பிற்படுத்தப்பட்டோர்
பிற்படுத்தப்பட்டோர் , அநீதியான சமூக ஏற்றத் தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் வரலாற்று ரீதியாகப் பின்னடைந்த மக்கள் குழுக்களையே பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்கிறோம். தலித் என்று அழைக்கப்படும் பட்டியல் சமூக மக்களை விட பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமை சிறிது மேம்பட்டதாக இருந்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப் போலவே பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சார்ந்தவர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாவார்கள். எடுத்துக்காட்டாக, 19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொத்தடிமைப் பண்ணையாட்களாக உழன்ற பொழுது பிற்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் குத்தகை விவசாயிகளாகப் பணி புரிந்தனர்.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு
தொகுபிற்படுத்தப்பட்டோர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய, தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5%ம், இசுலாலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5%ம், சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு 20%ம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.[1]
இந்திய அரசின் இடஒதுக்கீடு
தொகுஇந்திய அரசு மற்றும் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவன வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-09-25. Retrieved 2015-08-26.
வெளி இணைப்புகள்
தொகு- 1921-இல் நீதிக்கட்சி அறிவித்த இடஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 1 (தமிழில்)
- தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 2 (தமிழில்)
- தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 3 (தமிழில்)
- தமிழகத்தின் இட ஒதுக்கீடு முறை - காணொலி (தமிழில்)
- தமிழகத்தில் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதை - காணொலி (தமிழில்)