பிரேவ் ஹார்ட் (திரைப்படம்)

| 995ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம்

பிரேவ் ஹார்ட் (Braveheart) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் ஆங்கிலத் திரைப்படமாகும். பிரபல ஹாலிவுட் நடிகரான மெல் கிப்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

பிரேவ் ஹார்ட்
இயக்கம்மெல் கிப்சன்
தயாரிப்புமெல் கிப்சன்
அலன் லாட், ஜூனியர்.
புரூஷ் டாவே
ஸ்டீபன் மகெவீட்டி
கதைராண்டால் வாலஸ்
இசைஜேம்ஸ் ஹார்னெர்
நடிப்புமெல் கிப்சன்
சோபி மார்கேயு
பாட்ரிக் மக்கூஹன்
அங்காஸ் மக்பெய்டன்
பிரண்டன் க்லீசன்
ஒளிப்பதிவுஜான் டோல்
படத்தொகுப்புஸ்டீவன் ரோசென்வுலும்
விநியோகம்-அமெரிக்கா-
பாராமௌண்ட் பிக்சர்ஸ்
-வெளி நாடுகள்-
20த் செஞ்சரி ஃவோக்ஸ்
வெளியீடுமே 24, 1995 (1995-05-24)
ஓட்டம்177 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$53,000,000

வரலாற்றுப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ரோபேர்ட் புரூஸ் தனது மகனுக்கு "மகனே வாலஸ் உலக வரலாறுகள் எழுதப்பட்டது ஆங்கிலேயர்களால் அவர்கள் என்னைப் பொய் கூறுபவனாக எழுத முடியும். ஆனால் அவர்கள் எழுதும் வரலாறு எனப்படுவது உரிமைக்காகப் போர் புரிபவர்களின் உயிரைப் பறித்த பின்னர் எழுதப்படுவது ஆகும்" என்ற வசனத்தின் மூலம் தாங்கள் அன்னியர்களுக்கு எதிராகச் செய்யும் உரிமைப் போரினை விளக்குகின்றார். இதனைக் கேட்ட சிறுவயதான வாலாஸ் மனதில் வாங்கிக் கொள்கின்றான். ஸ்காட்லாந்து நாட்டவரானவர்களின் உரிமைகளைப் பறித்து பின்னர் அவர்களின் சொந்த மண்ணைப் பிடிப்பதற்காக படை திரட்டி வருகின்றான் ஆங்கிலேய சக்கரவர்த்தியான எட்வார்ட் முதலாம் மன்னன். இதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக வெடிக்கின்றது மக்கள் புரட்சிப் படைகள். ஆங்கிலேயருக்கு எதிராகப் படைகள் பல திரட்டப்பட்டன. இப்போரே ஸ்கோட்லாந்து சுதந்திரப் போரின் ஆரம்ப காலகட்டமாகும். 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டின் இடையே நடைபெற்ற இப்போரானது ஆங்கிலேய அரசுக்கும் ஸ்காட்லாந்து மக்களாலும் போராட்ட வீரர்களாலும் புரியப்பட்டது. இப்போர் நிறைந்த சூழலில் வளர்ந்து வரும் வில்லியம் வேலசு அங்கு ஒரு பெண்ணைக் காதல் செய்து மணம் செய்து கொள்கின்றான். திருமணம் ஆகிய மறுநாளே காதலி ஆங்கிலேயப் பாகனால் கொள்ளப்படவே கோபம் கொள்ளும் வாலாஸ் அப்படை வீரர்களை அவ்விடத்திலேயே கொலை செய்கின்றான். பின்னர் பெரும் படை திரட்டி ஆங்கிலேய அரசாங்கத்தையே எதிர்த்துப் போரிட்டான். பின்னர் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டு மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறான்.

விருதுகள்

தொகு

1995 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப்புகள்:

வென்ற விருதுகள்:

பரிந்துரைக்கப்பட்டவை:

வசூல்

தொகு

உலகின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் 271 இடத்தில் உள்ளது பிரேவ் ஹார்ட் திரைப்படம்.

  • அமெரிக்காவில்: $75,609,945 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
  • உலகளவில்: $210,409,945 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

வெளியிடப்பட்ட ஒரு வார இறுதியில் பெற்ற வசூல்:

அமெரிக்கா: $9,938,276 மில்லியன் அமெரிக்க டாலர்கள்