பிரியா சரோஜ்
பிரியா சரோஜ் (பிறப்பு நவம்பர் 23,1998) ஓர் இந்திய அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார்.[1] இவர் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஆவார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2] இவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆன துபானி சரோஜின் மகள் ஆவார்.[3]
பிரியா சரோஜ் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | பி. பி. சரோஜ் |
தொகுதி | மச்லிசாகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 நவம்பர் 1998 வாரணாசி, உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி |
|
வேலை | அரசியல்வாதி |
இளமையும் கல்வியும்
தொகுபிரியா சரோஜ் நவம்பர் 23,1998 அன்று உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் பிறந்தார்.[4]
பிரியா தனது பள்ளிப்படிப்பை புது தில்லியில் உள்ள விமானப்படை பொற்கொடை நிறுவனத்தில் முடித்தார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று உயர் கல்வியைத் தொடர்ந்தார். நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்று இவரது கல்வி பயணம் தொடர்ந்தது.[5]
அரசியல் வாழ்க்கை
தொகுபிரியா சரோஜ் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மச்லிசாகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] She defeated B.P. Saroj by a margin of 35850 votes.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "25 की उम्र में सांसद बनीं प्रिया सरोज कौन हैं? अखिलेश यादव से है खास कनेक्शन, जानें कितनी है धन-दौलत और क्या करती हैं काम". Jansatta (in இந்தி). 2024-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-06-06.
- ↑ PTI (2024-06-04). "Youngest and oldest winners: SP's Pushpendra and Priya Saroj aged 25, DMK's T R Baalu 82". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Meet Youngest Candidates, All 25, Who Won Lok Sabha Polls To Become MPs". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ Centre, National Informatics. "Digital Sansad". Digital Sansad (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-14.
- ↑ "PushpendraFirst time parliamentarian: Machhalishahr's Priya vows to work for youth, women". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ "Machhlishahr Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Machhlishahr, Uttar Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: Priya Saroj Triumphs by 35850 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Machhlishahr (SC) election results 2024 live updates: BJP's Bholanath vs SP's Priya Saroj". 2024-06-04. https://timesofindia.indiatimes.com/city/lucknow/machhlishahr-sc-election-results-2024-uttar-pradesh-machhlishahr-sc-lok-sabha-elections-poll-result-updates-bholanath-bjp-priya-saroj-sp-kripa-shankar-saroj-bsp/articleshow/110665306.cms.