பிரேரண தேஷ்பாண்டே

கதக் நடனக் கலைஞர்

பிரேரணா தேஷ்பாண்டே (Prerana Deshpande) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியர் ஆவார்.[1]

பிரேரண தேஷ்பாண்டே
பிரேரண தேஷ்பாண்டே 1 செப்டம்பர் 2016, at மகாவீரர் பள்ளி அரங்கம், செய்ப்பூர்.
பிரேரண தேஷ்பாண்டே 1 செப்டம்பர் 2016, மகாவீர் பள்ளி அரங்கம், செய்ப்பூர்.
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியன்
கல்விஇந்திய பாரம்பரிய நாட்டிய கலைஞர், கணிதம்
படித்த கல்வி நிறுவனங்கள்புனே பல்கலைக்கழகம்
பணிபாரம்பரிய நாட்டிய கலைஞர், நடன இயக்குநர், ஆய்வு
அமைப்பு(கள்)நின்றித்யதம்
பாணிகதக்
விருதுகள்தேவதாசி தேசிய விருது
(see all)

இவர் ஏழு வயதாக இருந்தபோது ஷரதினி கோலிடம் கதக் கற்கத் தொடங்கினார். இவரது பதினைந்து வயதில் இவரது முதல் நடன ஆற்றுகை நடந்தது. பின்னர் இவர் குரு சிஷ்ய பாரம்பரியத்தில் கீழ் கதக் நடனத்தை லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் கரானாக்களில் ரோகிணி பட்டிடம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் பயின்றார்.[2] இவர் கதக்கில் அழகிய அசைவுகளுக்காகவும், கதக்கின் பல்வேறு அம்சங்களில் தேர்ச்சி பெற்றதற்காகவும், அபிநயம் [3] மற்றும் லயத்துக்கு (ரிதம்) கட்டுப்பட்ட நடனம் போன்றவையாகவும் அறியப்படுகிறார்.[4]

பிரேரண தேஷ்பாண்டே தனது முறைசார் கல்வியை இந்தியாவின் புனே பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக் கலை மையத்தில் ( லலித் கலா கேந்திரா ) பெற்றார். கதக்கில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் இவர் கணிதத்தில் இளங்கலை பட்டத்தையும் முடித்தார். இந்த முறையான கணித அறிவை இவரது நடனத்திற்கும் பயன்படுத்துகிறார்.[5]

தனது கலைப்பணி அர்ப்பணிப்பாக, தேஷ்பாண்டே புனேயில் கதக் நடனத்திற்கான ஒரு கல்வி நிறுவனமாக நிருத்யாதத்தை நிறுவியுள்ளார். அங்கு இவர் இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு நடனத்தைக் கற்பிக்கிறார்.[6][7] மேலும் நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் கலந்துகொள்ள மேம்பட்ட கலைஞர்களைக் கொண்ட நிலையான குழுவைக் கொண்டுள்ளார்.[8]

குடும்பம்

தொகு

பிரபல தபேலா இசைக் கலைஞரான சிறீ சுப்ரீத் தேஷ்பாண்டேவை பிரேரணா திருமணம் புரிந்துள்ளார்.[9][10] இவர்களின் ஒரே மகள் ஈஸ்வரி தேஷ்பாண்டே ஆவார். ஈஸ்வரி தேஷ்பாண்டே இவரது நிருத்யம் கலைப் பள்ளியியின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் ஆவார். ஈஸ்வரி தனது மூன்று வயதில் அதாவது 1999 இல், நடனமாடத் தொடங்கினார், மேலும் அவர் தனது பன்னிரண்டு வயதிலிருந்தே கதக் நடனக் கலைஞராக தனித்து மிளிர்கிறார்.[11]

படைப்புக் கூட்டு முயற்சி

தொகு

பி. டி. பண்டிட்டின் கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்ட மீரா பாயின் வாழ்க்கை மற்றும் பாடல் வரிகள் குறித்து 'மஹரோ பிரணம்' என்ற பெயரிலான படைப்பு கூட்டு முயற்சியில், பிரேமண தேஷ்பாண்டே கதக் நடனத்துக்கு நடன இயக்கம் மேற்கொண்டார்.[7][12]

அஜந்தா மற்றும் எல்லோரா உலக பாரம்பரிய தளத்தால் மன எழுச்சியுற்று 2007 ஆம் ஆண்டில் கதக் - ஒடிசி கூட்டு முயற்சி நிகழ்சியானது பிரபல ஒடிசி நடனக் கலைஞர் சுஜாதா மொகாபத்ரா மற்றும் பிரேரானா தேஷ்பாண்டே ஆகியோரின் கூட்டில் உருவானது. இது அஜந்தா கம்ஸ் அலைவ் - டிரிபூட் டூ அஜந்தா & எல்லோரா என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு 2007 பிப்ரவரி 18 அன்று மகாராட்டிரத்தின் கலாச்சார தலைநகரான புனேயில் அரங்கேற்றப்பட்டது. இது நடன அறிஞர் சுனில் கோத்தாரி அவர்களால் வழங்கப்பட்டது. இந்த கூட்டுழைப்பில் இந்நிகழ்வு பின்னர் நாட்டின் பல்வேறு நகரங்களில் மேடை ஏறியது.[13][14]

2010 ஆம் ஆண்டில், பிரேராணாவும் சுஜாதாவும் தொடர்ந்து நிகழ்வை இணைந்து நிகழ்த்தி வந்தனர்.[15] 2018 ஆம் ஆண்டில், நிருத்யாதத்தின் மொழிபெயர்ப்பாக நிகழ்த்தப்பட்ட தாள -மாலா என்ற உருப்படியானது நடனக் கலைஞரான பி. டி. மோகன்ராவ் கல்லியன் புர்கரின் தாள பணிகளை அடிப்படையாகக் கொண்டது. இதற்காக ரத்திகாந்த் மோகபத்ரா தனது ஒடிசி நிறுவனத்துடன் அழைக்கப்பட்டார்.[16]

விருதுகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Kulkarni, Pranav (24 April 2010). "Step by Step". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  2. Sreeram, Lakshmi (19 July 2018). "Kathak's conundrum: Amid appreciation for outward dazzle, is genuine artistry in danger of being overlooked?". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
  3. Macaulay, Alastair (21 August 2009). "Just Try to Pass by Without Being Stunned". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  4. Dr. Kothari, Sunil (10 September 2009). "New York Diary: Erasing Borders Dance Festival". Narthaki. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  5. "The Mathematics of Rhythm". Asia Society. 5 June 2010. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017.
  6. "Nrityadham". Prerana Deshpande. Archived from the original on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  7. 7.0 7.1 Chaudhuri, Nupur (19 August 2010). "Lessons in faith". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  8. "Shaniwarwada Dance & Music Festival enters in its 16th year". Punekarnews. 27 February 2017. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
  9. "Ishwari Deshpande". Happiness Inc. Archived from the original on 2016-12-22. பார்க்கப்பட்ட நாள் 17 December 2016.
  10. "Supreet Deshpande". Archived from the original on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 15 February 2017.
  11. "Dancers win national kathak awards". The Times of India. 5 January 2009. பார்க்கப்பட்ட நாள் 15 February 2017.
  12. "Mharo Pranam - Concept". Mharo Pranam. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  13. "Indian classical music and dance is being increased globally accepted package that believes in fusion". Pune Newsline. 9 July 2008. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  14. "News at Lokmat". Lokmat. 26 November 2007. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  15. Srikanth, Rupa (29 January 2010). "Statuesque postures". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  16. "An evening dedicated to Kathak and Odissi with the dancers of Nrityadhaam Pune". Times of India. 2 February 2018. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.
  17. "Prerana Deshpande gets Devadasi National Award". The Indian Express. 21 December 2016. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
  18. "Prerana Deshpande Kathak Dancer Profile". ThiRaseela. Archived from the original on 26 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
  19. "Prerana Deshpande". Prerana Deshpande. Archived from the original on 2017-01-06. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  20. "ICMC: India Dance Festival" (PDF). FunAsia. Archived from the original (PDF) on 6 January 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேரண_தேஷ்பாண்டே&oldid=4165746" இலிருந்து மீள்விக்கப்பட்டது