பிரேம் மாத்தூர்

பிரேம் மாத்தூர், இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த பெண் விமானியாவார். இந்தியாவின் முதல் பெண் விமானி மற்றும் விமானத்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், 1947 ஆம் ஆண்டில் தனது வணிக விமானி உரிமத்தைப் பெற்றுள்ளார்[1] [2] [3] மேலும் 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற, இந்திய  தேசிய விமானப் பந்தயத்தில் வென்று சாதனை படைத்துள்ளார், [4]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பிரேம் மாத்தூர், 17 ஜனவரி 1910 அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் பிறந்தவர். ஆனால் அவரது தந்தை வேலையின் காரணமாக அலகாபாத்திற்கு மாற்றப்பட்டதால், குடும்பத்துடன் அலகாபாத்திற்கு குடிபெயர்ந்து, அங்குள்ள அன்னி பெசன்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், எவிங் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பையும் முடித்துள்ளார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பினை பயின்றுள்ளார். இல் பிறந்தார்.

தொழில் வாழ்க்கை

தொகு

பிரேமுக்கு, விமானி ஆக வேண்டும் என்ற ஆசையை விதைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் கேப்டன் அடல் ஆவார். விமானசவாரி அழைத்து செல்லும் போது, பிரேமை பயமுறுத்த அவருக்கு தெரிந்த அனைத்து விமான சாகசங்களையும் செய்தும் சிறிதும் பயப்படாமல் அதையெல்லாம் அனுபவித்த பிரேமை, விமானியாக சொன்னதும், அதற்காக லக்னோ பறத்தல் மையத்தில் பேசி, அலகாபாத்தில் மையம் ஆரம்பித்து, பிரேமுக்கு விமானப் பயிற்சி அளித்ததும் அடலே.

அதன்படி தகுந்த விமானப்பயிற்சி பெற்று, வணிக விமானங்களை ஓட்டுவதற்கான விமானி உரிமத்தையும் 1947 ஆம் ஆண்டில், பிரேம் பெற்றுள்ளார். ஆனால் அப்போதிருந்த எந்த ஒரு விமான நிறுவனமும் அவருக்கு வேலை அளிக்காமல் நிராகரித்தது, இறுதியில் 1947 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தில் [5] இவரின் முப்பத்தெட்டாவது வயதிலே தான் துணை விமானியாக சம்பளம் ஏதும் இல்லாமல் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. துணை விமானியாக தனது முதல் விமான பயணத்தை தொடங்கிய பிரேமுக்கு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் லேடி மவுண்ட்பேட்டன் போன்ற உயர்மட்ட நபர்களை விமானத்தில் பறக்கச்செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. [6]

முதன்மை விமானியாக, தேவையான விமான பயண நேரங்களை பூர்த்தி செய்த பிறகும் கூட, பெண் என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு விமானியாகும் வாய்ப்பு அந்த நிறுவனத்தால் கொடுக்கப்படவில்லை. எனவே அங்கிருந்து வெளியேறிய பிரேம், டெல்லிக்கு குடிபெயர்ந்தார், அங்கு ஜிடி பிர்லாவின் தனியார் விமானத்தின் விமானியாக பொறுப்பேற்று, பறந்துள்ளார். அதன் பிறகு அவர் 1953 ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியில் சேர்ந்து, பணிக்காலம் முழுவதுமாக பணிபுரிந்து விமானத்தலைவராக ஓய்வு பெற்றுள்ளார்.

விருதுகள்

தொகு

பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க உறுப்பினர் நாடுகளில் முதலாவதாக பெண் விமானியை பணியில் அமர்த்திய நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு பெற்று தந்த பிரேம், 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய விமானப் பந்தயத்தில் ஒரே ஒரு பெண் விமானியாக கலந்துகொண்டு, பிற ஆண் விமானிகளை வென்று, முதலாவதாக வெற்றி பெற்றுள்ளார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரேம், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா மாத்தூர் என்பவரை மணந்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். பிரேம் தனது எண்பத்திரெண்டாவது வயதில் 22 டிசம்பர் 1992 அன்று வயது முதிர்வின் காரணமாக மரணித்துள்ளார்,[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Kumar, Ganesh (2010). Modern General Knowledge. Upkar Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174821805.
  2. "One hundred years of flying high". 1 November 2011. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-youngworld/article2587819.ece?css=print. 
  3. "Women in the cockpit". 17 Jun 2007 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130426160427/http://articles.timesofindia.indiatimes.com/2007-06-17/special-report/27959326_1_women-pilots-commercial-pilot-woman-pilot. 
  4. "Strong Indian women". 10 December 2012. பார்க்கப்பட்ட நாள் 22 March 2013.
  5. 5.0 5.1 "Prem Mathur, India's Badass First Female Pilot, Was Licensed Back In 1947!". iDiva.com. 2018-03-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  6. "Navrang India: First indian woman commercial pilot - Ms. Prem Mathur". Navrang India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  7. Adil, Yashfeen (2019-09-04). "Captain Prem Mathur: The Woman Who Swore To Fly High | #IndianWomenInHistory". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_மாத்தூர்&oldid=3690768" இலிருந்து மீள்விக்கப்பட்டது