பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (Economically Weaker Section (EWS) அல்லது பொருளாதரத்தில் பின்தங்கிய பிரிவினர் (Economically Backward Classes (EBC) என்பது இந்திய அரசின் கல்வி நிலையங்கள் (மதம் மற்றும் மொழி வாரி சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் தவிர) மற்றும் இந்திய அரசின் வேலைவாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு அற்ற பொதுப் பிரிவினராக முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களை மட்டுமே குறிக்கும். இந்திய அரசு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குகிறது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க 2019-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 103-வது திருத்தம் மேற்கொண்டது.[1]பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு 14 சனவரி 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. மாநில அரசுகள் விரும்பினால் இச்சட்டப்படி பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% மிகாமல் இடஒதுக்கீடு வழங்கலாம்.

தகுதிகள்

தொகு
  • பொதுப் பிரிவினரில் உள்ள முன்னேறிய வகுப்பு மாணவரின்/இளைஞரின் குடும்ப ஆண்டு வருமானம் 8 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற சான்றிதழை வருவாய்த் துறை அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும்.[2] [3][4][5][6]
  • சொந்தமாக வேளாண்மை நிலம் வைத்திருந்தால் 5 ஏக்கர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.[7]
  • குடியிருப்பு கட்டிடம் எனில் 1000 சதுர அடிக்கு மேல் இருத்தல் கூடாது. [8]
  • நகராட்சி பகுதி எனில் குடியிருப்பு கட்டிடம் 100 சதுர அடிக்கு மேல் இருத்தல் கூடாது.[6]
  • அறிவிக்கப்படாத நகராட்சிப் பகுதி எனில் குடியிருப்பு கட்டிடம் 200 சதுர அடிக்கு மேல் இருத்தல் கூடாது.[6]

வரலாறு

தொகு

இந்தியக் குடியரசின் அமைச்சரவை 7 சனவரி 2019 அன்று பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் வழங்கியது.[9]மேலும் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதால், தற்போது நடைமுறையில் உள்ள பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்களுக்கு வழங்கபடும் 50% இடஒதுக்கீட்டை விட கூடுதலாக இருக்கும் என்று அமைச்சரவை அறிவித்தது.[10] பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக, இந்திய அரசியலமைப்பில் 124-வது திருத்தம் மேற்கொளவதற்கு, 8 சனவரி 2019 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முன்மொழியப்பட்ட சட்ட திருத்த மசோதா பெரும்பான்மை வாக்குகளுடன் ஏற்கப்பட்டது. மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 9 சனவரி 2021 அன்று ஏற்கப்பட்டது. 12 சனவரி 2021 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இச்சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கினார். 14 சனவரி 2021 அன்று இச்சட்டத் திருத்ததை இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டதால், சட்டத் தகுதி பெற்றது. 124-வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவரங்கள் இந்திய அரசியலமைப்பின் சட்டம் 15(6) மற்றும் 16 (6) பிரிவுகளில் சேர்க்கப்பட்டதால், இடஒதுக்கீடு அற்ற பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு பெறத் தகுதி ஏற்பட்டது.

இடஒதுக்கீடு 50% மிகாமல் இருத்தல் வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, 10 சனவரி 2019 அன்று சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் 10 சனவரி 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.[11][11] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக் குழுக்களின் தலைவர்களும் உச்சநீதிமன்றத்தை அணுகி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை முற்றிலுமாக எதிர்த்தனர்; பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் 10% இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், முந்தைய வழக்கில் உச்ச நீதிமன்றம் வரையறுத்த 50% இட ஒதுக்கீடு வரம்பு அளவுகோலை இந்திய அரசு மீறியுள்ளது என வாதிட்டனர். .[12]

25 சனவரி 2019 அன்று உச்ச நீதிமன்றம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு தடை வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.[13]இவ்வழக்குகளை விசாரிக்க 6 ஆகஸ்டு 2020 அன்று 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் நிறுவியது.[14]

==விளக்கம் == ங் இடஒதுக்கீடு அற்ற பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசு இந்திய அரசியலமைப்பில் (124-வது) திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (EWS) மற்றும் பொருளாதராத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) ஆகிய இரண்டின் பொருள் குறித்து இந்தியாவில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (EWS) யார் என்பது குறித்து இந்திய அரசு விளக்கியுள்ளது. ஆனால் யார் பொருளாதராத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MEBC) என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே விளக்குகின்றனர். இந்தியாவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் குறித்தான மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாத நிலையில், இந்திய அரசு 10% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்பதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி முற்றிலும் ஆண்டு குடும்ப வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமல்லாமல், வைத்திருக்கும் சொத்தின் அடிப்படையிலும் உள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான கல்லூரிகளில் சேருவதற்கும், இந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்புகளுக்கும் இந்திய அரசே வருமான வரம்பை நிர்ணயித்துள்ளது. பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான தகுதிக்கான அளவுகோல்களை மாற்றுவதற்கும், இப்பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரும் நபர்களின் வருமான வரம்பை மேலும் விரிவாக்குவதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது, இது அரசுக்கு சொந்தமான கல்லூரிகளிலும், மாநில அரசின் வேலைகளிலும் மட்டுமே அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றதாக கருதப்படும்.

1 பிப்ரவரி 2019 முதல் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும்[15] இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக தமிழ்நாட்டின் சில அரசியல் கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. One Hundred and Third Amendment of the Constitution of India
  2. "10% reservation for economically weak in general category comes into force - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  3. "Education of the Economically Backward Class". Pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.
  4. "Maharashtra government raises EBC limit to Rs 1 lakh with a rider". தி எகனாமிக் டைம்ஸ். 14 October 2016. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/maharashtra-government-raises-ebc-limit-to-rs-6-lakh-with-a-rider/articleshow/54840497.cms. 
  5. "dopt.gov.in" (PDF).
  6. 6.0 6.1 6.2 "In-depth: Who is eligible for the new reservation quota for general category?". businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  7. Desk, India com News (2019-01-22). "10% Quota For Economically Weaker Upper Castes in Govt Jobs to Implemented From Feb 1". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  8. https://dopt.gov.in/sites/default/files/ewsf28fT.PDF
  9. "Union Cabinet approves 10% reservation for economically weak among upper caste - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2019.
  10. "Plea in SC challenges 10% quota to poor in general category". 22 January 2019. பார்க்கப்பட்ட நாள் 25 January 2019 – via The Economic Times.
  11. 11.0 11.1 "Bill for 10 pc reservation for poor in general category challenged in SC". Business Standard India. Press Trust of India. 2019-01-10. https://www.business-standard.com/article/pti-stories/bill-for-10-pc-reservation-for-poor-in-general-category-challenged-in-sc-119011001028_1.html. 
  12. "Backward Classes leaders to knock Supreme Court door over quota - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-25.
  13. "SC refuses to stay 10% EWS quota". The Indian Express (in Indian English). 2019-01-25. பார்க்கப்பட்ட நாள் 2019-01-25.
  14. "EWS - Plain English of Referral Order". Supreme Court Observer. Legal Observer Trust. 2020-08-06. Archived from the original on 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
  15. "10% reservation for economically weak in general category comes into force - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.

வெளி இணைப்புகள்

தொகு