பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு

(பிரெட்ஷ்னீடரின் வாய்ப்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடிவவியலில் பிரெட்ஷ்ணைடரின் வாய்ப்பாடு (Bretschneider's formula) என்பது ஒரு குவிவு நாற்கரத்தின் பரப்பு காணும் வாய்ப்பாடு.

நாற்கரம் -ABCD.

இந்த வாய்ப்பாட்டின்படி குவிவு நாற்கரத்தின் பரப்பு:[1][2][3]

இங்கு a, b, c, d – நாற்கரத்தின் பக்கங்கள், s -நாற்கரத்தின் அரைச்சுற்றளவு, மற்றும் , -இரண்டும் நாற்கரத்தின் எதிர்க் கோணங்கள். எதிரெதிர்க் கோணங்கள் , -வாகவும் இருக்கலாம். ஏனெனில் நான்கு கோணங்களின் கூட்டுத்தொகை என்பதும் என்பதும் உண்மை.

பிரெட்ஷ்ணைடர் வாய்பாடு, எந்தவொரு நாற்கரத்திற்கும் பொருந்தும். இந்த வாய்பாட்டைப் பயன்படுத்துவதற்கு நாற்கரங்கள் வட்ட நாற்கரங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

1842 -ல், ஜெர்மானிய கணிதவியலாளர் கார்ல் ஆண்டன் பிரெட்ஷ்ணைடர் இந்த வாய்பாட்டைக் கண்டுபிடித்தார். அதே ஆண்டில் மற்றொரு ஜெர்மன் கணிதவியலாளர் கார்ல் ஃவான் ஸ்டாட்டும் இதனைக் கண்டுபிடித்தார்.

நிறுவல்

தொகு

நாற்கரத்தின் பரப்பை K எனக் குறித்தால்:

 
 

வர்க்கம் காண (இருமடியாக்க):

  ------(1)

கொசைன் விதிப்படி:

 

 

 

வர்க்கம் காண (இருமடியாக்க):

 ----------(2)

(1), (2) இரண்டையும் கூட்ட:

 
 
 
 
 

இதனைப் பின்வருமாறு எழுதலாம்:

 

அரைச்சுற்றளவு:

  -ஐப் பயன்படுத்த:
 
 
 
 

இம்மதிப்புகளைப் பிரதியிட:

 
 

வர்க்கமூலம் காண, குவிவு நாற்கரத்தின் பரப்பு காணும் பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு கிடைக்கிறது:

 

தொடர்புள்ள பிற வாய்பாடுகள்

தொகு

முக்கோணத்தின் பரப்பு காணும் ஈரோனின் வாய்பாட்டின் பொதுமைப்படுத்தப்பட்ட வடிவம்தான் வட்ட நாற்கரத்தின் பரப்பு காணும் பிரம்மகுப்தரின் வாய்பாடு. பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டின் பொதுமைப்படுத்தப்பட்ட படிவம்தான் பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. E. A. José García, Two Identities and their Consequences, MATINF, 6 (2020) 5-11. [1]
  2. Coolidge, J. L. (1939). "A Historically Interesting Formula for the Area of a Quadrilateral". The American Mathematical Monthly 46 (6): 345–347. doi:10.2307/2302891. 
  3. Hobson, E. W. (1918). A Treatise on Plane Trigonometry. Cambridge University Press. pp. 204–205.