவலர்[7]
  • 2013: கனடிய வானியல் கழகப் பெட்ரி பரிசு விரிவுரைத் தகைமை[8]
  • 2013: அரசு வானியல் கழகத் தகைமை ஆய்வுறுப்பினர்[9]
  • 2012: மூன்று இயற்பியலாளர்கள் பரிசு, ENS[10]
  • 2009: தேசியத் தகைமை ஆணை அலுவலர்
  • 2009: ஐரோப்பிய கல்விக்கழக உறுப்பினர்[11]
  • 2003: அரசு வானியல் கழகத் தகைமை ஆய்வுறுப்பினர், 2013[12]
  • 2009: ஐரோப்பிய வானியல் கழகத்தின் டைக்கோ பிராகி பரிசு[13]
  • 2006: பிரெஞ்சு தகைமை ஆணை நைட் பட்டம்
  • 2004: பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்[14]
  • 2001: சி என் ஆர் எசு (CNRS) இன் வெள்ளிப் பதக்கம்[15]
  • 1986:ஐபிஎம் ( IBM) இயற்பியல் பரிசு

நூல்தொகை

தொகு

இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்[16] மேலும் பலநூல்களையும் எழுதியுள்ளார். பல கூட்டு முயற்சிப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். அவர்அது ஆங்கில நூல்களில் பின்வருவன அடங்கும்:

மேற்கோள்கள்

தொகு
  1. "Le problème de la matière noire : galaxies spirales". www.college-de-france.fr (in பிரெஞ்சு). 15 September 2014.
  2. 2.0 2.1 "La cité scolaire de la réussite rebaptisée cité scolaire Françoise Combes". www.ac-montpellier.fr. September 2017. Archived from the original on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-03..
  3. "Ceremony and lecture – Gothenburg Lise Meitner Award 2017 | Chalmers". www.chalmers.se (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-08-24.
  4. "An extragalactic award to the star of astrophysics". www.chalmers.se (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
  5. Chalmers Physics (2017-10-06), Gothenburg Lise Meitner Award Lecture 2017 - Françoise Combes, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
  6. "Honorary Members | American Astronomical Society". aas.org (in ஆங்கிலம்).
  7. "Présidence de la République ORDRE NATIONAL DE LA LÉGION D'HONNEUR" (PDF). www.legiondhonneur.fr (in french). 2015-04-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "R.M. Petrie Prize Lecture - CASCA". casca.ca (in அமெரிக்க ஆங்கிலம்).
  9. Smith, Keith. "Winners of the 2013 awards, medals and prizes - full details". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2013-02-09.
  10. [1]Prix des Trois Physiciens பரணிடப்பட்டது 2013-12-15 at the வந்தவழி இயந்திரம்
  11. Academia Europaea
  12. Smith, Keith (7 June 2023). "Winners of the 2013 awards, medals and prizes - full details". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்).
  13. Switzerland, Marc Türler and Mathias Beck, ISDC, Observatory of the University of Geneva. "Tycho Brahe Prize". eas.unige.ch.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  14. [2]Her page in Académie பரணிடப்பட்டது 2015-07-02 at the வந்தவழி இயந்திரம்
  15. CNRS. "CNRS - CNRS silver medals for 2001". www.cnrs.fr (in பிரெஞ்சு).
  16. "Francoise Combes - Google Scholar Citations". scholar.google.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-06.

வெளி இணைப்புகள்

தொகு