பிரியா சகோதரிகள்

பிரியா சகோதரிகள் (Priya Sisters) என்று அழைக்கப்படுபவர்கள் சண்முகப்ரியா மற்றும் அரிப்ரியா ஆகிய கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர்.

பிரியா சகோதரிகள்
பிறப்பிடம்அமலாபுரம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர்கள்

இளமை

தொகு

பிரியா சகோதரிகள் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆந்திராவின் சித்தூரில் உள்ள சிறு மலர் பள்ளியில் பயின்றனர். இவர்கள் சிறு வயதிலேயே தங்கள் தந்தை வி. வி. சுப்பராமிடம் கருநாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். இவர்களின் இசைத் திறமையை வளர்ப்பதற்காக, இவர்களின் தந்தை சென்னைக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் இவர்கள் புகழ்பெற்ற இரட்டையர்களான ராதா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் சீடர்களாக ஆனார்கள்.[1] இராதா மற்றும் ஜெயலட்சுமியின் கீழ் ஐந்து ஆண்டுகள் இவர்கள் இசையின் பல நுணுக்கங்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொண்டனர். இதில் பாடல் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனை உட்படக் கேட்பவர் முழு கிருத்தியையும் குறிப்பிட முடியும் வகையில் பாடவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டனர்.

தொழில்

தொகு

பிரியா சகோதரிகளின் திறமையை மேம்படுத்துவது ஒரு பெரிய திட்டமாகவும், கற்றல், தொடர்ச்சியான செயல்முறையாகவும் இருந்தது. எனவே இவர்கள் பேராசிரியர் டி. ஆர். சுப்பிரமணியனிடம் இசை பயிலச் சேர்ந்தனர். இவரிடமிருந்து பல பல்லவிகளையும், கிருத்திகளையும் இசைக்கக் கற்றுக் கொண்டனர்.

1950களில் ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள் போன்ற கலைஞர்களுடன் தொடங்கி பின்னர் பம்பாய் சகோதரிகளால் தொடர்ந்து பாடப்பட்ட கருநாடக இசையினைப் பாடும் இரட்டையர்களாக இவர்கள் திகழ்ந்தனர்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "We owe it to Radha-Jayalakshmi" இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080409025206/http://www.hindu.com/fr/2008/04/04/stories/2008040451310200.htm. பார்த்த நாள்: 18 May 2010. 
  2. "Sisters in song". The Hindu. 30 January 2010. http://www.thehindu.com/features/friday-review/music/article95639.ece. 
  3. Priya Sisters are conferred with title "Sangeetha Vipanchi" by Sangeetha Bharathi music School, Auckland during their classical music concert "Priya Ragam" held on 10 November 2013 in Auckland, New Zealand

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_சகோதரிகள்&oldid=4108207" இலிருந்து மீள்விக்கப்பட்டது