பிரோஜ்பூர் மாவட்டம்

வங்காளதேசத்தின் பரிசால் கோட்டத்திலுள்ள மாவட்டம்


பிரோஜ்பூர் மாவட்டம், (Pirojpur District) (வங்காள மொழி: পিরোজপুর) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. வங்கதேசத்தின் அறுபத்தி நான்கு மாவடடங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பரிசால் கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரோஜ்பூர் நகரம் ஆகும்.[1] [1]இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக சுந்தரவனக்காடுகள் உள்ளது.

வங்காளதேசத்தில் பிரோஜ்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

மக்கள் தொகையியல்

தொகு

1307.61 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 1,113,257 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 548,228 ஆகவும், பெண்கள் 565,029 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் இசுலாமியரக்ள் 495,050 ஆகவும், இந்துக்கள் 85,393 ஆகவும், கிறித்தவர்கள் 19,757 ஆகவும், பௌத்தர்கள் 100,499 ஆகவும், பிறர் 9,449 ஆக உள்ளனர். வேளாண் தொழிலார்கள் 150,283 ஆகவும், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள 29,091 ஆகவும், சேவைத் துறையில் 113,676 பேரும் உள்ளனர்.[2]

மாவட்ட எல்லைகள்

தொகு

பிரோஜ்பூர் மாவட்டத்தின் வடக்கில் கோபால்கஞ்ச் மாவட்டமும், தெற்கில் பர்குனா மாவட்டமும், கிழக்கில் ஜாலோகதி மற்றும் பர்குனா மாவட்டங்களும், மேற்கில் பேகெர்ஹத் மாவட்டமும், சுந்தரவனக் காடுகளும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

பிரோஜ்பூர் மாவட்டம் ஏழு துணை மாவட்டங்களும், நான்கு நகராட்சி மன்றங்களும், 51 ஊராட்சி ஒன்றியங்களும், 648 கிராமங்களும் கொண்டது.

ஆறுகள்

தொகு

இம்மாவட்டத்தில் தாமோதர் ஆறு, பலேஷ்வர் ஆறு, கோச்சா ஆறு, பொனா ஆறு, கொச்சகாளி ஆறு, காளிகங்கா ஆறு மற்றும் சாந்தா ஆறு பாய்கிறது.

போக்குவரத்து

தொகு

இம்மாவட்டத்தின் ஹுலர் ஹத் எனுமிடத்தில் உள்ள காளிகங்கா ஆற்றின் படித்துறையிலிருந்து டாக்கா வரை பயணிக்க இயந்திரப் படகுகள் உள்ளது. மேலும் நாட்டின் பிற இடங்களுக்குப் பயணிக்க பேருந்துகள் உள்ளது.

பொருளாதாரம்

தொகு
 
மிதவைச் சந்தை, குரியானா, பிரோஜ்பூர்

இம்மாவட்டம் வேளாண்மை மூலம் 50.82%, வேளாண்மை அல்லாத தொழில் மூலம் 5.75%, வணிகம் மூலம் 18.71%, போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்பு மூலம் 2.16%, சேவைத்துறைகள் மூலம் 7.69%, கட்டுமானப் பணிகள் மூலம் 1.36%, சமயச் சேவைகள் மூலம் 1.61%, பிற வகைகளில் 11.05% வருவாய் ஈட்டுகிறது.

வேளாண்மை

தொகு

இம்மாவட்டத்தில் நெல், சணல், கரும்பு, கோதுமை, வாழை, தென்னை, வெற்றிலை மற்றும் பாக்கு வேளாண்மை சிறப்பாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pirojpur District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 Nupu, Ranjan Baksi (2012). "Pirojpur District". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. PIROJPUR (District (Zila))
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோஜ்பூர்_மாவட்டம்&oldid=2174041" இலிருந்து மீள்விக்கப்பட்டது