பிரியா பால்

பிரியா பால் (பிறப்பு 1967), இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரும், இந்தியாவின் ஐந்து நட்சத்திர தரம் கொண்ட விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா நிறுவனமான பார்க் விடுதிகள் மற்றும் பல்வேறு துணை நிறுவனங்களைக்கொண்ட அபீஜய் சுரேந்திரா குழுமத்தின் தலைவருமான சிறந்த பெண் வணிக நிர்வாகியாவார்.[1][2]

கல்வி தொகு

பிரியா பால், 30 ஏப்ரல் 1966 அன்று அபீஜய் சுரேந்திரா குழுமத்தின் தலைவரான சுரேந்திர பாலின் மகளாகப் பிறந்தவர். பள்ளிக்கல்வியை இந்தியாவில் முடித்துள்ள இவர், மேலாண்மை மற்றும் முதுகலை படிப்புகளை மாசச்சூசெட்சில் உள்ள வெல்லஸ்லி கல்லூரி, ஹார்வர்ட் வணிக பயிற்சி பள்ளி மற்றும் ஐரோப்பிய வணிக நிர்வாக கல்வி நிறுவனம் (INSEAD) ஆகியவற்றில் பயின்றுள்ளார்.

குடும்ப வணிகம் தொகு

1988 ஆம் ஆண்டில், அவர் பார்க் விடுதி, புது தில்லியின் சந்தைப்படுத்தல் மேலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து அதன் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் அபீஜய் சுரேந்திரா குழுமத்தின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 1990 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அபீஜய் சுரேந்திர பார்க் ஹோட்டல்களின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.[3]

பிரியா பாலின் குடும்பமே எஃகு வர்த்தகம், உற்பத்தி மற்றும் விற்பனை என வணிகம் சார்ந்ததாகும். கப்பல் வணிகமும் கூட செய்துள்ளனர். இவரது தந்தை சுர்ரேந்திர பால்,  விருந்தோம்பல், தேநீர், சொத்து நிர்வாகம், நிதி, தளவாடங்கள் போன்ற துறைகளிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார், இத்தகைய வணிக பின்னணியைக் கொண்டுள்ள இவர், 2004 ஆம் ஆண்டில் சேது வைத்தியநாதன் என்ற தொழிலதிபரை மணந்துள்ளார்.[4]

விருதுகள் தொகு

  • இந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் கூட்டமைப்பு அந்த ஆண்டின் சிறந்த இளம் தொழில்முனைவோர் என்ற விருதை வழங்கியுள்ளது. (1999–2000)
  • தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையால் ஆண்டின் சிறந்த தொழிலதிபர் விருதுக்கு (2002-2003) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.[5]
  • ஃபோர்ப்ஸ் 2006 ஆம் ஆண்டில் இணையதள பத்திரிகையில் இந்தியாவின் முதல் நூறு சக்திவாய்ந்த வணிகப் பெண்கள் பட்டியலில் சேர்த்துள்ளது
  • 2008 ஆம் ஆண்டில், வணிகப் பிரிவில் ஜீ அஸ்தித்வா என்ற விருதைப் பெற்றுள்ளார்.
  • பார்ச்சூன் இதழ் 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் ஐம்பது சக்திவாய்ந்த தொழிலதிபர்களின் பட்டியலில் அவரை சேர்த்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் இந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் கூட்டமைப்பு இந்தியாவிடமிருந்து "புகழாளர்கள் (ஹால் ஆஃப் ஃபேம்)" விருதைப் பெற்றுள்ளார்.
  • ஜனவரி 2012 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசால் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது.[6]
  • உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கூட்டமைப்பு - இந்தியா முன்முயற்சியின் நிறுவன உறுப்பினராக இருந்துள்ளார் மேலும் 2013 ஆம் ஆண்டு அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை வலுப்படுத்துவதில் அவரின் குறிப்பிடத்தகக பங்களிப்பிற்காக 2014 இல் தேசத்தின் தகுதி வாய்ந்த உறுப்பினர் என்ற முத்திரை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • தெற்காசிய மகளிர் நிதியத்தின் தலைவராக இருந்து வருகிறார்.[7]
  • ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் நிறுவனததின் இந்தியா ஆலோசனைக்குழு உறுப்பினராக உள்ளார் .
  • இந்திய விடுதி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் தலைவராக பணியாற்றியுள்ளார்   

மேற்கோள்கள் தொகு

  1. "The First Lady of boutique". 16–31 March 2006 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120712224745/http://www.expresshospitality.com/20060331/hospitalitylife03.shtml. 
  2. "Priya Paul, the force behind Park Hotels". Rediff Money. 23 July 2005.
  3. Chandran, Rina (18 January 2003). "Innovating constantly...". பிசினஸ் லைன். https://www.thehindubusinessline.com/canvas/2003/01/18/stories/2003011800160400.htm. 
  4. "Luxury hospitality entrepreneur Priya Paul on balancing heritage and innovation". Luxury Mag.
  5. "Priya Paul: Changing the Course of the Hospitality Industry in India". Leverage Edu (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-15. பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
  6. "குடியரசு தினம்: பத்ம விருது பெற்றவர்களில் முத்துராமன், சுப்பையா, பிரியா பால்".
  7. etravelmaildelhi (2018-03-23). "Priya Paul wins Outstanding Contribution Award at AHEAD Asia 2018 | Travel Mail | India's Leading Travel and Tourism Magazine" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_பால்&oldid=3932361" இலிருந்து மீள்விக்கப்பட்டது