பிரேமா கரியப்பா

இந்திய அரசியல்வாதி

பிரேமா கரியப்பா (Prema Cariappa) என்பவர் இந்திய அரசியல் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் பெங்களூரின் முன்னாள் மாநகரத் தந்தையும் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் கர்நாடகாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.

பிரேமா கரியப்பா
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை
பதவியில்
2002–2007
தொகுதிகருநாடகம்
மாநகரத் தந்தை பெங்களூரு
பதவியில்
2000–2001
முன்னையவர்பத்மாவதி காங்காதர கவுடா
பின்னவர்பி. ஆர். இரமேசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சவுமியானந்த குசால்பாப்ப பிரேமா

15 சூலை 1951 (1951-07-15) (அகவை 72)
விஜ்ராபேட்டை, குடகு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஐச்செட்டிரா எம். கரியப்பா
பிள்ளைகள்2

குடும்ப வாழ்க்கை தொகு

பிரேமா கரியப்பா விராசுபேட்டையில் ஆகத்து 15, 1951-ல் சோமையாண்டா பி. குசாலப்பா மற்றும் தங்கம்மாவுக்கு மகளாகப் பிறந்தார். இவர் தனது கல்லூரிக் கல்வியை மைசூரில் முடித்தார். இங்கு தெரேசியன் கல்லூரியில் இளங்கலைப் படித்தார். பின்னர் இவர் 13 சூன் 1971-ல் ஐச்செட்டிரா எம். கரியப்பாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1]

பணி தொகு

பெங்களூரு மாநகரத் தந்தை தொகு

1990-91 காலகட்டத்தில், பெங்களூர் மாநகரின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பிரேமா கரியப்பா இருந்தார்.[2] 1991 மற்றும் 2001க்கு இடையில், இவர் பெங்களூர் மாநகரின் கார்ப்பரேட்டராக இருந்தார். 1991-93 ஆண்டுகளில், பெங்களூர் நகரக் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தார். 1996-97ல் பெங்களூர் மாநகர காங்கிரசு கட்சித் தலைவராக ஆனார். 1996-99 ஆண்டுகளில், கர்நாடக பிரதேச காங்கிரசு குழுவின் செயலாளராக இருந்தார்.[1] இவர் முதலில் 1994-95-ல் பெங்களூரின் மாநகர துணைத்தந்தை ஆனார். பின்னர் இவர் 2000-01-ல் பெங்களூரு மாநகரத் தந்தையானார். எனவே இரண்டு பதவிகளையும் வகித்த முதல் பெண்மணி ஆனார்.[2][3]

மாநிலங்களவை உறுப்பினர் தொகு

கரியப்பா ஏப்ரல் 2002-ல் ஆறு வருட காலத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 16 சூன் 2004 அன்று, இவர் மாநிலங்களவையில் காங்கிரசு கட்சியின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டார். 2006 குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, கட்சிகள் முழுவதிலும் உள்ள மற்ற பெண் அரசியல்வாதிகளுடன் இணைந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தினை இவர் வலுவாக ஆதரித்தார்.[4]

தலைவர், மத்திய சமூக நல வாரியம் தொகு

16 சூன் 2008 அன்று, இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.[2][5]

சமூக நலம் தொகு

ஏழைகள், விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் மேம்பாட்டிற்காகவும், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பசுமைப் பாதுகாப்புக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Cariappa, Smt. Prema". Press Information Bureau, Karnataka. Press Information Bureau, Karnataka. Archived from the original on 1 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "Updates (Appointments)". Pratiyogita Darpan 3 (126). August 2008. https://books.google.com/books?id=x-gDAAAAMBAJ&dq=prema+cariappa&pg=PT26. பார்த்த நாள்: 8 September 2014. 
  3. . 6 September 2014. 
  4. "Statements showing the Bills pending". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
  5. "Smt. Prema Cariappa" (PDF). Duwa. Duwa. Archived from the original (PDF) on 8 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமா_கரியப்பா&oldid=3668310" இலிருந்து மீள்விக்கப்பட்டது