பிலத் பாசுவான் விகங்கம்

இந்திய அரசியல்வாதி

பிலத் பாசுவான் விகங்கம் (Bilat Paswan Vihangam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் எழுத்தாளருமாவார். விகங்கம் என்ற புனைப்பெயரில் பிலத் பாசுவான் எழுதி வந்தார். இந்தி மற்றும் மைதிலி மொழிகளில் எழுதி இலக்கியங்களில் இவரது எழுத்துக்களுக்காக பெயர் பெற்றார். [1] பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்தார். பீகார் பல்கலைக்கழக வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். 1940 ஆம் ஆண்டில் பீகாரில் பூதாய் பாசுவானுக்கு மகனாக இவர் பிறந்தார், [2] 1968 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை பீகார் சட்டமன்றத்தில் இராச்நகர் சட்டமன்றத் தொகுதி , 1985 ஆம் ஆண்டிலும் 1990 ஆம் ஆண்டிலும் பீகார் சட்டமன்றத்தில் கச்சவுலி சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் போட்டியிட்டு இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். [3] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்புமனுவின் கீழ் போட்டியிட்டு, இரண்டு தேர்தல்களிலும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் இராம் லக்கன் ராமை தோற்கடித்தார். [4] 1980 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார் [5] 2005 ஆம் ஆண்டில், இலக்கியத்திற்கான பங்களிப்புகளுக்காக இந்திய அரசு இவருக்கு நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [6]

பிலத் பாசுவான் விகங்கம்
Bilat Paswan Vihangam
பிறப்பு1940
மதுபாணி, பீகார், இந்தியா
இறப்பு(2017-10-05)அக்டோபர் 5, 2017
பட்னா
பணிஎழுத்தாளர்
அரசியல்வாதி
அறியப்படுவதுஇந்தி & மைதிலி மொழி இலக்கியம்
பெற்றோர்மறைந்த பூடாய் பாசுவான்
வாழ்க்கைத்
துணை
மறைந்த புல்குன் தேவி
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள் தொகு

  1. Badri Narayan Tiwari (2011). "Folklore of Reshma and Chuharmal". Muse India (38). http://www.museindia.com/viewarticle.asp?myr=2011&issid=38&id=2726. பார்த்த நாள்: 23 August 2016. 
  2. "Dr. Bilat Paswan Vihangam vs The State Of Bihar & Ors". India Kanoon. 2015. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  3. "List of Winning MLA's from Khajauli Till Date". Maps of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  4. "Previous Year's Election Results in Khajauli, Bihar". Trace All. 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  5. "Bihar Assembly Election 2000". Empowering India. 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.

புற இணைப்புகள் தொகு

 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலத்_பாசுவான்_விகங்கம்&oldid=3831790" இலிருந்து மீள்விக்கப்பட்டது