பிரீனேவின் பையாஸ்
பையாஸ் (Bias (/ˈbaɪəs/; பண்டைய கிரேக்க மொழி: Βίας ὁ Πριηνεύς; கி.மு. 6ஆம் நூற்றாண்டு) என்பவர் பண்டைய கிரேக்கத்தைச் சேர்ந்த ஞானி ஆவார். இவர் கிரேக்கத்தின் ஏழு ஞானிகளில் ஒருவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். மேலும் இவரது நன்னடத்தைக்காக புகழ் பெற்றார்.
வாழ்க்கை
தொகுபையாஸ் பண்டைய கிரேக்கத்தின் பிரீனே என்ற நகரத்தில் பிறந்தார். இவர் டியூடமஸ் என்பவரின் மகனாவார். [1] இவர் ஒரு வழக்கறிஞராக இவரது திறமைக்காகவும், உரிமைகளைப் பாதுகாக்க தன் திறமையை பயன்படுத்தியதற்காகவும் சிறப்பிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. [2] லெரோஸின் டெமோடோகஸ் பின்வருவதை பொன்மொழியாக குறிப்பிடுடுள்ளார்: "நீங்கள் ஒரு நீதிபதியாக இருந்தால், பையாசி முடிவையே வழங்குங்கள்." மேலும் ஹிப்போனாக்ஸ், "பையாஸ் தான் கொண்ட சார்பை விட காரணங்களை நியாயப்படுத்துவதில் அதிக ஆற்றல் வாய்ந்தவர்" என்று கூறினார். [3]
அவர் எப்போதும் ஏழு ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் அந்த நால்வரில் ஒருவராக டிகேர்கசால் குறிப்பிடப்பட்டவர். இவருக்கு மட்டுமே அந்த பட்டமானது உலகளவில் வழங்கப்பட்டது. அதில் மீதமுள்ள மூன்று பேர் தேலேஸ், பிட்டகஸ், சோலோன் ஆகியோராவர். [4] சட்யூரஸ் இவரை ஏழு அறிஞர்களில் தலைமையாளராக குறிப்பிட்டுள்ளார் [1] மேலும் எசியோடு மற்றும் பித்தாகரசு<[5] போன்ற நபர்களை அவதூறாகப் பேசிய ஹெராக்ளிட்டஸ் கூட, பையாசை "எவரையும் விட அதிகம் கவனிக்கத்தக்கவர்" என்று குறிப்பிட்டார். [6] சிறைபிடிக்கப்பட்ட சில பெண்களுக்காக பையாஸ் மீட்புத் தொகையை செலுத்தினார் என்று கூறும் தொன்மக்கதை இவரது சிறந்த நற்குணத்தின் எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். அவர்களைத் தன் சொந்த மகள்களாகப் படிக்க வைத்த பிறகு, இவர் அவர்களைத் திரும்பவும் அவர்களின் தாயகமான மெசினாவிற்கு அவர்களின் தந்தையரிடம் அனுப்பினார். [1]
பையாஸ் தன் வாடிக்கையாளருக்காக ஒரு வழக்கில் வாதிடும்போது மிகவும் முதிர்ந்த வயதில் இறந்ததாகக் கூறப்படுகிறது. வாதிட்டு முடித்ததும் பேரன் மீது தலை வைத்தார். எதிர் தரப்பின் வழக்கறிஞர் வாதிடுகையில், பையாசின் வாடிக்கையாளருக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், அதற்குள் பையாஸ் இறந்துவிட்டார். [2] நகரம் இவருக்கு ஒரு அற்புதமான இறுதி விரையைக் கொடுத்தது. மேலும் அவரது கல்லறையில் கீழ்கண்டவாறு பொறிக்கப்பட்டது: [7]
படைப்புகள்
தொகுஐயோனியா மற்றும் அதை செழிக்க வைக்கும் விதம் குறித்து 2000 வரிகள் கொண்ட கவிதையை பையாஸ் எழுதியதாக கூறப்படுகிறது. [7]
வாசகங்கள்
தொகுடியோஜெனெஸ் லார்டியஸ் மற்றும் பிறரால் இவரின் பல வாசகங்கள் கூறப்பட்டன:
- "அப்பாவி மனிதர்கள் எளிதில் ஏமாறுவார்கள்."
- "பெரும்பாலான மக்கள் தீயவர்கள்."
- "எல்லா மனிதர்களும் பொல்லாதவர்கள்."
- "துரதிர்ஷ்டத்தை பெருந்தன்மையுடன் தாங்குவது கடினம்."
- "நன்கு யோசித்து ஒன்றை நீங்கள் பின்பற்றுங்கள்; ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகு, அதில் உறுதியுடன் விடாமுயற்சியுடன் இருங்கள்."
- "வேகமாக பேசாதே, அது முட்டாள்தனத்தை காட்டுகிறது."
- "அன்பே விவேகம்."
- "தகுதியற்ற மனிதனை அவனது செல்வத்தின் காரணமாகப் புகழாதே."
- "உங்கள் கருத்தை வற்புறுத்த அதன் மூலம் ஒன்றைப் பெறுங்கள், பலத்தால் அல்ல." / "வற்புறுத்தி கேட்டு எடுத்துக் கொள்ளுங்கள், வலுக்கட்டாயப்படுத்தி அல்ல."
- "ஞானத்தை இளமையிலிருந்து முதுமை வரை பயணிப்பதற்கான ஒரு வழியாகப் போற்றுங்கள், ஏனென்றால் அது மற்ற செல்வங்களை விட நீடித்து இருக்கும்."
- "அதிக வயது வரை வாழ்ந்திருப்பதனாலும் சரி, அல்லது விரைவிலேயே இறந்துபோவதானாலுஞ் சரி, எதற்கும் தயாராயிருக்கும்படியாக, மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்."
- "எனது எல்லா விளைவுகளையும் என்னுடனே எடுத்துச் செல்கிறேன்."
வாத்திகனில் மார்பளவு சிலை
தொகு1819 ஏப்ரலில், ஸ்கோபென்ஹவுர் தனது ரீசெபுக்கில் [பயண நாட்குறிப்பில்] எழுதினார்: "வாத்திக்கானில் [மெய்யிலாளர்கள் மண்டபத்தில்] பையாசின் மார்பளவு சிலை மற்றும் πλεῖστοι ἄνθρωπκαι ἄνθρωποα என்ற கல்வெட்டு உள்ளது." [8]