பிரான்சுவா எங்கிலேர்

(பிரான்சுவா அங்லேர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரான்சுவா, பேரன் எங்கிலேர் (François, Baron Englert, (பிரெஞ்சு மொழி: [ɑ̃glɛʁ]; பிறப்பு: 6 நவம்பர் 1932) என்பவர் பெல்ஜிய கருத்தியல் இயற்பியலாளர் ஆவார். இவருக்கும் பீட்டர் இக்சிற்கும் இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் பிரசெல்சு திறந்த பல்கலைக்கழகத்தின் (Université libre de Bruxelles) முன்னாள் பேராசிரியர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டின் சாகுராய் பரிசு, 2004ஆம் ஆண்டின் வுல்ஃப் பரிசு முதலிய பல பரிசுகளை வென்றுள்ளார். அண்டவியல், சரக்கோட்பாடு, புள்ளியியல் இயற்பியல் முதலிய பல துறைகளில் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார்.[2] 2013ஆம் ஆண்டின் ஆதூரியா இளவரசர் விருதினை பீட்டர் ஹிக்ஸ் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இவர் பெற்றுள்ளார்.

பிரான்சுவா எங்கிலேர்
பிறப்பு6 நவம்பர் 1932 (1932-11-06) (அகவை 91)
எத்தெர்பீக், பெல்ஜியம்[1]
தேசியம்பெல்ஜியர்
துறைகருத்தியற்பியல்
கல்வி கற்ற இடங்கள்பிரசெல்சு பல்கலைக்கழகம்
விருதுகள்பிராங்கி பரிசு (1982)
இயற்பியலுக்கான ஊல்ஃப் பரிசு (2004)
சக்குராய் பரிசு (2010)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2013)

மேற்கோள்கள் தொகு

  1. "CV at Francquifoundation.be". Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2013-10-08.
  2. "Publication list" (PDF). Archived from the original (PDF) on 2007-07-08. பார்க்கப்பட்ட நாள் 2007-07-08.
விருதுகள்
முன்னர்
செர்கே அரோழ்சி
இயற்பியலுக்கான நோபல் பரிசு
2013
இணைந்து: பீட்டர் ஹிக்ஸ்
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சுவா_எங்கிலேர்&oldid=3850552" இலிருந்து மீள்விக்கப்பட்டது