பிரியானி ஜெயசிங்கே

இலங்கைப் பாடகி

பிரியானி ஜெயசிங்க (Priyani Jayasinghe; 10 சூன் 1967 - 8 சூலை 2018) ஓர் இலங்கைப் பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் ஆவார்.[1] இலங்கையில் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவரான[2] இவர் கந்துல நிவண்ணம், சுந்தர கடகட தீ மற்றும் அலுத் சந்தா அவித் உட்பட சிங்கள இசைத்துறையில் பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.[3] இவர், 8 சூலை 2018 அன்று தனது வீட்டில் கொலை செய்யபட்டு இறந்தார்.

பிரியானி ஜெயசிங்கே
ප්‍රියානි ජයසිංහ
தாய்மொழியில் பெயர்ප්‍රියානි ජයසිංහ
பிறப்புபிரியானி ஜெயசிங்கே
(1967-06-10)10 சூன் 1967
பாணந்துறை, இலங்கை
இறப்பு8 சூலை 2018(2018-07-08) (அகவை 51)
கொழும்பு, இலங்கை
கல்விவாலானா மகாநாமா மகா வித்யாலயா, பாணந்துறை
வாழ்க்கைத்
துணை
பிரபாத் ரசிக ஏட்டன்
பிள்ளைகள்2
உறவினர்கள்ரோகன வீரசிங்க (மாமா)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1990–2018

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர், சூன் 1967 10 அன்று இலங்கையின் பாணந்துறை என்ற இடத்தில் பிறந்தார்.[4] இவர் பாணந்துறை வாலானா மகாநாம மகா வித்தியாலாவில் கல்வியை முடித்தார். இவரது மாமா ரோகன வீரசிங்க இலங்கையில் இசையமைப்பாளராக இருக்கிறார்.[5]

இவர் பிரபாத் ரசிகா ஏட்டன் என்பவரை மணந்தார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.[6] இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இவரது மறைவின் போது, இவர் தனது இளைய மகன் லோச்சனா நிமுன், அவரது மனைவி ராஷினி தக்ஷிலா பொன்சேகா மற்றும் அவர்களின் குழந்தையுடன் வசித்து வந்தார். அதே நேரத்தில் இவரது மூத்த மகன் லோஷிதா ஹசாரல் சப்பானில் படித்த்து வந்தார்.[7] இவரது கணவர் பல ஆண்டுகளாக மெத்தை தயாரிக்கும் நிறுவ்னத்தில் பணியாற்றினார்.

இவர் ஒரு பிரபலமான பாடகியாக இந்த துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியிருந்தாலும், தன்னுடைய திறமைக்காகவோ அல்லது அந்த நடவடிக்கைகளுக்காகவோ இவர் கணவனிடமிருந்து எந்த ஆதரவையும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, இவர் இசை நிகழ்ச்சிகளும் பிற கலை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். தனது இரண்டு குழந்தைகளை வளர்த்தார். மேலும், அவர்களின் பொறுப்புகளை தனியாக நிறைவேற்றினார். [8]

பாடும் தொழில்

தொகு

இவர் பள்ளி மேடையில் பிரபலமான நபராக ஆனார். அங்கு இவர் நாடளாவிய அளவில் பாடி விருதுகளை வென்றார். பின்னர் இவர் டிடபிள்யு மெடகொடவின் கீழ் இசை பயின்றார். 1990களின் முற்பகுதியில் இவர் பாடத் தொடங்கினார், அங்கு இவர் எட்வர்ட் ஜெயக்கொடி மற்றும் விஜேசேனா கொடிப்பிலி ஆகியோரால் நடத்தப்பட்ட இசை வகுப்புகளுக்குச் சென்றார். [9] இவர் இலங்கை வானொலியில் நுழைந்து ஏ கிரேடு பாடகி ஆனார். இந்த காலகட்டத்தில், இவர் இசைக்கலைஞர் அசோக கோவிலகேவை சந்தித்தார். கோவிலகே இரண்டு பாடல்களை இயற்றினார்: கந்துல நிவண்ணம், செனஹாச இல்ல லியதம்பரா 1987 இல் அவர் கந்துல நிவண்ணம் பாடலுக்கு பொருத்தமான குரலைத் தேடிக்கொண்டிருந்தார். இறுதியாக, கோவிலகே இவருக்கு அந்தப் பாடலைக் கொடுத்தார். அது மிகவும் பிரபலமானது. மேலும், சிங்கள இசைத் துறையில் இவரது முத்திரையைப் பதித்தது. கச்சேரிகளிலும், விழாக்களிலும் பாடல் பாடியபோது, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு இருந்தது. பொரலஸ்கமுவாவில் நடந்த ஒரு விருந்தில், ஒரு நாளைக்கு மூன்று முறை பாடலைப் பாடும்படி இவரிடம் கேட்கப்பட்டது. [4]

மரணமும் பின்விளைவுகளும்

தொகு

8 சூலை 2018 அன்று, பாணந்துறை காவல் துறையினர் இவரது வீட்டில் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் இவரைக் கண்டனர். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார். [10] இந்த கொலையை இவரது கணவர் பிரபாத் செய்ததாகக் கூறப்படுகிறது. [11] [12] இறுதி சடங்குகள் 12 சூலை 2018 அன்று பாணந்துறை மினுவன்பிட்டிய மயானத்தில் நடைபெற்றது. [13]

மேற்கோள்கள்

தொகு
  1. "Priyani Jayasinghe". Sri Lanka Singers Association (SLASA). Archived from the original on 2020-12-04. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  2. "Music in black, the famous singer is killed". dailyxing. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "කඳුල නිවන්නම් - සිත නොරිදනවා නම්". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  4. 4.0 4.1 "Singer Priyani Jayasinghe murdered". Amarasara. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Dreams of Priyani (television show)". webgossip. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  6. "Priyani Jayasinghe's husband arrested over her murder". Ada Derana. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  7. "'Do something and try to be popular The new generation is in turmoil ' - Veteran Singer Priyani Jayasinghe". Divaina. Archived from the original on 2016-06-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  8. "The life of singer Priyani who ended in tears". Deshaya. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  9. "This song is for sweet hearts - Veteran Singer Priyani Jayasinghe". Divaina. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Husband arrested for stabbing death of popular Sri Lankan singer Priyani Jayasinghe". colombopage. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Female Singer Priyani Jayasinghe hacked to death". Ada Derana. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  12. "Veteran singer Priyani Jayasinghe will be laid to rest on July 12". SLBC News. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  13. "Priyani's funeral will be day after tomorrow". ITN News. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியானி_ஜெயசிங்கே&oldid=3610258" இலிருந்து மீள்விக்கப்பட்டது