பிரியங்கா ஜோசி

பிரியங்கா ஜோசி (Priyanka Joshi) ஓர் இந்திய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளி ஆவார். இங்கு இவர் கலோரி கட்டுப்பாடு மற்றும் ஆயுட்காலம் மீதான விளைவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.[1] முன்னதாக, இவர் கேம்பிரிட்ச்சில் உள்ள டவுனிங் கல்லூரியில் எவரிட் பட்டர்ஃபீல்ட் ஆய்வாளராக இருந்தார். இங்கு இவர் ஆல்சைமர் நோயை ஏற்படுத்தும் என்று கருதப்படும் அமிலாய்ட் பீட்டா போன்ற புரதங்களின் ஒருங்கிணைப்பைப் பாதிக்கும் வளர்சிதை மாற்ற முன்னோடி குறித்து தவறான மடிதல் நோய்களுக்கான பல்கலைக்கழக மையத்தில் பணிபுரிந்தார். 2018ஆம் ஆண்டில், இவர் போர்ப்ஸ் " 30 கீழ் 30 " பட்டியலிலும், அறிவியலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலிலும், இங்கிலாந்தின் செல்வாக்கு மிக்க பெண்களின் வோக் 25 பட்டியலிலும் பட்டியலிடப்பட்டார்.[2][3][4]

பிரியங்கா ஜோசி
துறைஉயிர்வேதியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்

இளமையும் கல்வியும் தொகு

ஜோசி 1988-இல் இந்தியாவின் தலைநகர் தில்லியில் பிறந்தார்.[5][6] இவர் தில்லியில் உள்ள மவுண்ட் கார்மல் பள்ளியில் பள்ளிப் படிப்பினை முடித்து சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் முதுநிலை அறிவியல் கல்வி கற்றார். இதன் பின்னர் கேம்பிரிட்ச்சுப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[7][8][9] 2015-இல் கேம்பிரிட்ச்சில் உள்ள கிளேர் அறை மூலம் அறிவியலில் சிறந்த முனைவர் பட்டத்திற்கான சால்ஜே பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.[6]

பணி தொகு

ஜோசி தனது முனைவர் பட்டத்தின் போது, கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தின் தவறான மடிதல் நோய்களுக்கான மையத்தில் மருந்துப் பரிசோதனைத் திட்டத்தின் சிறிய மூலக்கூறுகளின் தொகுப்பினை உருவாக்கினார்.[7]

தனது முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்து, ஜோசி கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் டவுனிங் கல்லூரியின் முதுகலை ஆய்வாளராகத் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.[9] இங்கு இவர் உடலில் உள்ள வளர்சிதை மாற்றங்கள் போன்ற சிறிய மூலக்கூறுகள் மற்றும் மூளையில் புரதச் சேர்க்கையைத் தடுப்பதில் இவற்றின் சாத்தியமான பங்கு குறித்து ஆய்வினைத் தொடர்ந்தார்.[9]

ஜோசி இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களுடன் பொது ஈடுபாட்டுடன் செயல்பட்டார். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஈடுபாட்டில் தொடர்பினை ஏற்படுத்த முன்முயற்சியை உருவாக்க இவர் உதவினார். இதன் காரணமாக மாணவர்களுக்கான அறிவியல் சோதனைகள் குறித்த பட்டறைகளை நடத்தியது.[10]

மேற்கோள்கள் தொகு

  1. "Metabolites: The key to treating Alzheimer's? | Royal Institution". www.rigb.org (in ஆங்கிலம்). 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-02.
  2. Dr Priyanka Joshi, Downing College Cambridge, 2019, archived from the original on 2019-02-16, பார்க்கப்பட்ட நாள் 2019-02-15
  3. Ellie Kincaid (21 January 2018), "From Dinosaurs To Bionic Limbs: The 2018 Europe 30 Under 30 In Science And Healthcare", Forbes
  4. "The Vogue 25: Meet The Women Shaping 2018", Vogue, 31 May 2018
  5. "MOMENTUM – Dr. PRIYANKA JOSHI". Strøm (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 Krishna, Srikanth (2018-06-01). "Who is Priyanka Joshi? Indian-origin biochemist on UK's most influential women list". International Business Times, India Edition (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
  7. 7.0 7.1 "Members of RSB named on Forbes Magazine 30 under 30 list". RSB. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
  8. "Former Pune university alumna makes it to Forbes 30 Under 30 Europe list for science and healthcare". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
  9. 9.0 9.1 9.2 "Dr Priyanka Joshi: First Everitt Butterfield Research Fellow". The Downing College Magazine. 2016. https://www.downingcambridge.com/document.doc?id=98. 
  10. Narayanan, Vivek (2014-11-03). "Experimenting with the fun side of science" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/chen-society/experimenting-with-the-fun-side-of-science/article6558286.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_ஜோசி&oldid=3883145" இலிருந்து மீள்விக்கப்பட்டது