பிரீதம் தாசு

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

பிரீதம் தாசு (Pritam Das) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட விளையாட்டு வீரராவார். 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அசாம் மாநில அணிக்காக விளையாடி வருகிறார். [1]

பிரீதம் தாசு
Pritam Das
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரீதம் லாரு தாசு
பிறப்பு16 அக்டோபர் 1988 (1988-10-16) (அகவை 36)
சில்சார், அசாம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–முதல்அசாம் துடுப்பாட்ட அணி
2007–2008இராயல் பெங்கால் டைகர்சு
மூலம்: ESPNcricinfo, 4 அக்டோபர் 2015

தாசு ஒரு வலது கை நடுத்தர பந்து வீச்சாளர் ஆவார், அசாமின் சில்சாரில் இவர் பிறந்தார். 2007 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஒடிசாவுக்கு எதிரான 2006-07 இரஞ்சிக் கோப்பை போட்டியின் போது இவர் முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். [2]

அடுத்த மாதம், ஒரிசாவுக்கு எதிரான விச்சய் அசாரே கோப்பை போட்டியில் பட்டியல் ஏ அணியில் தாசு அறிமுகமானார். ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான இருபது20 போட்டியில் அசாம் அணிக்காக தோன்றினார். அவர் இப்போது செயல்படாத இருபது 20 கூட்டமைப்பு அணியில் இராயல் பெங்கால் டைகர்சு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியாவின் உள்நாட்டு 50 ஓவர் போட்டியான 2012-13 விச்சய் அசாரே கோப்பையில் இவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2019-20 ஆம் ஆண்டிலும், ஒன்பது ஆட்டங்களில் நடைபெற்ற விச்சய் அசாரே கோப்பை போட்டியில் இருபத்தி மூன்று விக்கட்டுகளை வீழ்த்தி முன்னணி விக்கெட் எடுத்தவர் [3] என்ற சிறப்பைப் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pritam Das". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  2. "Odisha v Assam 2006-07". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 October 2019.
  3. "Vijay Hazare Trophy, 2019/20: Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீதம்_தாசு&oldid=3855763" இலிருந்து மீள்விக்கப்பட்டது